மேடையில் நிலா கொடுத்த செருப்படியால் வாயடைத்து போன மனோகர் - பரபரப்பில் அய்யனார் துணை

மேடையில் நிலா கொடுத்த செருப்படியால் வாயடைத்து போன மனோகர்

By subhashini · 25/6/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் வேலை ஆட்களைப் போலவே தேன்மொழி சோழன் குடும்பத்தை நடத்துகிறார். அதோடு அவர்கள் எல்லாம் பின்பக்கம் உள்ள பாத்ரூமில் பயன்படுத்த சொன்னார். சேரன் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். பின் அவர்களுக்கு ஒரு டீ கூட போட்டுக் கொடுக்காமல் தேன்மொழி இருந்தார். இதை எல்லாம் கவனித்த நிலா, தன்னுடைய அம்மாவிடம் சண்டை போட்டார். சோழன் குடும்பத்திற்கு தேவையான ஏற்பாடுகளும் நிலாவே செய்தார். இதை கவனித்த நிலாவின் அம்மாவிற்கு கோபம் தான் வருகிறது.

நிலா, சேரன் குடும்பம் தங்குவதற்கு ஒரு ரூம் ஏற்பாடு செய்து தந்தார். அதற்குப் பின் தன்னுடைய அப்பா, அம்மாவை சந்தித்து நிலா, இப்படி எல்லாம் நடந்து கொள்ளாதீர்கள். இந்த பிரச்சனை எல்லாம் வரும் தெரிந்து தான் இந்த ஃபங்ஷனை வேண்டாம் என்று சொன்னேன் என கொந்தளித்தார். மனோகர், அதெல்லாம் ஒன்றும் இல்லை என்று சமாளித்தார். பின் எல்லோருமே தயாராகி மண்டபத்திற்கு சென்றார்கள். மனோகர் தன்னுடைய வசதியான பந்தாவை எல்லோரும் முன்பும் காண்பித்தார். நிலாவிற்கு அது பிடிக்கவே இல்லை. இருந்தாலும் நிலா, பிரச்சனை வேண்டாம் என்று அமைதியாக இருந்தார்.

அய்யனார் துணை:

பின் நிலா, சேரன் குடும்பத்திற்காக ஒரு ரூமை ஏற்பாடு செய்து தரச் சொன்னார். அதற்கு பின் நிலா பங்ஷனுக்கு ரெடியாக சென்றார். மனோகர் இது தான் சந்தர்ப்பம் என்று சோழன் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரையும் வேலை வாங்க திட்டம் போட்டார். முதலில் பாண்டியன், பல்லவன் இருவரையும் சேர்களை அடுக்கி வைக்க சொன்னார். சேரனை சமையல் செய்ய சொல்கிறார். பின் வந்திருக்கும் உறவினர்கள் எல்லாம் ஜூஸ் கொடுக்க சொன்னார். சோழன் குடும்பத்தையே ரொம்ப அவமரியாதையாக மனோகர் நடத்திக் கொண்டிருந்தார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மனோகர், அய்யனார் குடும்பத்தில் யாரையுமே மேடை ஏறவிடாமல் தடுத்து தன்னுடைய உறவினர்களை மட்டுமே போட்டோ எடுக்க வைக்கிறார். ஒரு வேலைக்காரர்கள் போல சோழனுடைய குடும்பத்தை நடத்துகிறார். இதையெல்லாம் பார்த்து சோழனுக்கு கஷ்டமாக இருக்கிறது. இதை புரிந்து கொண்ட நிலா, சோழனுடைய குடும்பத்தை மேடைக்கு அழைத்து அவர்களுடன் சேர்ந்து போட்டோ எடுத்துக் கொள்கிறார். அப்போது மனோகர், வசதியே இல்லாதவர்கள் தான் சோழன் குடும்பம். என் மகளின் சந்தோஷத்திற்காக தான் நான் ஏற்றுக்கொண்டேன்.

சீரியல் ட்ராக்:

எங்களுடைய வசதிக்கேற்றவாறு நான் நல்ல மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்திருப்பேன் என்று ரொம்ப ஏளனமாக சோழன் குடும்பத்தை பேசுகிறார். இதனால் கொந்தளித்த நிலா, என் அப்பா - அம்மா இருவருமே என்னுடைய ஆசையை நிறைவேற்றியது கிடையாது. சின்ன சின்ன விஷயத்தில் கூட அவர்கள் என்னை புரிந்து கொள்ளவில்லை. எனக்கு விருப்பம் இல்லாத ஒரு கல்யாணத்தை ஏற்பாடு செய்தார்கள். அதற்கு பிறகுதான் நான் சோழனை சந்தித்து திருமணம் செய்து கொண்டேன். சோழன் குடும்பத்தில் எனக்காக எல்லா விஷயத்தையும் செய்கிறார்கள். நான் ரொம்ப சந்தோசமாகவும் சுதந்திரமாகவும் என்னுடைய சொந்த காலில் நிற்பதற்கு சோழன் குடும்பம் தான் காரணம் என்று ரொம்ப பெருமையாக பேசுகிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full