சொந்தமாக தொழில் தொடங்க நிலா ஒத்து கொண்டாரா? தோழி சொன்ன விஷயம் - பரபரப்பில் அய்யனார் துணை

By subhashini · 14/3/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சோழன், நான் வானதியிடம் பேசிக் கொள்கிறேன். நீ கவலைப்படாதே என்று சொல்லிவிட்டு வானதியை அழைத்துக்கொண்டு சென்றார். அப்போது வானதி, நான் ஸ்டாப்பாக பேசி கொண்டே வந்தார். சோழனால் பதில் சொல்ல முடியவில்லை. ஒரு கட்டத்தில் சோழன் டென்ஷன் ஆனார். இன்னொரு பக்கம் பல்லவன் ரொம்பவே வருத்தமாக இருந்தார். அப்போது நிலா, அவருக்கு தைரியப்படுத்தி ஆறுதல் சொன்னார். அதோடு காயத்ரியின் நிலைமையை பற்றியும் விசாரித்தார். அப்போது பல்லவன், நான் காயத்ரியை காதலிக்கிறேன் என்று உண்மையை சொன்னார்.

சோழன், வானதியை மீண்டும் பாண்டியன் கடைக்கு அழைத்து வந்தார். அப்போது சோழன், இவளுடன் பேசினால் பைத்தியம் தான் பிடிக்கும். உன்னைப் பற்றி எவ்வளவு பெருமையாக சொன்னாலும் அதில் குறை கண்டுபிடித்துக்கொண்டே இருக்கிறாள். இவளுடன் வாழ்வதெல்லாம் பெரிய கஷ்டமான விஷயம் என்றெல்லாம் சொன்னார். இதனால் வானதிக்கு பயங்கர கோபம் வருகிறது. பின் சோழனால் வானதி, பாண்டியன் இடையே சண்டை ஏற்பட்டது. சோழன், இதுதான் சந்தர்ப்பம் அவளை விட்டுவிடு என்றார். பாண்டியனால் எந்த முடிவும் எடுக்க முடியாமல் தவித்து நிற்கிறார்.

அய்யனார் துணை:

அதற்குப்பின் நடேசன், சேரன், சோழன் மூவருமே பேங்கில் பணம் கேட்பதற்காக சென்றிருந்தார்கள். அங்கு வீட்டு பத்திரம் சரியாக இல்லாததால் பணம் தர முடியாது என்றார்கள். வீட்டிற்கு வந்த சேரன் பேங்கில் நடந்ததை எல்லாம் நிலாவிடம் சொன்னார். நிலா, நான் வேலையை தேடிக் கொள்கிறேன். தயவு செய்து பத்திரத்தை எல்லாம் வைக்க வேண்டாம் என்றெல்லாம் சொன்னார். பாண்டியன், எனக்கு தெரிந்த இடத்தில் பணம் கேட்டிருக்கிறேன் என்றார். சோழன்-சேரன் இருவருமே தங்களால் முடிந்த பணத்தை ஏற்பாடு செய்து தருகிறோம் என்றார்கள்

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோடில் வீட்டில் உள்ள எல்லோரிடமும் பல்லவன் மீண்டும் மீண்டும் மன்னிப்பு கேட்கிறார். ஆனால், யாருமே பேசவில்லை. பின் பல்லவன், நடேசன் இடம் பேச போகிறார். நடேசன் பல்லவனை மன்னித்து அவரிடம் தன்னுடைய காதல் கதையை சொல்கிறார். அதற்குப்பின் வானதியிடம் சோழன் பேசிய விஷயத்தை எல்லாம் பாண்டியன் சொல்கிறார். நிலா, உங்களால் பாண்டியனுக்கும் வானதிலும் பிரச்சனை வந்திருக்கும். இப்படி எல்லாம் செய்யாதீர்கள் என்று சோழனை திட்டுகிறார்.

சீரியல் ட்ராக்:

பின் பாண்டியனிடம் நிலா, நீங்கள் வானதியை அழைத்துக் கொண்டு நேரத்தை செலவிடுங்கள் என்றெல்லாம் சொல்கிறார். அதற்குப்பின் நிலாவின் தோழி, ஸ்டார்ட் அப் விஷயம் பேச வந்தேன். நீ எந்த பணத்தையும் கொடுக்க தேவையில்லை. உன்னால் முடியும் போது கொடு. நாங்கள் இருவரும் பணத்தை போட்டு தொழில் தொடங்கலாம். மூன்று பேருமே அந்த கம்பெனிக்கு ஓனர் என்று சொல்கிறார். நிலா தயங்குகிறார். சோழன், சேரன் இருவரும் சந்தோஷப்படுகிறார்கள். நிலா, எல்லோரும் கட்டாயப்படுத்தியதால் ஒத்துக் கொள்கிறார். அதற்குப்பின் கடையில் பாண்டியன், வானதிக்காக காத்து கொண்டு இருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full