சேரன் வாழ்க்கைக்காக நிலா எடுத்த அதிரடி முடிவு, சோகத்தில் பாண்டியன் - விறுவிறுப்பில் அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் வானதி, பாண்டியனுக்கு போன் செய்தார். ஆனால் போன் சுவிட்ச் ஆப்பில் இருக்கிறது. வானதிக்குமே ஒன்றுமே புரியவில்லை. இன்னொரு பக்கம் பாண்டியன், வானதி பேசியதை எல்லாம் நினைத்துப் பார்த்தார். பின் இன்னொரு பக்கம் சோழன், பாண்டியன் தேடி சென்றார். அப்போது பாண்டியனுக்கு போன் செய்த சோழன், கண்டமேனிக்கு திட்டினார். அப்போது பாண்டியன், வானதி வீட்டுக்கு போக வேண்டாம். எல்லோரும் வீட்டிலேயே இருங்கள் என்றார். இதைக்கேட்டு சோழனுக்கு ஷாக்காக இருந்தது
பாண்டியன் வராததால் வானதி வீட்டில் எல்லோருமே கோபப்பட்டார்கள். பின் வானதியின் மாமா அங்கிருந்து கிளம்பி விட்டார். அதற்குப்பின் பாண்டியன், வானதி வீட்டுக்கு வந்தார். அப்போது எல்லோருமே, எதற்காக இப்படி செய்கிறீர்கள்? என்றெல்லாம் கேட்டார்கள். அதற்கு பாண்டியன், எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள். சேரன் அண்ணனுக்கு திருமணம் ஆன பிறகு நான் வானதியை கல்யாணம் செய்து கொள்கிறேன். அதற்கு முன்பே நான் திருமணம் செய்து கொண்டால் சேரன் அண்ணனுக்கு கல்யாணம் நடக்காது. தயவு செய்து உங்களை காக்க வைத்ததற்கு மன்னித்து விடுங்கள் என்றார். வானதி வீட்டில் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்கள்.
அய்யனார் துணை:
கோபத்தில் வானதி, பாண்டியனை கண்டமேனிக்கு திட்டினார். கடைசியில் வானதி, இனி உன்னை நான் கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன். உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்லிவிட்டு வீட்டிற்குள் சென்று விட்டார். இதனால் பாண்டியன் உடைந்து போய் வீட்டிற்கு வந்தார். சோழன், சேரன் எல்லோருமே எதற்காக இப்படி செய்தாய் என்று கேட்டார்கள். பாண்டியன், சேரன் அண்ணனுக்கு திருமணம் ஆன பிறகு நான் கல்யாணம் செய்து கொள்கிறேன் என்றார். அப்போது சேரன், நிலா சொன்ன வார்த்தையை நினைத்துப் பார்த்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பாண்டியன், சேரன் அண்ணனுக்கு திருமணமான பிறகு தான் நான் வானதியை கல்யாணம் செய்து கொள்வேன் என்று உறுதியாக சொல்லிவிடுகிறார். இதனால் வீட்டில் உள்ள எல்லோருமே அமைதியாக இருக்கிறார்கள். சோழன், சேரன் அண்ணனுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்யலாம் என்கிறார். அதற்கு பின் நிலா- சோழன் இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது நிலா, நாம் சந்தாவை பெண் கேட்க போகணும். அதற்கு பின் அவர்கள் இங்கு வரணும். அதற்கு பின் சீக்கிரம் பாண்டியனுக்கு கல்யாணம் செய்யணும் என்று சொல்கிறார்.
சீரியல் ட்ராக்:
சோழனுக்கு உள்ளுக்குள் கவலை இருந்தாலும் வெளியில் காண்பிக்காமல் சரி என்று சம்மதிக்கிறார். மறுநாள் காலையில் எல்லோருமே அவரவர்கள் வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது பாண்டியன், வானதி பேசியதை பற்றி யோசித்து கொண்டு இருக்கிறார். பாண்டியன் போன் செய்தும் வானதி எடுக்கவில்லை. அதற்குப்பின் நிலா-சோழன் இருவருமே சந்தா வீட்டில் பேச போவதற்கு தயாராகிறார்கள். அப்போது பாண்டியன் கவலையில் இருப்பதை அறிந்த நிலா அவரிடம் விசாரிக்கிறார். ஆனால், பாண்டியன் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார்.