சோழனுக்கு சப்போர்ட் செய்து பேசும் நிலா, ஓனர் வைத்த ஆப்பு - பரபரப்பில் அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் பல்லவன், நடேசனை ரொம்ப மோசமாக பேசிக் கொண்டிருந்தார். ஆனால், நடேசன் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். கோபத்தில் பல்லவன், நீ செத்துப் போய் விடு என்று நடேசனை சென்றார். இதனால் கொந்தளித்த நிலா, பல்லவனை கன்னத்தில் அறைந்து திட்டினார். நிலா, அவரைப் பற்றி இனிமேல் வீட்டில் யாராவது என்ன பேசினாலும் வீட்டை விட்டு வெளியே போய் விடுங்கள். அவருக்கு தோன்றும்படிதான் அவர் இருப்பார் என்றெல்லாம் சொன்னார். இதைக் கேட்டு மனம் உடைந்த பல்லவன் வீட்டை விட்டு வெளியே போனார்.
சேரன், பாண்டியன், சோழன் மூவரும் தடுத்துமே பல்லவன் கேட்கவில்லை. பல்லவன் பின்னாடியே நடேசன் பின் தொடர்ந்து சென்று ஓரமாக ஒரு கடையில் பல்லவனை பார்த்துக் கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து காயத்ரி, பல்லவனை பார்த்து பேசி இருந்தார். இன்னொரு பக்கம் வீட்டில் எல்லோருமே பல்லவன் வரவில்லை என்று வருத்தப்பட்டு கொண்டிருந்தார்கள். அப்போது பல்லவனுக்கு போன் செய்த நிலா, இன்னும் அரை மணி நேரத்தில் வீட்டிற்கு வரவேண்டும் என்று சொல்லி போனை வைத்து விட்டார். பின் பல்லவனும் அங்கிருந்து கிளம்பி வீட்டிற்கு வந்தார். நடேசன், பல்லவன் பின்னாடியே வீட்டிற்கு வந்து விட்டார்.
அய்யனார் துணை:
பல்லவன் வீட்டிற்கு வந்ததால் எல்லோருமே சந்தோஷப்பட்டார்கள். நிலா, இனிமேல் நீ என்னை அண்ணி என்று அழைக்காதே. நீயும் நானும் பேசிக்கொள்ள வேண்டாம். உரிமையில் தான் அடித்தேன். நீ வீட்டை விட்டு கோபித்துக் கொண்டு போ வேண்டாம் என்றார். பல்லவன், நிலாவிடம் மன்னிப்பு கேட்டார். அதற்குப் பின் வீட்டில் உள்ள எல்லோருமே தங்களுடைய வேலைகளை செய்து கொண்டிருந்தார்கள். அப்போது நடேசன், பல்லவனை எதற்காக அடித்தாய்? என்றார். அதற்கு நிலா, அவ்வளவு மகன் பாசம் பொங்குதா? அவன் வீட்டை விட்டு கிளம்பியுடன் நீங்கள் போனதை நான் பார்த்தேன் என்றார்.
சீரியல் ட்ராக்:
அதற்குப் பின் பாண்டியன் தன்னுடைய கடை திறப்பு பற்றி பேசி இருந்தார். நிலா, நடேசன் இடம் பாண்டியன் கடைக்கு பூஜை போட அழைக்கிறார். வழக்கம் போல நடேசன் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் நீங்களே பண்ணுங்கள் என்றார். நிலா, நீங்கள் கண்டிப்பாக வரணும் என்றார். அதற்குப்பின் நிலா, பல்லவனை அழைத்துக் கொண்டு கோயிலுக்கு போனார். அங்கு நிலா, உன்னை விட்டு போனவர்களை நினைத்து கவலைப்படாதே. உனக்காக இருக்கும் அண்ணன்களை நினைத்து பார் என்றெல்லாம் பேசி இருந்தார். பல்லவன் அமைதியாகவே இருந்தார்.
https://www.youtube.com/watch?v=20rCkinX83A
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் சோழன், காயத்ரியிடம் மன்னிப்பு கேட்கிறார்.
பின் சோழன், இப்போதுதான் எனக்கு நிம்மதியாக இருக்கிறது. நான் ரொம்ப நல்லவன், யோகியன் என்றெல்லாம் சொல்கிறார். பல்லவன், ரொம்ப நல்லவனாக ஆனால் சோழன் அண்ணா தெரிய மாட்டான் என்று கிண்டல் அடிக்கிறார். உடனே நிலா, இப்பதான் அவரு திருந்தி ஒழுங்காக இருக்கிறார். எதற்காக இப்படி பேசுகிறாய் என்று சொல்கிறார். உடனே சோழன் ஓனர் போன் செய்து அந்த ரெண்டு பெண்களிடம் என்ன பேசினாய்? உன் மீது கம்ப்ளைன்ட் வந்திருக்கிறது என்று சொன்னவுடன் நிலா முறைக்கிறார்.