சோழன் வீட்டில் நடக்கும் அடிதடி கலவரம், நிலா சொன்ன வார்த்தை - விறுவிறுப்பில் அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் தன் அண்ணனை அழைத்து திட்டிய சோழன், நான் உனக்கு தம்பி இல்லை என்று எப்படியாவது நிலாவிடம் சொல்லுங்க என்றார். அதற்குப்பின் நிலாவிடம் சேரன், இவன் எனக்கு தம்பி கிடையாது. மாமன் பையன். உனக்கும் முறைமாமன் தான் என்று சொன்னார். இதெல்லாம் நிலவிற்கு ஒண்ணும் புரியவில்லை. நிலா, உங்களுக்கு அப்பா அம்மா வேறு வேறா? என்று கேட்டவுடன் சேரன் சுதப்பி விட்டார். பின் சோழன் எதையோ சொல்லி நிலாவை அனுப்பி விட்டார்.
நிலா, வீட்டில் உள்ள எல்லோரையுமே அலைத்து தன்னுடைய விவாகரத்து விஷயத்தை பற்றி சொன்னார். எல்லோருக்குமே ஷாக் ஆனது. சோழன் என்ன சொல்வது என்று தெரியாமல் அமைதியாக இருந்தார். சேரன் எடுத்து சொல்லியுமே நிலா கேட்கவில்லை. நிலா, இது பொய்யான திருமணம் தான். விவாகரத்து செய்து கொள்வது தான் சரி என்றார். சோழன் சோகத்தில் இருப்பதால் சேரன் ஆறுதல் சொன்னார். ஆனால், சோழன் தன்னோட அண்ணன் மீது கோபப்பட்டு அங்கிருந்து சென்றார். இன்னொரு பக்கம் பாண்டியன்- வானதி இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.
அய்யனார் துணை:
இதை பார்த்த வானதியின் அண்ணன் கோபப்பட்டு வீட்டில் தன்னோட பெற்றோர்களிடம் சொன்னார். இதனால் வானத்தின் அப்பா, பாண்டியன் குடும்பத்தை பற்றியும் மோசமாக பேசினார்கள். இருந்தாலும் வானதி விட்டுக் கொடுக்காமல் பேசி இருந்தார். அதற்குப்பின் வானதி அண்ணன் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து பாண்டியன் வீட்டிற்கு சென்றார். அப்போது சேரன், அவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் சேர்த்து வைத்து விடலாம் என்றார். இதனால் கோபத்தில் வானதியின் அண்ணன்- சோழன் இருவருக்கும் இடையே அடிதடி ஆனது.
நேற்று எபிசோட்:
நேற்று எபிசோட்டில் சோழன், நிலா இருவருமே சேர்ந்து வக்கீலை சந்தித்து விவாகரத்து பற்றி பேசி இருந்தார்கள். அப்போது வக்கீல், விவாகரத்துக்கான காரணத்தை கேட்டார். அதற்கு நிலா, சேர்ந்து வாழ விருப்பமில்லை. நிலா சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்றார். அதற்கு பின் இருவருமே விவாகரத்திற்கு தேவையான ஏற்பாடுகள் எல்லாம் செய்துவிட்டு வெளியே வந்தார்கள். அப்போது youtube ஒருவர், நிலா-சோழன் இருவரையும் பேட்டி எடுத்தார்கள். அவர்கள் இருவருமே ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட விஷயத்தை பற்றி சொன்னார்கள்.
சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் வீட்டிற்கு வந்த நிலாவிடம், வானதியின் அண்ணன் சண்டை போட்ட விஷயத்தை பற்றி சேரன் சொல்லிக் கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து பாண்டியன் வந்தவுடன் வீட்டில் உள்ள எல்லோரும் அமைதியாக இருந்தார்கள். அப்போது நடேசன், வானதியின் அண்ணன் வீட்டில் செய்த பிரச்சினையை பற்றி பாண்டியனிடம் சொன்னார். இதைக் கேட்டு பாண்டியன் கோபப்பட்டு வானதியின் வீட்டிற்கு போக பார்த்தார். ஆனால், சேரன் தடுத்து நிறுத்தி சமாதானம் செய்தார்.
https://www.youtube.com/watch?v=AEPI7vnFOxE
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் வானதியின் அம்மா, அப்பா இருவருமே சோழனின் வீட்டில் பிரச்சனை செய்து கொண்டிருக்கிறார்கள். இரண்டு குடும்பத்திற்கும் இடையே பெரிய கலவரமே நடக்கிறது. அப்போது நிலா, சோழன் கட்டிய தாலியை எடுத்து கழுத்தில் போட்டுக் கொண்டு வந்து, நிறுத்துங்க இந்த வீட்டில் உங்கள் மகளால் சந்தோஷமாக வாழ முடியாதா? நான் சோழனை கல்யாணம் பண்ணிட்டு வந்தபோது எல்லோருமே சொன்னார்கள். ஆனால், அப்படி ஒன்றும் கிடையாது. நான் இந்த வீட்டு மருமகளாக சோழன் மனைவியாக சொல்கிறேன், இந்த வீட்டை விட ஒரு நல்ல வீடு கிடையாது. உங்கள் மகள் சந்தோசமாக இருப்பாள் என்று சொல்கிறார். இதைக் கேட்டு சோழன் ரொம்பவே சந்தோஷப்படுகிறார்.