பாண்டியன் குடும்பத்தை கேவலமாக பேசும் வானதி பெற்றோர், நிலா சொன்ன வார்த்தை - அய்யனார் துணை

By subhashini · 8/9/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நிலா, வீட்டில் உள்ள எல்லோரையுமே அலைத்து தன்னுடைய விவாகரத்து விஷயத்தை பற்றி சொன்னார். எல்லோருக்குமே ஷாக் ஆனது. சோழன் என்ன சொல்வது என்று தெரியாமல் அமைதியாக இருந்தார். சேரன் எடுத்து சொல்லியுமே நிலா கேட்கவில்லை. நிலா, இது பொய்யான திருமணம் தான். விவாகரத்து செய்து கொள்வது தான் சரி என்றார். சோழன் சோகத்தில் இருப்பதால் சேரன் ஆறுதல் சொன்னார். ஆனால், சோழன் தன்னோட அண்ணன் மீது கோபப்பட்டு அங்கிருந்து சென்றார். இன்னொரு பக்கம் பாண்டியன்- வானதி இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

இதை பார்த்த வானதியின் அண்ணன் கோபப்பட்டு வீட்டில் தன்னோட பெற்றோர்களிடம் சொன்னார். இதனால் வானத்தின் அப்பா, பாண்டியன் குடும்பத்தை பற்றியும் மோசமாக பேசினார்கள். இருந்தாலும் வானதி விட்டுக் கொடுக்காமல் பேசி இருந்தார். அதற்குப்பின் வானதி அண்ணன் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து பாண்டியன் வீட்டிற்கு சென்றார். அப்போது சேரன், அவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் சேர்த்து வைத்து விடலாம் என்றார். இதனால் கோபத்தில் வானதியின் அண்ணன்- சோழன் இருவருக்கும் இடையே அடிதடி ஆனது.

அய்யனார் துணை:

சோழன், நிலா இருவருமே சேர்ந்து வக்கீலை சந்தித்து விவாகரத்து பற்றி பேசி இருந்தார்கள். அப்போது வக்கீல், விவாகரத்துக்கான காரணத்தை கேட்டார். அதற்கு நிலா, சேர்ந்து வாழ விருப்பமில்லை. நிலா சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்றார். அதற்கு பின் இருவருமே விவாகரத்திற்கு தேவையான ஏற்பாடுகள் எல்லாம் செய்துவிட்டு வெளியே வந்தார்கள். அப்போது youtube ஒருவர், நிலா-சோழன் இருவரையும் பேட்டி எடுத்தார்கள். அவர்கள் இருவருமே ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட விஷயத்தை பற்றி சொன்னார்கள்.

கடந்த வாரம் எபிசோட்:

அதற்குப்பின் வீட்டிற்கு வந்த நிலாவிடம், வானதியின் அண்ணன் சண்டை போட்ட விஷயத்தை பற்றி சேரன் சொல்லிக் கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து பாண்டியன் வந்தவுடன் வீட்டில் உள்ள எல்லோரும் அமைதியாக இருந்தார்கள். அப்போது நடேசன், வானதியின் அண்ணன் வீட்டில் செய்த பிரச்சினையை பற்றி பாண்டியனிடம் சொன்னார். இதைக் கேட்டு பாண்டியன் கோபப்பட்டு வானதியின் வீட்டிற்கு போக பார்த்தார். ஆனால், சேரன் தடுத்து நிறுத்தி சமாதானம் செய்தார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் வானதியின் அண்ணன் வீட்டில் சண்டை வாங்கியதால் பாண்டியன் கோபப்பட்டு வானதிக்கு போன் செய்து திட்டிக் கொண்டிருக்கிறார். வானதி, எனக்கு தெரியாது என்று பாண்டியனிடம் மன்னிப்பு கேட்கிறார். அதன் பின் சோழன்- பாண்டியன் இருவருமே வீட்டில் யாரிடமும் சொல்லாமல் வானதியின் வீட்டிற்கு சென்று பார்க்கிறார்கள். அங்கு வானதியின் வாடகை வீடு ரொம்ப சின்னதாக இருப்பதால் சோழன் கிண்டல் கேலி செய்து கொண்டிருக்கிறார். அந்த சமயம் வந்த வானதியின் அண்ணன் சண்டை வாங்குகிறார். பின் இருவருக்கும் இடையே சண்டை நடக்கிறது.

சீரியல் ட்ராக்:

மேலும், வீட்டில் அதைப் பற்றி பெரிதாக இருவருமே சொல்லிக் கொள்ளவில்லை. அந்த சமயம் பார்த்து வானதி அப்பா, அம்மா இருவருமே வீட்டிற்கு வந்து பாண்டியன் குடும்பத்தை பற்றி ரொம்ப மோசமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். இது எல்லாம் பார்த்த நிலா, கோபப்பட்டு சோழனிடம் தாலியை கேட்கிறார். சந்தோஷத்தில் சோழன் தாலியை கொடுக்க, நிலா, கழுத்தில் போட்டுக் கொண்டு வெளியே வந்தார். பின் நிலா, நான் இந்த வீட்டில் தான் வாழ்கிறேன். நீங்கள் நினைக்கும் மாதிரி இங்கு எந்த பிரச்சனையுமே இல்லை என்றெல்லாம் சோழன் குடும்பத்திற்கு சப்போர்ட்டாக பேசுகிறார். இதையெல்லாம் பார்த்து சோழன் சந்தோஷப்படுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full