சோழனை வெறுப்பேற்றி வம்புக்கு இழுத்த நிலா, சந்தோஷத்தில் பாண்டியன் - அய்யனார் துணை

By subhashini · 15/1/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சந்தா-சேரன் இருவரும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது சந்தா, சேரனுக்கு முத்தம் கொடுத்து விட்டார். இதை பார்த்து சோழன் சாக்காகினார். இப்படி தன்னுடைய தம்பி, அண்ணன் எல்லோருமே ரொமான்டிக்காக இருப்பதை பார்த்துச் சோழனுக்கு பயங்கர கடுப்பானது. பின் நிலா வேலை செய்யும் இடத்திற்கு சென்ற சோழன், நடந்ததை எல்லாம் சொல்லி புலம்பினார். நிலாவும் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.

நிலா, இதை சொல்லத்தான் அழைத்தீர்களா? என்று அங்கிருந்து கிளம்பி விட்டார். பின் சோகத்திலேயே சோழன், பாண்டியன் கடைக்கு வந்தார். அங்கு பல்லவன், பாண்டியன், சோழன் எல்லோருமே கடை திறப்பு விழாவிற்கு டெக்கரேஷன் செய்து கொண்டிருந்தார்கள். வானதியும் தன்னால் முடிந்த வேலை செய்து கொண்டிருந்தார். அதற்குப்பின் சோழன், கடைக்கு என்ன பெயர் வைக்கப் போகிறாய்? என்றார். அதற்கு பாண்டியன், சர்ப்ரைஸ் என்றார். அதற்குப்பின் வானதி, தான் சேர்த்து வைத்த உண்டியல் பணத்தை எடுத்துக் கொண்டு போய் பாண்டியனுக்கு ஷர்ட் வாங்கினார்.

அய்யனார் துணை:

நிலா- சோழன் இருவரும் பேசிக்கொண்டு நடந்து வந்தார்கள். அப்போது நிலா, நீங்களும் ஒரு பெண்ணை காதலியுங்கள். நீங்களும் சந்தோசமாக இருப்பீர்கள் என்று கிண்டல் அடித்தார். சோழன், இப்ப அதற்கு மட்டும்தான் குறைச்சல் என்று புலம்பி கொண்டிருந்தார். அதற்குப்பின் பாண்டியன் கடைக்கு நிலா- சோழன் இருவரும் வந்து விட்டார்கள். அப்போது வானதி கொடுத்த கிப்ட் பார்த்து சோழன் வழக்கம் போல கிண்டல் செய்கிறார். நிலா வேண்டாம் என்று சொல்லியும் சோழன் கேட்காமல் கேலி செய்து கொண்டிருந்தார். வானதியின் முகம் மாறிவிட்டது.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் நிலா- சோழன் இருவரும் ரோட்டில் நடந்து பேசிக்கொண்டு செல்கிறார்கள். அப்போது சோழன், சேரன்-பாண்டியன் காதலைப் பற்றி ரொம்ப புலம்பி கொண்டிருக்கிறார். நிலா, நீங்களும் காதலிக்க வேண்டியது தானே என்று கேட்கிறார். இதைக்கேட்டு சோழனுக்கு பயங்கர கடுப்பாகிறது. பின் சோழன், உங்கள் காதலைப் பற்றி சொல்லுங்கள் என்று கேட்கிறார். அதற்கு நிலா, நான் இன்னும் யாரும் காதலிக்கவில்லை. ஆனால், சீக்கிரமாகவே காதலித்து தான் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:

இதைக் கேட்டு சோழனுக்கு ஷாக் ஆகிறது. அதற்கு பின் வீட்டில் நடேசன் பனியில் படுத்திருப்பதால் அவருக்கு உடம்பு முடியாமல் போகிறது. பின் நிலா, அவரைத் திட்டி உள்ளே தூங்க வைக்கிறார்.
நடேசன், நிலா மாதிரி ஒரு பெண் இந்த வீட்டிற்கு வந்ததால் தான் வீடு வீடாகவே இருக்கிறது. சோழன் ஒழுங்காக நிலாவுடன் சேர்ந்து வாழ்வதற்கான வழியை பார்க்க சொல் என்று சேரனிடம் அறிவுரை சொல்கிறார். மறுநாள் காலையில் பாண்டியன் கடை திறப்பு விழாவிற்கு வீட்டில் உள்ள எல்லாருமே தயாராகி செல்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது

Tamil Behind Talkies AMP · Quick view
View full