மேடையில் சோழன் குடும்பத்தை அசிங்கப்படுத்தும் மனோகருக்கு நிலா கொடுத்த பதில் என்ன? அய்யனார் துணை

சோழன் குடும்பத்தை அசிங்கப்படுத்தும் மனோகருக்கு நிலா கொடுத்த பதில்

By subhashini · 24/6/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் மனோகர், சேரன் குடும்பத்தை ஒரு ஸ்டோரூமில் தங்க சொன்னார். சேரன் எதுவும் சொல்லாமல் அங்கேயே தங்குவதற்கு ஒத்துக்கொண்டார். இதையெல்லாம் கவனித்த சோழன் ரொம்பவே வருத்தப்பட்டார். நிலா, சோழன் குடும்பம் தங்கி இருக்கும் இடத்தை பார்த்து கொந்தளித்தார். பின் இதைப்பற்றி தன்னுடைய அப்பாவிடம் நிலா கேட்கிறார். மனோகர் ஏதேதோ சொல்லி சமாளித்தார். இருந்தாலும் நிலாவிற்கு ஆத்திரம் அடங்கவில்லை. பின் மறுநாள் காலையில் ஒரு வேலை ஆட்களைப் போலவே தேன்மொழி சோழன் குடும்பத்தை நடத்துகிறார்.

அதோடு அவர்கள் எல்லாம் பின்பக்கம் உள்ள பாத்ரூமில் பயன்படுத்த சொன்னார். சேரன் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். பின் அவர்களுக்கு ஒரு டீ கூட போட்டுக் கொடுக்காமல் தேன்மொழி இருந்தார். இதை எல்லாம் கவனித்த நிலா, தன்னுடைய அம்மாவிடம் சண்டை போட்டார். சோழன் குடும்பத்திற்கு தேவையான ஏற்பாடுகளும் நிலாவே செய்தார். இதை கவனித்த நிலாவின் அம்மாவிற்கு கோபம் தான் வருகிறது.

அய்யனார் துணை:

நிலா, சேரன் குடும்பம் தங்குவதற்கு ஒரு ரூம் ஏற்பாடு செய்து தந்தார். அதற்குப் பின் தன்னுடைய அப்பா, அம்மாவை சந்தித்து நிலா, இப்படி எல்லாம் நடந்து கொள்ளாதீர்கள். இந்த பிரச்சனை எல்லாம் வரும் தெரிந்து தான் இந்த ஃபங்ஷனை வேண்டாம் என்று சொன்னேன் என கொந்தளித்தார். மனோகர், அதெல்லாம் ஒன்றும் இல்லை என்று சமாளித்தார். பின் எல்லோருமே தயாராகி மண்டபத்திற்கு சென்றார்கள். மனோகர் தன்னுடைய வசதியான பந்தாவை எல்லோரும் முன்பும் காண்பித்தார். நிலாவிற்கு அது பிடிக்கவே இல்லை. இருந்தாலும் நிலா, பிரச்சனை வேண்டாம் என்று அமைதியாக இருந்தார்.

சீரியல் ட்ராக்:

பின் நிலா, சேரன் குடும்பத்திற்காக ஒரு ரூமை ஏற்பாடு செய்து தரச் சொன்னார். அதற்கு பின் நிலா பங்ஷனுக்கு ரெடியாக சென்றார். மனோகர் இது தான் சந்தர்ப்பம் என்று சோழன் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரையும் வேலை வாங்க திட்டம் போட்டார். முதலில் பாண்டியன், பல்லவன் இருவரையும் சேர்களை அடுக்கி வைக்க சொன்னார். சேரனை சமையல் செய்ய சொல்கிறார். பின் வந்திருக்கும் உறவினர்கள் எல்லாம் ஜூஸ் கொடுக்க சொன்னார். சோழன் குடும்பத்தையே ரொம்ப அவமரியாதையாக மனோகர் நடத்திக் கொண்டிருந்தார். இந்த உண்மை எல்லாம் நிலாவிற்கு தெரிய வந்து என்ன நடக்குமோ என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகிருக்கும் ப்ரோமோவில் நிலா, சோழனுடைய ரிசப்ஷன் நன்றாக நடந்து கொண்டிருக்கின்றது. அப்போது மேடையில் மனோகர், என் வசதிக்கு தகுதியான குடும்பமே கிடையாது. என் மகள் காதலித்த ஒன்றுக்காக நான் இந்த கல்யாணத்தை ஏற்றுக் கொண்டேன். இல்லை என்றால் இவர்கள் எங்கள் குடும்பத்திற்கு வர தகுதியே இல்லை என்று ரொம்ப மோசமாக பேசுகிறார். இதனால் நிலா கொந்தளிக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full