தன்னுடைய குடும்பத்திற்காக நிலா எடுத்த அதிரடி முடிவு, வேதனையில் சோழன் - அய்யனார் துணை

By subhashini · 22/10/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் கார்த்திகா அம்மா வழக்கம் போல சேரன் குடும்பத்தை திட்டி விட்டு கோயிலுக்கு சென்றார். அதற்குள்ளே சேரன் குடும்பத்தில் எல்லோருமே தங்களின் குலதெய்வமான அய்யனார் கோயிலுக்கு சென்று விட்டு பூஜை செய்தார்கள். அப்போது வந்த கார்த்திகா அம்மா, கோயிலில் இருக்கும் பூசாரி புதுசாக வந்தவர்களுக்கெல்லாம் முன்னுரிமை கொடுப்பதா? என்றெல்லாம் வம்பு இழுத்தார். அதற்குப்பின் கோயிலுக்கு வரி கட்ட வேண்டும் என்று பூசாரி சொல்வதால் சேரன் ஒத்துக் கொண்டார்.

உடனே கார்த்திகாவின் அம்மாவும், அங்கிருந்த சில பெண்களுமே புதிதாக வந்தவர்களுக்கு எல்லாம் உரிமை கிடையாது. அவர்களை கோயிலை விட்டுப் போக சொல்லுங்கள் என்றெல்லாம் பேசினார்கள். பின் ஒரு வழியாக போராடி சேரன் குடும்பத்தினர் சாமி கும்பிடுவதற்கும் வரி கட்டுவதற்கும் ஒத்துக்கொண்டார்கள். இது எல்லாம் பார்த்து கார்த்திகா அம்மாவிற்கு கோபம் தான் வந்தது. பின் கோவிலில் திருவிழா இருப்பதால் அங்கேயே தங்கி சாமி கும்பிட்டு போக சொன்னார்கள். அதனால் சேரன் குடும்பம் அங்கே தங்குகிறது. பின் நிலா-சோழன் இருவருமே ஊரை சுற்றி பார்க்க போனார்கள்.

அய்யனார் துணை:

இன்று எபிசோட்டில் கோவிலில் எல்லோரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது கோயிலில் பூஜை நடப்பதால் வீட்டுப் பெண்கள் எல்லாம் பரிகாரம் செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள். உடனே கார்த்திக் அம்மா, அந்த வீட்டில் பெண்களே இல்லை. யார் செய்யப் போகிறார்கள் என்று ரொம்ப ஏளனமாக சோழன் குடும்பத்தை பேசிக்கொண்டு இருக்கிறார்கள். நிலா, அந்த பரிகாரத்தை என் குடும்பத்திற்காக நான் செய்கிறேன் என்று சவாலலாம் விட்டு பேசுகிறார். அதற்குப்பின் நிலா, அந்த பரிகாரம் என்னவென்று கேட்கிறார்.

சீரியல் ட்ராக்:

உடனே தீச்சட்டி எடுக்கணும் என்று சொல்கிறார்கள். இதைக் கேட்ட நிலா, ஆடிப் போகிறார். தீச்சட்டி எல்லாம் என்னால் எடுக்க முடியாது. கை சுட்டு விடும் என்றெல்லாம் சொல்கிறார். சோழன், அதெல்லாம் தேவையில்லை. நாம் சாமி கும்பிட்டு ஊருக்கு போகலாம் என்று சொல்வதால் நிலாவுமே பரிகாரம் செய்வதிலிருந்து பின்வாங்கிக் கொள்கிறார். அதற்குப்பின் கோவிலில் பரிகாரத்திற்காக கார்த்திகா தயாராக இருக்கிறார். அதை பார்த்து சேரன், செய்து முடித்து விடுவாயா? என்று கேட்கிறார். அதற்கு கார்த்திகா, நம் குடும்பத்திற்காக செய்தால் எந்த கஷ்டமும் தெரியாது என்று சொல்கிறார். இதையெல்லாம் நிலா யோசித்துப் பார்த்து வருத்தப்படுகிறார்.

https://www.youtube.com/watch?v=sZD82SKLUA0

சீரியல் ப்ரோமோ:

இந்த நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரோமோவில் குலதெய்வ கோயிலில் தீச்சட்டி பரிகாரம் செய்ய வேண்டும் என்று சொன்னவுடனே நிலா ரொம்பவே பயந்து விடுகிறார். இருந்தாலுமே தன்னுடைய குடும்பத்திற்காக செய்ய வேண்டும் என்று நிலா அந்த தீச்சட்டி பரிகாரத்தை செய்கிறார். அதற்கு பிறகு நிலாவின் கைகள் எல்லாம் புண்ணாகி விடுகிறது. உடனே சோழன் ரொம்ப அக்கறையோடு நிலாவை கவனித்துக் கொள்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full