மனோகர் கண்ணில் மண்ணை தூவிய சோழன், நிலா எடுத்த அதிரடி முடிவு - அய்யனார் துணை
நிலா சொன்ன வார்த்தையை கேட்டு வாயடைத்து போன மனோகர்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நிலா- சோழன் இருவரும் மாற்றி மாற்றி பேசிக் கொண்டார்கள். நிலாவும் தன்னை புரிந்து கொண்டு காதலிக்க விடுவாள் என்று சோழன் சந்தோஷப்பட்டார். அதற்குப்பின் பாண்டியன், வானதியின் தோழிகள் அவர்களுடைய காதலனுடன் வருவதால் தன்னையும் வானதி வர சொல்லி இருந்தார் என்றார். இதனால் சோழன்- பல்லவன் இருவருமே பாண்டியனை அழகாக ரெடி பண்ணுகிறார்கள். பின் சேரன், சந்தாவுடன் போனில் பேசி கொண்டு சந்தோஷப்பட்டார். வானதி உடன் சென்ற இடத்தில் அவருடைய நண்பர்கள் பாண்டியனை ரொம்ப கிண்டலாக பேசியிருந்தார்கள்.
இதனால் அவமானத்தில் பாண்டியன் அங்கிருந்து கிளம்பி வந்து விட்டார். வானதி, எதற்காக இப்படி செய்தாய் என்று கேட்டார். பாண்டியன், இப்படி என்னை கிண்டல் செய்யும் இடத்தில் என்னால் இருக்க முடியாது. எனக்கு பிடிக்கவில்லை வந்துவிட்டேன். இதைப் பற்றி நான் நிலாவிடம் சொன்னேன். அவர்கள் என் மீது தான் தவறு என்று திட்டினார்கள் என்றார். இதை கேட்டவுடன் கோபத்தில் வானதி, அவர்கள் சொல்லி தான் இப்படி எல்லாம் செய்கிறாயா? என்று மீண்டும் வழக்கம் போல சண்டை போட்டுவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
அய்யனார் துணை:
அதற்குப்பின் மனோகர், திருவண்ணாமலைக்கு சென்று விடலாம். உனக்கு வேலை செய்வதற்கான எல்லா ஏற்பாடும் செய்தி தருகிறேன் என்று பேசினார். இதனால் நிலா, அதெல்லாம் முடியாது. நான் இங்கு தான் இருப்பேன் என்று பேசுவதால் மனோகரால் எதுவும் பேச முடியவில்லை. அந்த சமயம் பார்த்து சேரன் வந்து விட்டார். சேரனிடம் ரொம்ப ஜாலியாக மனோகர் நிலாவும் பேசிக் கொண்டிருந்தார்கள். அதற்குப்பின் சேரனை வீட்டில் விடுவதற்காக மனோகர் அழைத்து வந்தார். அப்போது மனோகர், சோழன்- நிலா இடையே விவாகரத்தை பற்றி எல்லாம் விசாரித்தார். சேரனும் அமைதியாக இருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்று எபிசோட்டில் மனோகர்,எப்படியாவது நிலாவை இங்கிருந்து அழைத்து சென்றுவிடனும். வலுக்கட்டாயப்படுத்தியது நிலாவை நம்முடன் சென்றுவிடலாம் என்று தன்னுடைய மனைவியிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். இதை கேட்ட நிலா பயந்து போய் சோழனுக்கு தகவலை சொல்லி விடுகிறார். பின் சோழன், தன்னுடைய சகோதரர்களை அழைத்துக் கொண்டு நிலாவின் வீட்டிற்கு வெளியே வந்திருக்கிறார். மனோகர், சோழன் ஏதாவது திட்டம் போடுவாரா? என்று பயத்தில் வீடு முழுக்க செக் பண்ணுகிறார். அதோடு வீட்டையும் பூட்டி சாவியை வைத்துக் கொள்கிறார். பின் தன் தந்தை தூங்கிய பிறகு நிலா யாருக்கும் தெரியாமல் சோழனுடன் அய்யனார் வீட்டிற்கு வந்து விடுகிறார்.
சீரியல் ட்ராக்:
மறுநாள் காலையில் மனோகர், நிலாவை காணவில்லை என்று வீடு முழக்க தேடுகிறார். பின் சோழன் வீட்டிற்கு சென்றிருப்பார் என்று கிளம்பி வருகிறார். அங்கு நிலா இருப்பதை கவனித்த மனோகர் பயங்கரமாக கோபப்படுகிறார். நிலா, நான் இங்கு தான் இருப்பேன். திருவண்ணாமலை நான் உங்களுடன் வரவில்லை என்று சொல்கிறார். மனோகர், உனக்கும் சோழனுக்கும் என்ன உறவு? விவாகரத்து ஆன பிறகு இங்கு இருக்க முடியாது? என்று சண்டை போடுகிறார். பின் இருவருக்கும் வாக்குவாதம் நடக்கிறது. ஒரு கட்டத்தில் நிலா, நான் சோழனை திருமணம் செய்து கொள்கிறேன் என்கிறார். சோழன் ரொம்பவே சந்தோஷப்படுகிறார். மனோகரால் எதுவும் பேச முடியாமல் வாய் அடைத்துப் போகிறார்.