உண்மையை தெரிந்து கொள்ள போலீஸ் ஸ்டேஷன் போகும் நிலா, மாட்டிக்கொள்வாரா சோழன்? அய்யனார் துணை

By subhashini · 17/9/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நிலா, கோர்ட்டில் நடந்ததை சொன்னார். அப்போது அந்த போலீஸ் நிலாவிற்கு ஃபோன் செய்து விவாகரத்து அப்ளை செய்த விஷயமாக பேசி இருந்தார். நிலாவிற்கும் என்ன சொல்வது என்று தெரியவில்லை. உடனே போலீஸ், நீங்கள் இருவரும் சேர்ந்து வாழ வேண்டும். அந்த வேலையை பாருங்கள் என்று அறிவுரை சொல்லி வைத்து விட்டார். அதற்குப்பின் பாண்டியனை தேடி வானதி கடைக்கு வந்து விட்டார்.

இருவருமே தங்கள் சன்டையை விட்டு பேசிக் கொண்டார்கள். நிலா, போலீசுக்கு விவாகரத்து விஷயம் எப்படி தெரிந்தது என்று கேட்டார். அதற்கு சோழன், ஏதேதோ சொல்லி சமாளித்தார். இருந்தாலுமே நிலாவிற்கு சந்தேகமாக இருந்தது. அதற்குப்பின் இரவு 12 மணிக்கு நிலாவின் பிறந்தநாள் என்பதால் சோழன் கேக் வாங்கி மெழுகுவத்தி எல்லாம் ஏற்றி சர்ப்ரைஸ் கொடுத்தார். நிலாவும் அதை பார்த்து ரொம்ப சந்தோஷப்பட்டு கேக்கை வெட்டினார்.

அய்யனார் துணை:

வீட்டில் உள்ள எல்லோருமே நிலாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொன்னார்கள். மறுநாள் காலையில் வீட்டில் உள்ள எல்லோரும் நிலாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி கிப்ட் கொடுத்தார். அப்போது சோழன் நிலவிற்காக வாங்கி வைத்த புடவையை கொடுத்தார். அதை பார்த்து நிலா ரொம்ப சந்தோசப்பட்டார். இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் சோழன் வாங்கி தந்த புடவையை நிலா கட்டிக்கொண்டு வருகிறார். அதை பார்த்து சந்தோஷத்தில் சோழன் நடனமாடுகிறார். அதற்குப்பின் சோழன், நிலா, பல்லவன் கோயிலுக்கு போகிறார்கள்.

இன்றைய எபிசோட்:

அங்கு சோழன் தன்னுடைய மனதில் இருக்கும் காதலை சொல்ல நினைக்கிறார். ஆனால், நிலா விவாகரத்து பற்றிய பேசிக் கொண்டிருப்பதால் சோழனால் எதுவும் சொல்ல முடியவில்லை. அதற்கு பின் சோழன் வேண்டுதல் என்று கோயிலை சுற்றி அங்கபிரதசனம் செய்கிறார். நிலா, எதற்கு என்று கேட்கிறார். அதற்கு சோழன், நீங்கள் உங்க அப்பா அம்மாவுடன் சேர வேண்டும் என்று சொல்வதால் நிலா திட்டி விடுகிறார். கடைசியில் சோழனின் இடுப்பு எலும்பு உடைந்தது தான் மிச்சம். அதற்குப்பின் நிலா வேலைக்கு சென்று விடுகிறார்.

சீரியல் ட்ராக்:

அப்போது நிலா மீண்டும் அந்த போலீசுக்கு போன் செய்து பேசுகிறார். அந்த போலீஸ் நேரில் வர சொல்கிறார். நிலாவுமே ஆபீஸில் பர்மிஷன் கேட்டு கிளம்புகிறார். அப்போது ராகவ், நான் அந்த வழியாகத்தான் செல்கிறேன். உங்களை நானே கொண்டு போய் விடுகிறேன் என்று சொல்கிறார். பின் ராகவ், நிலாவை பற்றி எல்லாம் விசாரிக்கிறார். ஏதேதோ பதிலை சொல்லி நிலா சமாளிக்கிறார். இன்னொரு பக்கம் நிலாவுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க சோழன் வீட்டை அலங்காரம் செய்து கொண்டிருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது

Tamil Behind Talkies AMP · Quick view
View full