சோழனின் வாழ்க்கைக்காக கெஞ்சும் சேரன், நிலா என்ன செய்ய போகிறார்? அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சேரன், சோழன் செய்தது பெரிய தவறு. நீ வீட்டை விட்டு போகாதே என்றார். பல்லவன், பாண்டியன் எல்லோரும் கெஞ்சினார்கள். ஆனால், நிலா தன் முடிவிலிருந்து மாறவில்லை. பல்லவனை அழைத்துக்கொண்டு நிலா வெளியேறினார். சோழனும் கெஞ்சி கதறுகிறார். ஆனால், நிலா கேட்கவே இல்லை. சோழன் ரொம்பவே உடைந்து விட்டார். இன்னொரு பக்கம் கோவிலில் வானதிக்கு நிச்சயதார்த்தம் நடக்கிறது. வானதி வீம்புக்காக பெற்றோர்கள் சொன்னதால் நிச்சயதார்த்தத்திற்கு தயாராகி வருகிறாள்.
பின் திருமண தேதி எல்லாம் படித்தார்கள். ஆனால், பாண்டியன் உடனான நினைவுகளை நினைத்துக் கொண்டு வானதி வருத்தப்பட்டார். அதற்குப்பின் நிலா, பஸ் ஸ்டாண்டிற்கு சென்றவுடன் பல்லவனை அனுப்பி வைத்தார். இன்னொரு பக்கம் வீட்டில் சேரன், நடேசன் எல்லோருமே சோழனை திட்டிக் கொண்டிருந்தார்கள். இதனால் மணமுடைந்த சோழன் அங்கிருந்து கிளம்பி விட்டார். நிலா, பஸ் ஏறாமல் கோயிலில் உட்கார்ந்து வருத்தப்பட்டு கொண்டிருந்தார்.
அய்யனார் துணை:
இன்றைய எபிசோட்டில் நிலா, தன்னுடைய தோழிக்கு போன் செய்து கோவிலுக்கு வர சொல்கிறார். இன்னொரு பக்கம் வானதி, திருமணத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று திட்டம் போடுகிறார். பின் மாப்பிள்ளை பற்றி எல்லாம் விசாரித்தீர்களா? வேறு ஏதாவது மாப்பிள்ளை பார்க்கலாமா? என்றெல்லாம் வானதி சொல்கிறார். இதனால் வானதியின் பெற்றோர்கள் கோபப்பட்டு சண்டை போடுகிறார்கள். வானதி வேறு வழி இல்லாமல் அமைதியாக விடுகிறார்.
சீரியல் ட்ராக்:
பின் ரூமுக்குள் சென்ற வானதி, பாண்டியனை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் சோழன் சென்ற கார் விபத்து ஏற்பட்டதாக சேரனுக்கு போன் வருகிறது. இதை சேரன் குடும்பத்தில் எல்லோருமே ஹாஸ்பிடலுக்கு போகிறார்கள். இன்னொரு பக்கம் நிலா, தன்னுடைய தோழியிடம் தனக்கு திருமணமான கதை எல்லாத்தையும் சொல்லிக் கொண்டு கிளம்பி கொண்டிருக்கிறார். அப்போது பல்லவன், சோழனுக்கு நடந்த விஷயத்தை பற்றி சொல்கிறார். நிலாவும் பதறி அடித்து கொண்டு கிளம்புகிறார்.
https://www.youtube.com/watch?v=g5DdG2VkMFk
சீரியல் ப்ரோமோ:
இந்த நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரோமோவில் சோழனுக்கு விபத்து ஏற்பட்டு ஹாஸ்பிடல் இருக்கும் செய்தியை அறிந்து நிலா பதறி அடித்துக் கொண்டு போகிறார். அங்கு சோழன் தலையில் கையில் எல்லாம் கட்டுப் போடப்பட்டிருக்கிறது. சோழன், என்னை விட்டுப் போகாதே நிலா. என்னை மன்னித்துவிடு என்று அழுகிறார். பின் சேரன்- பாண்டியன், அவன் உன்னை ரொம்பவே காதலிக்கிறான். தயவு செய்து அவனை மன்னித்து ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்கிறார்கள்.