உண்மை தெரியாமல் நிலா மீது கோபப்படும் பல்லவன், ஆத்திரத்தில் பொங்கிய வானதி - அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நிலாவால் பிடிக்கவே முடியவில்லை. பின் வீட்டில் யாரிடமும் நிலா உண்மை சொல்லாமல் அமைதியாக இருந்தார். மறுநாள் காலையில் பல்லவன், தன்னுடைய அம்மா காணவில்லை என்று வீடு முழுவதும் தேடினார். ஆனால், கிடைக்கவில்லை. நடேசன் தான் இதெல்லாம் செய்திருப்பார் என்று தன்னுடைய அப்பாவிடம் கோபப்பட்டார். ஆனால், நடேசன் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். நிலா எந்த உண்மையும் சொல்ல முடியாமல் பல்லவனை சமாதானம் செய்தார்.
பல்லவன், தன் அம்மா வீட்டை விட்டு போனது நினைத்து ரொம்பவே வருத்தப்பட்டு கொண்டிருந்தார். நிலா எவ்வளவு ஆறுதல் சொல்லியும் பல்லவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதற்கு பின் பல்லவனை கல்லூரியில் விட்டு நிலா- சோழன் இருவரும் வந்தார்கள். அப்போது நிலா, பல்லவனின் அம்மா செய்த வேலை எல்லாம் சொன்னார். இதைக்கேட்டு சோழனுக்கு ஷாக் ஆனது. பின் நிலா- சோழன் இருவருமே பல்லவன் அம்மா இருந்த இடத்திற்கு போனார்கள். ஆனால், அங்கு வீடு பூட்டி கிடக்கிறது. இருவருக்குமே பல்லவன் அம்மா மீது சந்தேகம் இன்னும் அதிகமானது.
அய்யனார் துணை:
இன்னொரு பக்கம் சேரன், பல்லவன் அம்மா வந்ததையும் அவர் திரும்ப மீண்டும் சென்றதையும் பற்றி சந்தாவிடம் சொல்லி வருத்தப்பட்டு கொண்டிருந்தார். சந்தா, சேரனுக்கு ஆறுதல் சொன்னார். இன்னொரு பக்கம் கடைக்கு வந்த வானதி, பணத்தை ரெடி பண்ணி விட்டாயா? கடைக்கு என்ன பெயர் வைக்க போகிறாய்? என்னிடம் சொல்லவில்லை என்றாலும் வம்பு இழுத்துக் கொண்டு இருந்தார். அதற்கு பாண்டியன், நல்ல நாள் பார்த்து சொல்கிறேன். கடையின் பெயர் சர்பிரைஸ் என்றார். பின் சேரன், சோழன் எல்லோருமே பணத்தை எடுத்துக்கொண்டு பாண்டியன் கடைக்கு சென்று முதலாளி இடம் கொடுத்தார்கள்.