பல்லவனை அடி வெளுத்து வாங்கும் அண்ணன்கள், நிலா சொன்ன வார்த்தை - பரபரப்பில் அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சோழன் கூப்பிடுவதறதுக்குள் பல்லவன், காயத்ரி லாஜிக்குள் சென்று விட்டார். இன்னொரு பக்கம் கல்லூரியின் நிர்வாகம் சேரனுக்கு போன் செய்தார்கள். அப்போது கல்லூரி நிர்வாகம், பல்லவன் ஒரு வாரம் காலேஜுக்கு வரவில்லை என்று சொன்னார். அதை கேட்டவுடன் சேரனுக்கு ஒன்றுமே புரியவில்லை.
இன்னொரு பக்கம் பல்லவன் சென்ற லாஜிக்கு போலீஸ் ரைட் போகிறார்கள். சோழன் பயந்து போய் நிற்கிறார்.
ரூமிற்கு சென்ற போலீஸ் பல்லவன் -காயத்ரி இருவரையும் விசாரித்தார்கள். பின் இருவரையும் போலீஸ் கைது செய்து வெளியே அழைத்து வந்தார்கள். இதைப் பார்த்த சோழன் ஷாக் ஆனார். பின் போலீஸிடம் சோழன் எவ்வளவோ எடுத்து சொல்லி புரிய வைத்தார். ஆனால், போலீஸ் கேட்கவே இல்லை. இதைப்பற்றி சோழன், சேரன் நிலாவிற்கு தகவலை சொல்லி விட்டார். பின் மூவருமே சேர்ந்து போலீஸ் ஸ்டேஷன் போகிறார்கள். சேரன் ரொம்பவே கெஞ்சி கேட்டார்.
அய்யனார் துணை:
போலீஸ், காலேஜ் படிக்கும் பையனுக்கு லாட்ஜில் என்ன வேலை என்று கேள்வி கேட்டார். பின் மூவரும் பல்லவனை வெளியே எடுப்பதற்கு தவித்து கொண்டு இருந்தார்கள். இன்னொரு பக்கம் வானதியை பார்ப்பதற்காக பாண்டியன் வீட்டிற்கு சென்று விட்டார். பாண்டியன், ஏன் பேச மாட்டுகிறாய்? எதற்காக கோபப்படுகிறாய் என்று எவ்வளவோ கெஞ்சி கேட்டார். வானதி வேண்டும் என்றே பிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் போலீஸ் ஸ்டேஷனில் சேரன், தனக்குத் தெரிந்தவர் மூலம் பல்லவனை வெளியே எடுத்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பல்லவனை போலீஸ் ஸ்டேஷனில் இருந்து எப்படியோ வெளியே கொண்டு வந்து விடுகிறார்கள். பின் வீட்டில் எல்லோருமே பல்லவனை தாறுமாறாக திட்டிக் கொண்டிருக்கிறார்கள். பல்லவன், நான் எந்த தவறும் செய்யவில்லை. சும்மா நாங்கள் பேச தான் போனோம் என்று எடுத்துச் சொல்லி புரிய வைக்க போகிறார். ஆனால், வீட்டில் உள்ள யாருமே கேட்கவில்லை. சேரன், பாண்டியன், சோழன் எல்லோருமே பல்லவனை அடிக்கிறார்கள்.
சீரியல் ட்ராக்:
ஒரு கட்டத்தில் கொந்தளித்த நடேசன், பல்லவனுக்கு வார்னிங் கொடுத்து திட்டி விட்டு செல்கிறார். நிலா, நீ உன்னை பற்றி மட்டும் யோசிக்காதே. அந்த பெண்ணின் நிலைமையை யோசித்துப் பார் என்றெல்லாம் அறிவுரை சொல்கிறார். கடைசியில் பாண்டியன், இதற்கெல்லாம் காரணம் நீ காயத்ரியை காதலித்ததால் தான் இவன் இந்த பிரச்சனையில் சிக்கினான் என்று சொல்கிறார். இதனால் சோழன் கோபப்படுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.