சந்தாவை திருமணம் செய்து கொள்ள சேரன் எடுக்கும் முடிவு என்ன? வேதனையில் பல்லவன் - அய்யனார் துணை

By subhashini · 3/4/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் பல்லவன், கல்லூரியில் எப்படியாவது போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்று கடுமையாக உழைத்துக் கொண்டிருந்தார். அவருடைய நண்பர்கள் வேண்டாம் என்று சொல்லியுமே பல்லவன் கேட்கவில்லை. அதற்குப்பின் சந்தாவை அழைத்துக் கொண்டு வானதி, சேரன் வீட்டிற்கு வந்தார். சந்தாவை பார்த்தவுடன் சேரன் ரொம்ப சந்தோஷப்பட்டார். வீட்டில் உள்ள எல்லோருமே சந்தாவிடம் விசாரித்தார்கள்.

பின் வானதி செய்த விஷயத்தை பாராட்டினார்கள். அதற்கு பின்பு சேரன்-சந்தா இருவரும் தனியாக சந்தித்து பேசி கொண்டார்கள். சோழன்- நிலா இருவரும் அந்த வயதான ஜோடியை அவர்களுடைய வீட்டில் விட்டார்கள். அவர்கள் நிலா-சோழனை வீட்டிற்கு அழைத்து ஆசீர்வாதம் செய்து அனுப்பி வைத்தார்கள். பின் சோழன்- நிலா இருவரும் வீட்டிற்கு வராமல் நேராக பீச்சுக்கு போனார்கள். இன்னொரு பக்கம் அனீஸ், சந்தாவை பார்க்க சேரன் வீட்டிற்கு வந்தார். அனீஷை பார்த்தவுடன் சந்தா எமோஷனலாக அழுதார்

அய்யனார் துணை:

பின் சேரன்,சந்தா, அனிஷ் எல்லோருமே சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்தார்கள். பீச்சில் நிலா- சோழன் இருவரும் சந்தோஷமாக தண்ணீரில் விளையாடினார்கள். அப்போது நிலா, நீங்கள் ஏதாவது வாழ்க்கையில்
சாதிக்க வேண்டும் என்று சொன்னார். சோழன், நீங்கள் என்னை விட்டுப் போகப் போகிறீர்களா? என்று கேட்டார். அதற்கு நிலா, அப்படியெல்லாம் இல்லை. நீங்கள் எனக்காக எவ்வளவோ கஷ்டப்பட்டு இருக்கிறீர்கள். அதற்காகத்தான் சொல்கிறேன். உங்கள் ஆசை என்ன? என்றார்.

நேற்று எபிசோட்:

நல்லபடியாக ட்ரிப்பை முடித்துவிட்டு நிலா- சோழன் இருவரும் வீட்டிற்கு வந்தார்கள் அப்போது நிலாவை பார்த்தவுடன் மொத்த குடும்பமே சந்தோசப்பட்டார்கள். இதனால் வானதிக்கு பயங்கர கோபம் வருகிறது. பின் நிலா, வீட்டில் உள்ள எல்லோரிடமும் பேசிக் கொண்டிருந்தார். அதை பார்த்து வானதிக்கு பொறாமையாக இருக்கிறது. பின் இதைப்பற்றி பாண்டியனிடம் சொல்லி வானதி சண்டை போட்டார். பாண்டியனும் முடிந்தவரை வானதியை சமாதானம் செய்தார். அதற்கு பின் சோழன் ட்ரிப்பில் நடந்ததை எல்லாம் தன்னுடைய சகோதரர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பாண்டியன், நீங்கள் சந்தாவை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று சொல்கிறார். சேரன், இப்பதான் பிரச்சனை முடிந்து விட்டதே, பார்க்கலாம் என்று சொல்கிறார். பாண்டியன், நிலா வீட்டை விட்டுப் போக மாட்டார்கள். நீங்கள் சீக்கிரம் சந்தாவை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று சொல்கிறார். பின் பல்லவன், கல்லூரியின் விழா நடப்பதால் வீட்டில் உள்ள எல்லோரையும் அழைக்கிறார். ஆனால், சேரன் கண்டு கொள்ளாமல் அமைதியாக இருக்கிறார்.
பல்லவனும் வருத்தத்துடன் கல்லூரிக்கு செல்கிறார்.

சீரியல் ட்ராக்:

பின் வீட்டில் உள்ள எல்லோருமே தயாராகி கல்லூரியில் நடக்கும் விழாவிற்கு போகிறார்கள். சேரன் மட்டும் வரவில்லை. சேரன் வராததால் பல்லவன் ரொம்பவே வருத்தப்படுகிறார். அதன் பின் அனீஸ், மீண்டும் பிரச்சனை வருவதற்குள் நீங்கள் சந்தாவை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்கிறார். சேரன் எதுவுமே சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். அப்போது பாண்டியன், சேரணுக்கு போன் செய்து கல்லூரிக்கு வர சொல்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full