நடேசனை மோசமாக பேசும் பல்லவன், உண்மையை சொல்வாரா நிலா? பரபரப்பில் அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நடேசன், பல்லவன் அம்மா சொல்லாமல் கொள்ளாமல் குழந்தையை என்னிடம் விட்டு கிளம்பி போய் விட்டாள். இப்போது அந்த ஆளுடன் தான் அவள் சுத்தி கொண்டு இருந்தார். எனக்கும் அந்த பெண்ணும் கல்யாணம் ஆகல. அவனுக்கு பல்லவன் பெயர் வைத்ததே நான் தான். அவன் எல்லோரிடமும் சந்தோஷமாக அண்ணன் தம்பியாக பழகிக் கொண்டிருக்கிறான். அவனுக்கு இந்த உண்மை தெரிந்தால் உடைந்து போய் விடுவான். தயவுசெய்து வெளியில் யாரிடமும் இந்த உண்மையை சொல்லாதே என்றார். இதைக் கேட்டு நிலா ரொம்பவே எமோஷனலானார். இதையெல்லாம் யாருக்கும் தெரியாமல் சேரன் கேட்டு விட்டார்.
நிலா, நீங்கள் எப்போது வந்தீர்கள்? எல்லா விஷயமும் உங்களுக்கு தெரிந்து விட்டதா? என்று கேட்டார். சேரன் எமோஷனலாக கண்கலங்கி எல்லாம் எனக்கு இப்போதான் புரிகிறது. பல்லவன் அம்மாவை அப்பா திருமணம் செய்யவில்லை என்பது தெரியும். ஆனால், அந்த சமயத்தில் என்னால் பேச முடியவில்லை. அப்படியே பிரச்சினைகள் பெரிதாகி அப்பா ஜெயிலுக்குப் போய்விட்டார். நான் தான் தம்பிகளை பார்த்துக் கொள்ள வேண்டும். பல்லவனையும் அப்படியே நாங்கள் பார்த்து வளர்த்தோம்.
அய்யனார் துணை:
நாட்கள் செல்ல செல்ல எல்லாமே மறந்து விட்டது. பல்லவன் எங்களுடைய தம்பி தான். இந்த உண்மையை சோழன், பாண்டியன், பல்லவனுக்கு கூட தெரியக்கூடாது என்றார். இதைக் கேட்டு நிலா, நீங்கள் எல்லாம் ரொம்ப நல்லவர்கள் என்று ரொம்ப எமோஷனலாக அழுதார். பின் இருவரும் கோவிலில் இருந்து கிளம்பினார்கள். வீட்டில் சோழன், நிலா- அண்ணன் எங்கே என்றெல்லாம் விசாரித்தார். அந்த நேரம் பார்த்து நிலா- சேரன் வந்தார்கள். சோழன், பாண்டியன், பல்லவன் மூவருமே மாற்றி மாற்றி சேரன், நிலாவிடம் கேள்வி கேட்டார்கள். அவர்கள் இருவருமே ஏதேதோ சொல்லி சமாளித்து விட்டார்கள்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சேரன் வீட்டில் எல்லோருமே ஒன்றாக சேர்ந்து பிரியாணி சமைத்து கொண்டிருக்கிறார்கள். பின் சமைத்து முடித்த உடனே சந்தாவிற்காக சேரன் சாப்பாட்டை எடுத்துக்கொண்டு போகிறார். சந்தாவும் அவருடைய அண்ணாவும் சாப்பிட்டு பாராட்டுகிறார்கள். அந்த சமயம் பார்த்து சந்தாவிற்கு ஒரு போன் கால் வருகிறது. சந்தாவை திருமணம் செய்து கொள்ள நினைக்கும் நபர் தான் போன் செய்து மிரட்டுகிறார். சந்தா என்ன செய்வதென்று புரியாமல் அழுகிறார். சேரன் சந்தாவிற்கு ஆறுதல் சொல்லி தைரியப்படுத்துகிறார்.
சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் சேரன் வீட்டில் எல்லோருமே கலகலப்பாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், பல்லவன் மட்டும் தன்னுடைய அம்மா போனதை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார். வெளியில் நடேசன் சந்தோசமாக பாட்டு கேட்டுக் கொண்டிருக்கிறார். இதை பார்த்து பல்லவனுக்கு பயங்கர கோபம் வருகிறது. நடேசன் உள்ளே வந்தவுடன் அவர் கையில் இருந்த டேப் ரெக்கார்டை வாங்கி கீழே போட்டு உடைத்து நடேசனை ரொம்ப மோசமாக பேசுகிறார் பல்லவன். நிலா தடுத்துமே பல்லவன் கேட்கவில்லை. நடேசனை பல்லவனை திட்டிக் கொண்டிருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.