கல்லூரியில் பல்லவனுக்கு கிடைத்த அங்கீகாரம், சந்தோஷத்தில் சேரன் குடும்பம் - அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நல்லபடியாக ட்ரிப்பை முடித்துவிட்டு நிலா- சோழன் இருவரும் வீட்டிற்கு வந்தார்கள் அப்போது நிலாவை பார்த்தவுடன் மொத்த குடும்பமே சந்தோசப்பட்டார்கள். இதனால் வானதிக்கு பயங்கர கோபம் வருகிறது. பின் நிலா, வீட்டில் உள்ள எல்லோரிடமும் பேசிக் கொண்டிருந்தார். அதை பார்த்து வானதிக்கு பொறாமையாக இருக்கிறது. பின் இதைப்பற்றி பாண்டியனிடம் சொல்லி வானதி சண்டை போட்டார். பாண்டியனும் முடிந்தவரை வானதியை சமாதானம் செய்தார். அதற்கு பின் சோழன் ட்ரிப்பில் நடந்ததை எல்லாம் தன்னுடைய சகோதரர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.
பாண்டியன், நீங்கள் சந்தாவை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று சொன்னார். சேரன், இப்பதான் பிரச்சனை முடிந்து விட்டதே, பார்க்கலாம் என்று சொன்னார். பாண்டியன், நிலா வீட்டை விட்டுப் போக மாட்டார்கள். நீங்கள் சீக்கிரம் சந்தாவை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்றார். பின் பல்லவன், கல்லூரியின் விழா நடப்பதால் வீட்டில் உள்ள எல்லோரையும் அழைத்தார். ஆனால், சேரன் கண்டு கொள்ளாமல் அமைதியாக இருந்தார். பல்லவனும் வருத்தத்துடன் கல்லூரிக்கு சென்றார்.
அய்யனார் துணை:
பின் வீட்டில் உள்ள எல்லோருமே தயாராகி கல்லூரியில் நடக்கும் விழாவிற்கு போனார்கள். சேரன் மட்டும் வரவில்லை. சேரன் வராததால் பல்லவன் ரொம்பவே வருத்தப்பட்டார். அதன் பின் அனீஸ், மீண்டும் பிரச்சனை வருவதற்குள் நீங்கள் சந்தாவை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்றார். சேரன் எதுவுமே சொல்லாமல் அமைதியாக இருந்தார். அப்போது பாண்டியன், சேரணுக்கு போன் செய்து கல்லூரிக்கு வர சொன்னார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சேரனுக்கு போன் செய்த நிலா, சீக்கிரம் கல்லூரிக்கு வர சொல்கிறார். சேரனும் கல்லூரிக்கு கிளம்ப தயாராகிறார். இன்னொரு பக்கம் கல்லூரியில் மாணவர்களுக்கு விருதுகள் கொடுக்க ஆரம்பித்து விடுகிறார்கள். பல்லவன் தன் அண்ணன் வராததால் ரொம்பவே சோகத்தில் இருக்கிறார். அப்போது பல்லவனும் நிறைய போட்டிகளில் வென்றிருக்கிறார். இதனால் நிறைய மெட்டல்களை வாங்குகிறார். சோழன், பாண்டியன், நிலா எல்லோருமே சந்தோஷப்படுகிறார்கள்.
சீரியல் ட்ராக்:
பல்லவன், சேரனை நினைத்து வருத்தப்படுகிறார். பின் சிறந்த மாணவருக்கான டிராபியை பல்லவனுக்கு கொடுக்கிறார்கள். அதை வாங்கப் போகும்போது சேரன் சரியாக வந்து விடுகிறார். சேரனை பார்த்தவுடன் பல்லவன் ரொம்பவே சந்தோஷப்படுகிறார். பின் பல்லவன், நான் இந்த நிலைமையில் இருப்பதற்கு காரணம் என் அண்ணன் தான் என்று சேரனை பற்றி ரொம்ப பெருமையாக பேசுகிறார். பின் பல்லவன் தன் அண்ணன்கள், நிலாவையும் மேடைக்கு அழைத்து அவர்களை கௌரவிக்கிறார்.