பல்லவன் அம்மாவை வீட்டை விட்டு துரத்த நினைக்கும் நடேசன், கோபத்தில் நிலா - அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் கடையின் ஓனர், எனக்கு கொஞ்சம் சூழ்நிலை கஷ்டமாக இருக்கிறது. அதனால் லீசுக்கு கொடுத்த பணத்தை மூன்று லட்ச ரூபாயை எனக்கே கொடுத்துவிட்டால் கடையை நீயே எடுத்து நடத்து என்று சொன்னார். பின் பாண்டியன், இதைப் பற்றி வீட்டில் எல்லோரிடமும் சொன்னார். பின் பாண்டியன் இதை பற்றி வீட்டில் உள்ள எல்லோரிடமும் சொன்னார். வீட்டில் எல்லோரும், சூப்பரான விஷயம். கடையை நீயே வாங்கிவிடு. எல்லோரும் சேர்ந்து பணத்தை பார்த்துக் கொள்ளலாம். நீ அதை வாங்கும் வேலையை பாரு என்று எல்லாம் சொன்னார்கள்.
பாண்டியனுமே சந்தோஷப்பட்டார். அதற்குப்பின் பாண்டியன் கிளம்பி வெளியே போனவுடன் நிலா, வீட்டில் உள்ள மற்றவர்களிடம் பாண்டியன் கடை ஆரம்பிக்கும் விஷயம் பற்றி கேட்டார். பின் ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த பணத்தை ஏற்பாடு செய்து தருவதாக சொன்னார்கள். பல்லவன், தன்னிடம் இருந்த ஒரு மோதிரத்தை கொடுத்தார். வீட்டில் உள்ள எல்லோருமே எப்படியாவது பாண்டியனுக்கு அந்த கடையை வாங்கி தர வேண்டும் என்று மும்முரமாக இருந்தார்கள்.
அய்யனார் துணை:
பல்லவனின் அம்மாவை நேரில் பார்த்து சோழன்-நிலா இருவரும் பேசி இருந்தார்கள். பின் பல்லவனின் அம்மாவை இருவரும் வீட்டிற்கு அழைத்து வந்தார்கள். சேரன், பாண்டியன் எல்லோரும் சந்தோசப்பட்டார்கள். ஆனால் நடேசன், பல்லவன் அம்மாவை பயங்கரமாக திட்டி வெளியே போக சொன்னார். இருந்தாலும் நடேசன் பேச்சை யாரும் கேட்கவில்லை. பல்லவன் அம்மாவை வீட்டிற்குள் அழைத்து வந்தார்கள். நடேசன், எவ்வளவு பிரச்சனை சந்திக்க போகிறீர்கள் என்று புரியவில்லை. நிறைய அனுபவிப்பீர்கள் என்றார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சேரன் குடும்பத்தில் எல்லோருமே பல்லவன் அம்மாவுடன் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருக்கிறார்கள். இதை பார்த்த நடசேனுக்கு பயங்கர கடுப்பாகிறது. மீண்டும் பல்லவன் அம்மாவை திட்டி வெளியே போக சொல்கிறார். நிலா, நடேசனை திட்டுகிறார். மறுநாள் காலையில் பல்லவன் அம்மா, வீட்டு வேலைகளை எல்லாமே செய்து கொண்டிருக்கிறார். சேரன் தடுத்துமே பல்லவன் அம்மா கேட்கவில்லை. இதை பார்த்து எல்லோருக்கும் சந்தோஷமாக இருக்கிறது. ஆனால், நடேசன் கடுப்பாகிறார்.
சீரியல் ட்ராக்:
பல்லவன் அம்மா, டீ கொடுத்தும் வாங்கிக் கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியே போ என்று நடேசன் திட்டுகிறார். உடனே நிலா, தடுத்து நிறுத்தி பல்லவன் அம்மாவை அழைத்து செல்கிறார். சோழன், சேரன், பல்லவன் எல்லோருமே நடேசன் மீது கோபப்படுகிறார்கள். இருந்தாலும் பல்லவன் அம்மா பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பின் எல்லோருமே கிளம்பி வேலைக்கு செல்கிறார்கள். நடேசன் இதுதான் சந்தர்ப்பம் என்று பல்லவன் அம்மாவை திட்டி வெளியே போக சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.