நடேசன் சொன்ன வார்த்தை, பல்லவனுக்கு நிலா சொன்ன அறிவுரை - அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சேரன் வீட்டில் எல்லோருமே ஒன்றாக சேர்ந்து பிரியாணி சமைத்து கொண்டிருந்தார்கள். பின் சமைத்து முடித்த உடனே சந்தாவிற்காக சேரன் சாப்பாட்டை எடுத்துக்கொண்டு போனார். சந்தாவும் அவருடைய அண்ணாவும் சாப்பிட்டு பாராட்டினார்கள். அந்த சமயம் பார்த்து சந்தாவிற்கு ஒரு போன் கால் வந்தது. சந்தாவை திருமணம் செய்து கொள்ள நினைக்கும் நபர் தான் போன் செய்து மிரட்டினார். சந்தா என்ன செய்வதென்று புரியாமல் அழுதார். சேரன் சந்தாவிற்கு ஆறுதல் சொல்லி தைரியப்படுத்தினார்.
இன்னொரு பக்கம் சேரன் வீட்டில் எல்லோருமே கலகலப்பாக பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால், பல்லவன் மட்டும் தன்னுடைய அம்மா போனதை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார். வெளியில் நடேசன் சந்தோசமாக பாட்டு கேட்டுக் கொண்டிருந்தார். இதை பார்த்து பல்லவனுக்கு பயங்கர கோபம் வந்தது. நடேசன் உள்ளே வந்தவுடன் அவர் கையில் இருந்த டேப் ரெக்கார்டை வாங்கி கீழே போட்டு உடைத்து நடேசனை ரொம்ப மோசமாக பேசுகிறார் பல்லவன். நிலா தடுத்துமே பல்லவன் கேட்கவில்லை. நடேசனை பல்லவனை திட்டிக் கொண்டிருந்தார்.
அய்யனார் துணை:
பல்லவன், நடேசனை ரொம்ப மோசமாக பேசிக் கொண்டிருந்தார். ஆனால், நடேசன் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். கோபத்தில் பல்லவன், நீ செத்துப் போய் விடு என்று நடேசனை சென்றார். இதனால் கொந்தளித்த நிலா, பல்லவனை கன்னத்தில் அறைந்து திட்டினார். நிலா, அவரைப் பற்றி இனிமேல் வீட்டில் யாராவது என்ன பேசினாலும் வீட்டை விட்டு வெளியே போய் விடுங்கள். அவருக்கு தோன்றும்படிதான் அவர் இருப்பார் என்றெல்லாம் சொன்னார். இதைக் கேட்டு மனம் உடைந்த பல்லவன் வீட்டை விட்டு வெளியே போனார்.
சீரியல் ட்ராக்:
சேரன், பாண்டியன், சோழன் மூவரும் தடுத்துமே பல்லவன் கேட்கவில்லை. பல்லவன் பின்னாடியே நடேசன் பின் தொடர்ந்து சென்று ஓரமாக ஒரு கடையில் பல்லவனை பார்த்துக் கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து காயத்ரி, பல்லவனை பார்த்து பேசி இருந்தார். இன்னொரு பக்கம் வீட்டில் எல்லோருமே பல்லவன் வரவில்லை என்று வருத்தப்பட்டு கொண்டிருந்தார்கள். அப்போது பல்லவனுக்கு போன் செய்த நிலா, இன்னும் அரை மணி நேரத்தில் வீட்டிற்கு வரவேண்டும் என்று சொல்லி போனை வைத்து விட்டார். பின் பல்லவனும் அங்கிருந்து கிளம்பி வீட்டிற்கு வந்தார். நடேசன், பல்லவன் பின்னாடியே வீட்டிற்கு வந்து விட்டார்.
https://www.youtube.com/watch?v=Zxl8SbBPUhM
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகிருக்கும் ப்ரோமோவில் நடேசன், எதற்காக பல்லவனை அடித்தாய் என்று கேட்கிறார். நிலா, அங்கு அடித்தால் இங்கு வலிக்குதோ. நீங்கள் அவர் பின்னாடியே போனதை நான் பார்த்தேன் என்கிறார். அதற்கு பின் நிலா, பல்லவனை அழைத்துக் கொண்டு கோயிலுக்கு போகிறார். அங்கு நிலா, போனவர்களை நினைத்து கவலைப்படுவதில் அர்த்தம் இல்லை. உனக்காக இருக்கும் அண்ணன்களை நினைத்துப் பார் என்றெல்லாம் அறிவுரை சொல்கிறார்.