பல்லவன் கன்னத்தில் பளார் விட்ட சோழன், அதிர்ச்சியில் உறைந்த சேரன் - விறுவிறுப்பில் அய்யனார் துணை

By subhashini · 7/3/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் ராகவை சோழன் அடிவெழுத்து வாங்கி வார்னிங் கொடுத்து விட்டு வந்தார். அதற்குப்பின் வீட்டில் எல்லோருமே சேரன் திருமணத்தை பற்றி பேசி இருந்தார்கள். நடேசன், நிலா எல்லோருமே திருமணத்தை எப்போது நடத்தலாம் என்றார்கள். சேரன், சந்தா அம்மா, அப்பா திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளட்டும். அதற்குப் பிறகு திருமணம் நடத்தலாம் என்று சொல்லிவிட்டார். இன்னொரு பக்கம் பாண்டியன், வானதி தன்னிடம் பேசாததால் ரொம்பவே வருத்தப்பட்டு கொண்டிருந்தார்.

நிலா, சோழன் எல்லோருமே சேரனை திருமணம் செய்து கொள்ள சொன்னார்கள். சேரன், சந்தாவின் பெற்றோர்கள் சம்மதித்த பிறகு திருமணம் செய்து கொள்கிறேன். பாண்டியனுக்கு வேண்டுமென்றால் திருமணம் செய்யலாம் என்றார். பாண்டியன், அண்ணனுக்கு முதலில் நடக்கட்டும். அதற்குப் பிறகு நான் திருமணம் செய்து கொள்கிறேன் என்றார். இருவரும் திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளாததால் நடேசன் எதுவும் பேச முடியவில்லை. அதற்குப்பின் நிலா வேலை தேடி அலைகிறார். எக்ஸ்பீரியன்ஸ் சர்டிபிகேட் இல்லாததால் வேலை கிடைக்கவில்லை.

அய்யனார் துணை:

இதனால் நிலா ரொம்பவே மனமடைந்து போயிருக்கிறார். சோழன், நிலாவிற்கு ஆறுதல் சொன்னார். அப்போது நிலாவின் தோழி போன் செய்து ஒரு ரெஸ்டாரண்டுக்கு வர சொன்னார். அப்போது நிலாவிடம் தோழி, நாங்கள் புதிதாக ஸ்டார்ட் ஆப் கம்பெனி தொடங்கலாம் என்று இருக்கிறோம். அதற்கு நீ 5 லட்சம் ரூபாய் கொடுத்து பார்ட்னர் ஆகி கொள். வேலைக்காக நீ சிரமப்படுகிறாய். அதற்காகத்தான் இதை சொன்னேன் என்றார். பின் சோழன்- நிலா இருவரும் அந்த வேலையைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். நிலா, அவ்வளவு பணம் ரெடி பண்ண முடியாது. அந்த வேலை வேண்டாம் என்று சொல்லப் போகிறேன் என்றார்.

இன்றைய எபிசோட்:

இன்றைய எபிசோட்டில் வானதி பேசாததால் பாண்டியன் ரொம்பவே கவலையில் இருக்கிறார். பின் தன் கடைக்கு வரும் கஸ்டமர்களிடம் இருந்து போன் வாங்கி வானதியிடம் பேசுகிறார். பாண்டியன் குரலை கேட்டவுடன் வானதி ஃபோனை வைத்து விடுகிறார். இன்னொரு பக்கம் பல்லவன், காயத்திரியை அழைத்துக் கொண்டு ஒரு லாஜிக்கு போகிறார். இதை சோழன் பார்த்து விடுகிறார். பின் சோழன், பல்லவன் கன்னத்தில் அறைந்து எதற்காக இப்படி செய்கிறாய் என்று கத்துகிறார். ஆனால், அது சோழனின் கனவு.

சீரியல் ட்ராக்:

சோழன் கூப்பிடுவதறதுக்குள் பல்லவன், காயத்ரி லாஜிக்குள் சென்று விடுகிறார். இன்னொரு பக்கம் கல்லூரியின் நிர்வாகம் சேரனுக்கு போன் செய்கிறார்கள். அப்போது கல்லூரி நிர்வாகம், பல்லவன் ஒரு வாரம் காலேஜுக்கு வரவில்லை என்று சொல்கிறார். அதை கேட்டவுடன் சேரனுக்கு ஒன்றுமே புரியவில்லை.
இன்னொரு பக்கம் பல்லவன் சென்ற லாஜிக்கு போலீஸ் ரைட் போகிறார்கள். சோழன் பயந்து போய் நிற்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full