சேரன் குடும்பத்தினரின் வருகைக்காக காத்திருக்கும் வானதி, பாண்டியன் முடிவு என்ன? அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் அய்யனார் வீட்டில் எல்லோருமே பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்கு தயாரானார்கள். சோழன்- நிலா இருவரும் பொங்கல் வைப்பதற்கு தேவையான பொருட்கள் எல்லாம் வாங்கிக் கொண்டு வந்தார்கள். அப்போது நிலா, தன் வீட்டில் பொங்கல் பண்டிகையை எப்படி எல்லாம் கொண்டாடுவார்கள் என்று சொல்லி ஃபீல் பண்ணினார். சோழனும் அவருக்கு ஆறுதல் சொன்னார். இன்னொரு பக்கம் வானதி, பாண்டியன் இருவரும் பொங்கல் பண்டிகை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.
அப்போது வானதி வேண்டும் என்று வம்பு இழுத்து பாண்டியனிடம் சண்டை போட்டார். பின் இருவரும் ஜாலியாக பேசிக் கொண்டிருப்பதை வானதியின் மாமா பார்த்து விட்டார். இதைப்பற்றி வானதியின் மாமா வீட்டில் சொல்லி இருவருக்கும் திருமணம் செய்து வைக்கலாம் என்றார். உடனே வானதியின் அப்பா- அம்மா இருவருமே சம்மதித்தார்கள். ஆனால், வானதியின் அண்ணன் தான் பிரச்சனை செய்தார். இருந்தாலும் வானதியின் அப்பா அம்மா இருவரும் தன் மகனை திட்டி விட்டு பாண்டியனுக்கே வானதியை திருமணம் செய்து வைக்க முடிவெடுத்து விட்டார்கள்.
அய்யனார் துணை:
பொங்கல் பண்டிகை என்பதால் நிலா, வீட்டில் உள்ள எல்லோரையும் கோலம் போட அழைத்தார். பின் வரைந்த கோலத்தின் மீது நிலா கலர் கொடுக்க சொன்னார். எல்லோரும் நிலா சொல்வதை போல் செய்தார்கள். கோலமும் அழகாக வந்து விடுகிறது. மொத்த குடும்பமும் கோலத்தின் முன்பு நின்று போட்டோ எடுத்துக் கொண்டார்கள். மறுநாள் காலையில் பொங்கல் பண்டிகை என்பதால் நிலா எல்லோரையும் எழுப்பி ரெடியாக சொன்னார்.
சீரியல் ட்ராக்:
வீட்டில் உள்ள எல்லோருமே மும்முரமாக தயாரானார்கள். இன்னொரு பக்கம் வானதி, பாண்டியன் வீட்டிற்கு வருவதற்காக தயாராகி நின்றார். பின் வானதி, பாண்டியன் வீட்டுக்கு பொங்கல் வைக்க போவதாக சொன்னார். உடனே வானதியின் அம்மா, நம் வீட்டில் பொங்கல் வைக்கணும் என்றார். வானதி முடியாது என்றார். வானதி அப்பா, எங்களுக்கு பாண்டியனை உனக்கு திருமணம் செய்து வைக்க சம்மதம். அவர்கள் வீட்டில் வந்து பெண் கேட்க சொல் என்று சொன்னார். இதைக் கேட்டு வானதிக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது.
https://www.youtube.com/watch?v=YyBtiokyGS8
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் வானதி வீட்டில் எல்லோருமே நிச்சயதார்த்தத்திற்கு தயாராக இருக்கிறார்கள். பாண்டியன் குடும்பத்திலிருந்து யாருமே வரவில்லை. இதனால் வானதியின் அப்பா, அம்மா கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்கள். சேரனுக்கு போன் செய்த வானதி, இன்னும் கிளம்பவில்லையா? பாண்டியன் போன் சுவிட்ச் ஆப்பில் இருக்கிறது என்று சொல்கிறார். சேரன், பாண்டியனுக்காக தான் வெயிட் பண்ணுகிறோம் என்கிறார். இன்னொரு பக்கம் பாண்டியன், வானதி நிலாவை வீட்டை விட்டு அனுப்ப சொன்ன விஷயத்தை நினைத்து வருத்தப்பட்டு கொண்டு இருக்கிறார்.