பாண்டியனுக்காக காத்து கொண்டு இருக்கும் வானதி, தேடி அலையும் சோழன் - பரபரப்பில் அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நடேசன், இந்த கல்யாணம் வேண்டாம். பாண்டியன் வாழ்க்கை வீணாகி விடும். அந்த பொண்ணு இந்த வீட்டிற்கு சரியாக இருக்காது என்றார். பாண்டியனால் எதுவுமே பேச முடியவில்லை, அமைதியாகவே இருந்தார். சேரன், நாளை வானதி வீட்டுக்கு போகலாம் என்றார். அதற்குப்பின் ஆபீஸில் ராகவ், வாழ்த்து சொன்னால் இப்படியா மோசமாக மெசேஜ் அனுப்புவது என்று கண்டமேனிக்கு திட்டிக் கொண்டிருந்தார். நிலாவால் எதுவுமே பேச முடியவில்லை. பின் தன்னுடைய தோழியிடம் நிலா வேலைக்கு ஏற்பாடு செய்ய சொல்லி கேட்டார்.
வானதி, சீக்கிரமாக என்னை பெண் கேட்டு வீட்டிற்கு வாருங்கள் என்று சந்தோசமாக சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால், பாண்டியனுக்கு அதில் விருப்பமே இல்லை. தயங்கிக் கொண்டே இருந்தார். இன்னொரு பக்கம் பல்லவன் காயத்ரி ரோட்டில் வந்து கொண்டிருந்தார்கள். அப்போது சோழனை பார்த்தவுடன் பல்லவன், காயத்ரியை தனியாக அழைத்து சென்று ஒளிந்து கொண்டார். பல்லவன், இந்த விஷயம் சோழனுக்கு தெரிய வேண்டாம் என்றார். பின் வீட்டிற்கு வந்த நிலா, எதற்காக ராகவிற்க்கு மோசமாக மெசேஜ் அனுப்பி இருந்தீர்கள்.
அய்யனார் துணை:
உங்களால் நான் அவமானப்பட்டு நின்றேன் என்று நடந்ததை எல்லாம் சொன்னார். சோழன் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். இருவரும் சண்டை போடுவதைப் பார்த்து சேரன் விசாரித்தார். நிலா, ஆபீசில் நடந்தது எல்லாம் சொல்லி பாண்டியனுக்கும் உங்களுக்கும் திருமணம் முடிந்த உடனே நான் விவாகரத்து வாங்கிக்கொண்டு இந்த வீட்டை விட்டும் இந்த ஆளை விட்டும் சென்று விடுவேன் என்று சோழனை பார்த்து சொன்னார். இதனால் சோழன் உடைந்து போனார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சேரன், பாண்டியனுக்கு ஒரு நல்லது நடக்கப்போகிறது என்பதால் நான் அமைதியாக இருக்கிறேன். தயவு செய்து என்னை எதுவும் பேச வைக்காதே என்று சென்று விடுகிறார். பின் வீட்டில் உள்ள எல்லோருமே பாண்டியன் விசேஷத்திற்கு ரெடியாகிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், பாண்டியன் மட்டும் வரவில்லை. சோழன், பாண்டியனுக்கு போன் செய்கிறார். போன் சுவிட்ச் ஆப்பில் இருக்கிறது. இன்னொரு பக்கம் வானதி வீட்டில் எல்லோரும் தயாராக இருக்கிறார்கள். வானதியின் அண்ணனுக்கு மட்டும் இந்த விசேஷத்தில் விருப்பமில்லை. இருந்தாலும் வானதிக்காக அவருடைய பெற்றோர்கள் தயாராகி இருக்கிறார்கள்.
சீரியல் ட்ராக்:
பின் பாண்டியன் வராததால் வீட்டில் உள்ள எல்லோருமே பதட்டப்படுகிறார்கள். வானதி, பாண்டியனுக்கு போன் செய்கிறார். ஆனால் போன் சுவிட்ச் ஆப்பில் இருக்கிறது. வானதிக்குமே ஒன்றுமே புரியவில்லை.
இன்னொரு பக்கம் பாண்டியன், வானதி பேசியதை எல்லாம் நினைத்துப் பார்க்கிறார். . பின் இன்னொரு பக்கம் சோழன், பாண்டியன் தேடி செல்கிறார். அப்போது பாண்டியனுக்கு போன் செய்த
சோழன், கண்டமேனிக்கு திட்டுகிறார். அப்போது பாண்டியன், வானதி வீட்டுக்கு போக வேண்டாம். எல்லோரும் வீட்டிலேயே இருங்கள் என்று சொல்கிறார். இதைக்கேட்டு சோழனுக்கு ஷாக்காக இருக்கிறது