பாண்டியன் எடுத்த அதிரடி முடிவு, நிலா சொன்ன வார்த்தையால் உடைந்து போன சேரன் - அய்யனார் துணை

By subhashini · 25/2/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் வானதி, எங்கள் வீட்டில் திருமணத்திற்கு ஒத்துக்கொண்டார்கள். நீங்கள் எல்லோரும் என்னை பெண் கேட்டு வீட்டுக்கு வாருங்கள் என்றார். வீட்டில் எல்லோருமே சந்தோஷப்பட்டார்கள். ஆனால், பாண்டியன் முகம் மட்டும் மாறுகிறது. பாண்டியனுக்கு அதில் உடன்பாடு இல்லை. எதுவுமே சொல்லாமல் பாண்டியன் அமைதியாக இருந்தார். அதற்குப்பின் சேரன் வீட்டிற்கு சந்தா-அனிஷ் இருவரும் வந்தார்கள். சந்தா வந்தவுடன் சேரனுக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. பின் சந்தா- சேரன் இருவரையும் சேர்ந்து நிலா போட்டோ எடுத்துக் கொண்டிருந்தார்.

இதை பார்த்து வானதிக்கு பொறாமையாக இருக்கிறது. அதற்குப்பின் சோழன், நிலா இருவரும் போட்டோ எடுத்து கொண்டிருந்தார்கள். அப்போது ராகவ், நிலாவிற்கு பொங்கல் வாழ்த்து சொல்லி இதுதான் உனக்கு தனியாக கொண்டாடும் கடைசி பொங்கல். அடுத்த வருடத்தில் இருந்து நாம் சேர்ந்து கொண்டாடுவோம் என்றார். இதனால் கடுப்பான சோழன், ராகவை திட்டி மெசேஜ் அனுப்பி விட்டார். இன்னொரு பக்கம் பல்லவன், சக்கரை பொங்கலை எடுத்துக்கொண்டு காயத்ரி பார்க்கப் போனார். அங்கு இருவரும் நன்றாக பேசிக் கொண்டிருந்தார்கள்.

அய்யனார் துணை:

இன்றைய எபிசோட்டில் வானதி, நான் எவ்வளவு சந்தோஷமான விஷயத்தை சொல்கிறேன். நீ எதற்காக அமைதியாக இருக்கிறாய் என்கிறார். பாண்டியன், முதலில் சேரன் அண்ணனுக்கு கல்யாணம் ஆகணும் என்கிறார். வானதி, உங்க அண்ணனுக்கு பொண்ணு தான் ரெடியா இருக்கிறது. அவர்களுக்கு சீக்கிரம் முடிந்து விடும். வேற என்ன பிரச்சனை என்கிறார். பாண்டியன், எல்லோரும் தங்குவதற்கு ரூம் வேண்டும் என்கிறார். வானதி, உங்கள் அண்ணி ஹாஸ்டலில் தங்கி கொள்ளட்டும். அவர்களை வெளியே அனுப்பி விடு என்கிறார். இதனால் பாண்டியன் கோபப்பட்டு பேசுகிறார். பின் வானதி-பாண்டியன் இருவருக்கும் வாக்குவாதம் நடக்கிறது.

சீரியல் ட்ராக்:

அப்போது பல்லவன் வந்ததால் பாண்டியன் அமைதியாகி விடுகிறார். அதற்குப்பின் வானதி சென்ற பின் சேரன், பெண் கேட்க வானதி வீட்டிற்கு போகும் விஷயத்தை பற்றி சொல்கிறார். நடேசன், இந்த கல்யாணம் வேண்டாம். பாண்டியன் வாழ்க்கை வீணாகி விடும். அந்த பொண்ணு இந்த வீட்டிற்கு சரியாக இருக்காது என்று சொல்கிறார். பாண்டியனால் எதுவுமே பேச முடியவில்லை, அமைதியாகவே இருக்கிறார். சேரன், நாளை வானதி வீட்டுக்கு போகலாம் என்கிறார். அதற்குப்பின் ஆபீஸில் ராகவ், வாழ்த்து சொன்னால் இப்படியா மோசமாக மெசேஜ் அனுப்புவது என்று கண்டமேனிக்கு திட்டிக் கொண்டிருக்கிறார். நிலாவால் எதுவுமே பேச முடியவில்லை. பின் தன்னுடைய தோழியிடம் நிலா வேலைக்கு ஏற்பாடு செய்ய சொல்லி கேட்கிறார்.

https://www.youtube.com/watch?v=ZdzEWAgT1Y0

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகிருக்கும் ப்ரோமோவில் பாண்டியன், வானதி வீட்டிற்கு போக வேண்டாம். நான் அவர்களிடம் பேசிவிட்டேன். சேரன் அண்ணனுக்கு கல்யாணம் ஆன பிறகு தான் எனக்கு கல்யாணம் என்று சொல்கிறார். பின் வானதி வீட்டிலும் இதையே பாண்டியன் சொல்லி இருக்கிறார். அதற்கு சோழன், உடனே பீகாரருக்கு போவோம். சந்தாவை பொண்ணு கேட்போம் என்று சொல்கிறார்.நிலா, முதலில் பாண்டியனுக்கு கல்யாணம் ஆகட்டும். அதற்குப் பிறகு சேரன் அண்ணனுக்கும் கல்யாணம் ஆகட்டும். அதற்கு பிறகு இந்த ஆளுக்கு ஒரு கும்பிடு போட்டு நான் வீட்டை விட்டு வெளியே போய் விடுவேன் என்று சொல்கிறார். இதையெல்லாம் சேரன், நிலா சொன்னதை நினைத்து பார்க்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full