வானதி அண்ணன் செய்த வேலையால் கொந்தளித்த நடேசன், பாண்டியன் என்ன செய்ய போகிறார்? அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சோழன், இனி நிலா உன்னை அண்ணா என்று கூப்பிட கூடாது.. நீயே அவளிடம் எடுத்து சொல்லி புரிய வை என்று தன்னுடைய சேரன் அண்ணனிடம் சொன்னார். அதுக்குப்பின் சேரன், இனிமேல் நீ என்னை அண்ணா என்று அழைக்காதே என்றார். இதைக் கேட்டு வேதனைப்பட்ட நிலா, கதறி அழுதார். உடனே சேரன், நீ எனக்கு தங்கை, நான் உனக்கு அண்ணா தான். உன்னுடைய குழந்தைங்களுக்கும் தாய் மாமன் நான் தான். என்னுடைய மடியில் தான் குழந்தைகளுக்கு காது குத்தணும் என்றெல்லாம் பாசமலர் கதையை ஓட்டினார்கள்
இதெல்லாம் பார்த்து சோழனுக்கு பயங்கர கடுப்பானது. பின் தன் அண்ணனை அழைத்து திட்டிய சோழன், நான் உனக்கு தம்பி இல்லை என்று எப்படியாவது நிலாவிடம் சொல்லுங்க என்றார். அதற்குப்பின் நிலாவிடம் சேரன், இவன் எனக்கு தம்பி கிடையாது. மாமன் பையன். உனக்கும் முறைமாமன் தான் என்று சொன்னார். இதெல்லாம் நிலவிற்கு ஒண்ணும் புரியவில்லை. நிலா, உங்களுக்கு அப்பா அம்மா வேறு வேறா? என்று கேட்டவுடன் சேரன் சுதப்பி விட்டார். பின் சோழன் எதையோ சொல்லி நிலாவை அனுப்பி விட்டார்.
அய்யனார் துணை:
நேற்று எபிசோட்டில் நிலா, வீட்டில் உள்ள எல்லோரையுமே அலைத்து தன்னுடைய விவாகரத்து விஷயத்தை பற்றி சொன்னார். எல்லோருக்குமே ஷாக் ஆனது. சோழன் என்ன சொல்வது என்று தெரியாமல் அமைதியாக இருந்தார். சேரன் எடுத்து சொல்லியுமே நிலா கேட்கவில்லை. நிலா, இது பொய்யான திருமணம் தான். விவாகரத்து செய்து கொள்வது தான் சரி என்றார். சோழன் சோகத்தில் இருப்பதால் சேரன் ஆறுதல் சொன்னார். ஆனால், சோழன் தன்னோட அண்ணன் மீது கோபப்பட்டு அங்கிருந்து சென்றார். இன்னொரு பக்கம் பாண்டியன்- வானதி இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.
நேற்று எபிசோட்:
இதை பார்த்த வானதியின் அண்ணன் கோபப்பட்டு வீட்டில் தன்னோட பெற்றோர்களிடம் சொன்னார். இதனால் வானத்தின் அப்பா, பாண்டியன் குடும்பத்தை பற்றியும் மோசமாக பேசினார்கள். இருந்தாலும் வானதி விட்டுக் கொடுக்காமல் பேசி இருந்தார். அதற்குப்பின் வானதி அண்ணன் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து பாண்டியன் வீட்டிற்கு சென்றார். அப்போது சேரன், அவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் சேர்த்து வைத்து விடலாம் என்றார். இதனால் கோபத்தில் வானதியின் அண்ணன்- சோழன் இருவருக்கும் இடையே அடிதடி ஆனது.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்று எபிசோட்டில் சோழன், நிலா இருவருமே சேர்ந்து வக்கீலை சந்தித்து விவாகரத்து பற்றி பேசுகிறார்கள். அப்போது வக்கீல், விவாகரத்துக்கான காரணத்தை கேட்கிறார். அதற்கு நிலா, சேர்ந்து வாழ விருப்பமில்லை. நிலா சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்று சொல்கிறாள். அதற்கு பின் இருவருமே விவாகரத்திற்கு தேவையான ஏற்பாடுகள் எல்லாம் செய்துவிட்டு வெளியே வருகிறார்கள். அப்போது youtube ஒருவர், நிலா-சோழன் இருவரையும் பேட்டி எடுக்கிறார்கள். அவர்கள் இருவருமே ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட விஷயத்தை பற்றி சொல்கிறார்கள்.
சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் வீட்டிற்கு வந்த நிலாவிடம், வானதியின் அண்ணன் சண்டை போட்ட விஷயத்தை பற்றி சேரன் சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த சமயம் பார்த்து பாண்டியன் வந்தவுடன் வீட்டில் உள்ள எல்லோரும் அமைதியாக இருக்கிறார்கள். அப்போது நடேசன், வானதியின் அண்ணன் வீட்டில் செய்த பிரச்சினையை பற்றி பாண்டியனிடம் சொல்கிறார். இதைக் கேட்டு பாண்டியன் கோபப்பட்டு வானதியின் வீட்டிற்கு போக பார்க்கிறார். ஆனால், சேரன் தடுத்து நிறுத்தி சமாதானம் செய்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.