தன் குடுமபத்திற்காக பாண்டியன் எடுத்த முடிவு, வானதி நிலை என்ன? விறுவிறுப்பில் அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் வானதி- பாண்டியன் இருவரும் பேசுவதை பார்த்து வானதி அண்ணன் அடித்து வானதியை இழுத்துக்கொண்டு வீட்டுக்குப் போனார். வீட்டில் அவருடைய அம்மா, அப்பா எல்லோருமே வானதியிடம் சண்டை போட்டார்கள். வானதி, நான் பாண்டியனை தான் திருமணம் செய்து கொள்வேன். அதில் எந்த மாற்றமும் இல்லை என்றார். இருந்தாலும் வானதியை அவர் அம்மா அடித்துக் கொண்டிருந்தார். அவர் அப்பா எவ்வளவு சொல்லியுமே கேட்கவில்லை.
நேற்று எபிசோட்டில் வானதியை பார்க்க சென்ற விஷயத்தை பாண்டியன் வீட்டில் சொன்னவுடன் நிலா திட்டிக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் வானதியின் அம்மா, அவருடைய அண்ணனும் போட்டு அடித்தார்கள். பாண்டியனை மறந்து இருப்பது என்றால் இந்த வீட்டில் இரு, இல்லை என்றால் வெளியே போ என்று சொன்னார்கள். இதனால் வானதி தன்னுடைய பெற்றோர்களின் பேச்சை மீறி வீட்டை விட்டு வெளியே வந்து பாண்டியன் வீட்டிற்கு வந்துவிட்டார். என்ன நடந்தது என்று பாண்டியன் வீட்டில் விசாரித்தார்கள். அப்போது வானதி வீட்டில் நடந்ததை சொன்னார்.
அய்யனார் துணை:
உடனே சோழன், இருவருக்குமே திருமணம் செய்து வைத்துவிடலாம் என்றார். ஆனால், நிலா- சேரன் இருவரும் யோசித்து முடிவெடுக்கலாம் என்றார். பின் பாண்டியன், சேரன் அண்ணனுக்கு திருமணம் ஆகாமல் எனக்கு வேண்டாம் என்றெல்லாம் யோசித்தார். ஆனால், வானதி திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்தார். பின் சேரன்- நிலா, இருவருமே எதுவாக இருந்தாலும் சீக்கிரம் முடிவெடுங்கள் என்றார். அதற்குப்பின் பாண்டியன்- வானதி இருவருமே தனியாக பீச்சுக்கு சென்று பேசினார்கள். அப்போது பாண்டியன், தன் மனதில் இருக்கும் காதலை சொன்னார்.
இன்றைய எபிசோட்:
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் பாண்டியன், எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். ஆனால், சேரன் அண்ணாவுக்கு இன்னும் திருமணமாகவில்லை. எங்கு போனாலும் அவருடைய தம்பிக்கு திருமணம் ஆனதை குறை சொல்கிறார்கள். நானும் திருமணம் செய்து கொண்டால் அவருக்கு கடைசிவரை கல்யாணம் ஆகாது என்றெல்லாம் எமோஷன் ஆக பேசுகிறார். இதைக் கேட்டு வானதி, நான் வீட்டிற்கு போகிறேன். சீக்கிரமாகவே நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்கிறார். பாண்டியன், பிரச்சனை இல்லையா? வீட்டில் உன்னை ஏற்றுக்கொள்வார்களா? என்கிறார். வானதி, நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்கிறார்.
சீரியல் ட்ராக்:
அதற்குப் பிறகு பாண்டியன், ஒரு புது மொபைலை வாங்கி தருகிறார். பின் வானதியின் வீட்டிற்கு இருவருமே போகிறார்கள். வானதிக்கு ஒன்றென்றால் நான் கேட்பேன் என்று சொல்லிவிட்டு பாண்டியன் கிளம்புகிறார். பின் வீட்டில் எல்லோருமே வானதியை கண்ட மணிக்கு பேசுகிறார்கள். அதற்கு வானதி, நான் இங்குதான் இருப்பேன். பாண்டியனை தான் கல்யாணம் செய்து கொள்வேன் என்று சொல்லி ரூமுக்குள் சென்று விடுகிறார். இன்னொரு பக்கம் சேரன் வீட்டில் எல்லோருமே புலம்பி கொண்டிருக்கிறார்கள். அப்போது வந்த பாண்டியன், வானதியை வீட்டில் விட்டேன். அவள் படிப்பு முடியட்டும் கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.