சோழன்-பாண்டியன் இடையே வெடித்த கலவரம், நிலா சொன்ன வார்த்தை - பரபரப்பில் அய்யனார் துணை

By subhashini · 6/5/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நிலா பேசுவதை பார்த்து ரொம்ப பெருமைப்பட்டார். அதற்குப்பின் அய்யனார் வீட்டில் எல்லோருமே ஒன்றாக சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது பாண்டியன் சோகமாக இருப்பதை பார்த்து எல்லோருமே விசாரித்தார்கள். பாண்டியனும் நடந்ததை சொன்னார். பின் பாண்டியன் சோகமாக இருப்பதை பார்த்து சோழன்- நிலா இருவரும் அறிவுரை சொன்னார்கள். இருந்தாலும் வானதி பேசியது நினைத்து பாண்டியன் வருத்தப்பட்டு கொண்டிருந்தார்.

பாண்டியன் சோகமாக இருப்பதால் நிலா-சோழன் இருவரும் சேர்ந்து வானதியிடம் பேச போனார்கள். சோழன் கேட்கும் கேள்விக்கெல்லாம் வானதி நக்கல் ஆகவே பதில் அளித்தார். நிலா, இப்பதானே காலேஜ் படிக்கிறாய். கல்யாணத்தைப் பற்றி பிறகு யோசிக்கலாம் என்றார். வானதி முகத்தில் அடித்தது போல நிலாவை பார்த்து, நீங்களும் காலேஜ் முடித்தவுடன் தானே கல்யாணம் செய்து கொண்டீர்கள் என்று கேட்டார். அதோடு நிலாவை ரொம்பவே அவமரியாதையாக பேசி என் விஷயத்தில் தலையிட வேண்டாம் என்று வானதி சொல்லிவிட்டார்.

அய்யனார் துணை:

இதனால் சோழனுக்கு கோபம் வந்து வானதியை திட்டினார். பதிலுக்கு பதில் இருவரும் பேசிக் கொண்டார்கள். அதற்குப்பின் நிலா, நான் தான் தெரியாமல் இவர்கள் விஷயத்தில் தலையிட்டேன். சாரி என்று சொல்ல, சோழன் ஆறுதல் சொன்னார். அதற்குப்பின் பாண்டியனை சந்தித்த வானதி, நீ உன் குடும்பத்தை அனுப்பி என்னிடம் பேச வைத்து கல்யாணத்தை நிறுத்த பார்க்கிறாயா? நிலா-சோழன் இருவரும் பேசியதை எல்லாம் நக்கலாக பேசி வானதி வம்பு இழுத்தார். பாண்டியனுமே பதிலுக்கு வானதியை திட்டி அங்கிருந்து அனுப்பி விட்டார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சேரன், சந்தவுடன் போனில் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது வந்த பாண்டியன், வானதியிடம் எதற்காக பொய் பேசினீர்கள்? என்று கேட்கிறார். சோழன், நீ ரொம்ப சோகத்தில் இருந்தாய். அதனால் தான் நானும் நிலவும் பேச போனோம் என்று சொல்கிறார். பாண்டியன், நான் தான் எதுவும் செய்ய வேண்டாம் என்று சொன்னேன் தானே, அதற்குப் பிறகும் எதற்காக பேசினீர்கள்? என்று சொல்லி வாக்குவாதம் அதிகம் ஆகிறது. ஒரு கட்டத்தில் பாண்டியன், சோழனை அடிக்கிறார். பின் இருவருமே பயங்கரமாக அடித்து சண்டை போட்டுக் கொள்கிறார்கள்.

சீரியல் ட்ராக்:

அப்போது அங்கு வந்து நிலா, சண்டையை நிறுத்தி உங்கள் விஷயத்தில் தலையிட்டது தவறுதான் என்று பாண்டியனிடம் மன்னிப்பு கேட்டு அங்கிருந்து சோழனை அழைத்துச் செல்கிறார். சிறிது நேரம் கழித்து பாண்டியன், நிலாவிடம் மன்னிப்பு கேட்கிறார். நிலா அமைதியாக இருக்கிறார். அப்போது நடேசன், உங்கள் எல்லோருக்கும் ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கப் போகிறேன். யாரும் எங்கும் போகக்கூடாது. வீட்டிலேயே இருங்கள் என்று சொல்லி விட்டு செல்கிறார். ஒரு இடத்தில், நடேசன் ஒரு டெம்போ வண்டியை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வருகிறார். அதை பார்த்து சோழன், பாண்டியன், சேரன், நிலா எல்லோருமே சாக் ஆகிறார்கள்.

behindtalkies AMP · Quick view
View full