நடுரோட்டிலே சண்டை போட்டுக்கொள்ளும் வானதி- பாண்டியன், புலம்பும் சோழன் - அய்யனார் துணை

By subhashini · 31/1/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நிலா, நான் அப்படியெல்லாம் எதுவும் சொல்லவில்லை. ஹக் மட்டும்தான் பண்ணேன் என்றார். இதனால் பல்லவன், பாண்டியன் எல்லோருமே மாறி மாறி சோழனை கிண்டல் செய்தார்கள். இதனால் கோபப்பட்ட சோழன் எல்லோரிடமும் சண்டை போட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியே போனார். அதற்குப்பின் சோழன் வீட்டிற்கு வந்தார். இருந்தாலும் சோழன் வந்தது தெரியாமல் பாண்டியன் குறை பேசிக் கொண்டிருந்தார். இதனால் கோபப்பட்ட சோழன், மீண்டும் எல்லோரிடமும் சண்டை போட்டு வெளியே போனார்.

நிலா, சோழனை சமாதானம் செய்ய பேசி இருந்தார். சோழன் கோபமாக பேசிவிட்டு சவாரிக்கு கிளம்பினார். இது எல்லாம் நினைத்து நிலா வருத்தப்பட்டு கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து நிலாவிற்கு ராகவ் மெசேஜ் செய்தார். நிலா ரிப்ளை செய்யாமல் தான் இருந்தார். இருந்தாலுமே விடாமல் ராகவ் மெசேஜ் செய்து கொண்டிருந்தார். பின் ராகவ் போன் செய்தார். இதெல்லாம் பார்த்து நிலாவிற்கு கோபம் தான் வருகிறது.

அய்யனார் துணை:

அதற்குப் பின் சோழன் சொன்ன விஷயத்தைப் பற்றி பாண்டியன், சேரன் இருவரும் நிலாவிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். பாண்டியன் ரொம்ப சந்தோசமாக சிரித்துக்கொண்டு நிலாவிடம் பேசுவதை வானதி பார்த்து விட்டார். இதனால் நிலாவின் மீது வானதிக்கு பயங்கர கோபம் வந்தது. அதற்குப்பின் ஆபீஸில் ராகவ், நிலாவிற்காக ஒரு வாட்சை கிப்டாக கொடுத்தார். பின் ராகவ் அதை ஸ்டேட்டஸிலும் வைத்திருந்தார். அதை சோழன் பார்த்துவிட்டு பயங்கரமாக கோபப்பட்டார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சோழன், ராகவ் செய்த வேலையால் ரொம்பவே கோபப்படுகிறார். பின் வீட்டிற்கு வந்த சோழன் புலம்பி கொண்டிருக்கிறார். நடேசன், தான் வாங்கி வந்த சாப்பாட்டை சோழனுக்கு கொடுத்து சாப்பிட சொல்கிறார். அப்போது சோழன், ரொம்ப எமோஷன் ஆக தன்னுடைய வாழ்க்கையை பற்றி புலம்பி கொண்டிருக்கிறார். நடேசன் அறிவுரை சொல்கிறார். இன்னொரு பக்கம் பாண்டியன் தன்னுடைய கடைக்கு தேவையான பொருட்களை எல்லாம் வாங்குவதற்க்கு பெங்களூர் கிளம்புகிறார்.

சீரியல் ட்ராக்:

அந்த சமயம் வந்த வானதி, நானும் பெங்களூர் வருகிறேன் என்று அடம் பிடிக்கிறார். பாண்டியன் வேண்டாம் என்று சொல்லியும் வானதி கேட்கவில்லை. ஒரு வழியாக வானதி பாண்டியனுடன் வருகிறார். பின் பாண்டியன் தன்னுடைய வேலைகளை செய்து கொண்டிருக்கிறார். அப்போது வானதி, நேரமாகிவிட்டது வீட்டிற்கு போகவேண்டும் என்று சண்டை வாங்குகிறார். இதனால் கோபப்பட்ட பாண்டியன், இதனால் தான் நான் வேண்டாம் என்று சொன்னேன். இதற்காக மீண்டும் காசு போட்டு செலவு செய்து வர முடியாது. எவ்வளவு நேரம் ஆனாலும் பொருள்களை எல்லாம் வாங்கிக் கொண்டுதான் போகணும் என்று கருதுகிறார். வானதி எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full