போலீசில் சிக்கி கொள்ளும் பல்லவன், உண்மை அறிந்த சேரன்- சோழன் என்ன செய்ய போகிறார்கள்? அய்யனார் துணை

By subhashini · 4/3/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் பாண்டியன், சேரன் அண்ணனுக்கு கல்யாணம் நடக்கணும். அது மட்டும் இல்லாமல் எனக்கும் வானதிக்கும் கல்யாணத்திற்கு பிறகு செட் ஆகுமா? தெரியவில்லை. எல்லாம் யோசித்து தான் முடிவு எடுக்கணும். கல்யாணத்தை நினைத்தால் குழப்பமாக இருந்தது. அதனால் தான் என்னால் எந்த ஒரு முடிவும் எடுக்க முடியவில்லை என்றார். நிலா, வானதி வீட்டில் பிரஷர் கொடுப்பார்கள். அதனால் தான் வானதி கோபப்பட்டார். எதுவாக இருந்தாலும் யோசித்து முடிவெடுங்கள். ரெண்டு பேரும் புரிந்து கொள்ளுங்கள் என்று சொன்னார். அதற்குப்பின் நிலா- சோழன் இருவரும் சந்தாவின் வீட்டிற்கு போனார்கள்.

அப்போது நிலா, சேரனுக்கு சந்தாவை திருமணம் செய்து வைப்பது பற்றி பேசி இருந்தார். சந்தா ரொம்பவே சந்தோஷப்பட்டார். அனிஷ், திருமணத்திற்கு ஒத்துக்கொண்டார். அதோடு தன்னுடைய பெற்றோர்கள் திருமணத்திற்கு ஒத்துக்க மாட்டார்கள் என்பதால் சென்னையிலேயே திருமணத்தை முடித்து விடலாம் என்றார். இன்னொரு பக்கம் பாண்டியன், வானதி கடைக்கு வராததால் ரொம்ப வருத்தப்பட்டார். பின் வானதிக்கு பாண்டியன் போன் செய்தார். வானதி, பாண்டியனை பிளாக் செய்து வைத்தார். வேறொரு மொபைலில் இருந்து பாண்டியன், வானதிக்கு போன் செய்தார். பாண்டியன் குரலை கேட்டவுடன் வானதி ஃபோனை வைத்து விட்டார்.

அய்யனார் துணை:

இன்றைய எபிசோட்டில் அனீஸ், சோழன்- நிலா இருவரும் திருமணத்தைப் பற்றி பேசுவதற்கு தங்கள் வீட்டிற்கு வந்ததை சொல்கிறார். சேரனுக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை. அனீஸ், எங்களுக்கு திருமணத்தில் முழு சம்மதம். சென்னையிலேயே நடத்திக் கொள்ளலாம் என்கிறார். சேரன் அமைதியாகவே இருக்கிறார். இன்னொரு பக்கம் ராகவ், நீங்கள் வேறொரு இடத்தில் வேலை தேடுகிறீர்களா? என்கிறார். நிலா, ஆமாம் என்று சொல்கிறார். ராகவ், எதற்காக இப்படி செய்கிறீர்கள். நான் ஒர்க் எக்ஸ்பீரியன்ஸ் சர்டிபிகேட் தரவில்லை என்றால் உங்களால் எங்கும் வேலை பார்க்க முடியாது என்கிறார். நிலா, எனக்கு நியாயமாக தரவேண்டிய சர்டிபிகேட் நீங்கள் தரவில்லை என்றாலும் என்னுடைய திறமைக்கு வேலை கிடைக்கும்.

சீரியல் ட்ராக்:

இனிமேல் இங்கு என்னால் வேலை செய்ய முடியாது என்கிறார். ராகவ், வேலை இல்லாமல் நீ என்ன கிழிக்கிறாய் என்று பார்க்கிறேன் என்கிறார். இன்னொரு பக்கம் வானதியை பார்க்க பாண்டியன் வீட்டிற்கு வருகிறார். வானதி கண்டு கொள்ளவே இல்லை. இதை கவனித்த வானதியின் பெற்றோர்கள், இவர்கள் சீக்கிரத்தில் பிரிந்து விடுவார்கள். நல்ல ஒரு ஃபாரின் மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் செய்துவிடலாம் என்று சொல்கிறார். இன்னொரு பக்கம் வேலையை சோழனை பார்த்த நிலா, ஆபீஸில் நடந்ததை எல்லாம் சொல்லி எமோஷனலாக அழுகிறார். சோழனுமே அழுகிறார். பின் நிலாவிற்கு சோழன் ஆறுதல் சொல்கிறார்.

https://www.youtube.com/watch?v=LLCdn9isZXY

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகிருக்கும் ப்ரோமோவில் கல்லூரியில் இருந்து சேரனுக்கு போன் செய்து பல்லவன் கல்லூரிக்கு வருவதில்லை என்று சொல்கிறார். இதை கேட்டு சேரன் ஷாக் ஆகிறார். இன்னொரு பக்கம் காயத்ரியை பல்லவன் அழைத்துக்கொண்டு ஹோட்டலுக்கு சென்று பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வந்து போலீஸ் ரைடு நடத்தி இருக்கிறார்கள். போலீஸ், பல்லவனை கைது செய்கிறார்கள்.
சோழன், எவ்வளவோ போலீஸிடம் கெஞ்சி கேட்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full