சோழனை கைது செய்து அடித்து துன்புறுத்தும் போலீஸ், பதறும் நிலா, அடுத்து என்ன? அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சேரன், நிலாவை சாப்பிட சொன்னார். அப்போது அந்த ஹிந்தி பெண், நான் சாப்பாட்டை அதிகமாக தான் எடுத்து வந்திருக்கிறேன். எல்லோருமே சேர்ந்து சாப்பிடலாம் என்று சொன்னார்கள். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த நிலா, புதிதாக வேலை கிடைத்திருப்பதால் எல்லோருக்குமே துணி வாங்கி தந்தார். ஆனால், சோழனுக்கு மட்டும் தரவில்லை. வீட்டில் உள்ள எல்லோருமே சந்தோஷப்பட்டார்கள். சோழன் மட்டும் வருத்தத்தில் இருந்தார். அதற்குப் பின் நிலா, சோழனுக்கு வாங்கிய துணியை கொடுத்தார். அதை பார்த்து சோழன் ரொம்பவே சந்தோஷப்பட்டார்.
மறுநாள் காலையில் நிலா வேலைக்கு தயாராகி கிளம்பினார். அப்போது சேரன், நிலா முதல் நாள் வேலைக்கு போவதால் வீட்டில் பொங்கல் செய்து தந்தார். வீட்டில் உள்ள எல்லோருமே நிலா வேலைக்கு செல்வதால் சந்தோஷமாக தங்களால் முடிந்த கிப்டுகளை கொடுத்தார்கள். பல்லவன் பட்டாசு வெடிவைத்து கொண்டாடி இருந்தார். பல்லவனின் அப்பா, தன் மருமகள் வேலைக்கு போவதால் டான்ஸ் ஆடி கொண்டிருந்தார். நேற்று எபிசோட்டில் நிலா, முதல் நாள் ஆபிஸ்க்கு சென்றதால் அங்குள்ள கம்பெனியின் ஓனர் கேக் வெட்டி செலபிரேட் செய்தார்.
அய்யனார் துணை:
பின் கம்பெனியில் நிலாவிற்கு தோழி கிடைத்து விட்டார். நிலா வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு வரும் வழியில் பல்லவனின் அம்மாவை பார்த்து அதிர்ச்சி ஆனார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த நிலாவிடம், முதல் நாள் வேலையை பற்றி விசாரித்தார்கள். அதற்குப்பின் நிலா, நடேசன் இடம் பல்லவனின் அம்மாவை பற்றி விசாரித்தார். ஆனால், அவர் எதுவுமே சொல்லாமல் அமைதியாக இருந்தார். உடனே நிலா, நான் பல்லவன் அம்மாவை சென்னையில் பார்த்தேன் என்று சொன்னவுடன் நடேசன் ஷாக் ஆனார்.
நேற்று எபிசோட்:
நேற்று எபிசோட்டில் நிலாவிற்காக சேரன் பாத்ரூம் கட்டுவதற்கான வேலைகள் எல்லாம் தங்களுடைய வீட்டிற்கு பின்னாடி பார்த்துக் கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து நடேசன் அண்ணா பிரச்சினை செய்தார். கேஸ் நடக்கும்போது இந்த மாதிரியெல்லாம் செய்யக்கூடாது. நான் போலீஸில் கம்ப்ளைன்ட் கொடுப்பேன் என்றெல்லாம் மிரட்டி இருந்தார். இதனால் கோபப்பட்ட நடேசன், தன்னுடைய அண்ணனை தனியாக அழைத்து சென்று, நீ பிரச்சனை செய்யாமல் அமைதியாக இருந்தால் நானும் எதுவும் பண்ண மாட்டேன்.
சீரியல் ட்ராக்:
இப்படியே திருமணத்திற்கு முன் உன் மகள் என்னுடைய வீட்டிற்கு வந்த விஷயத்தை எல்லாம் மாப்பிள்ளை வீட்டில் சொல்லி விடுவேன் என்றார். இதை கேட்டு நடேசன் அண்ணன் எதுவுமே பேசாமல் அமைதியாக சென்று விட்டார். அதற்குப்பின் வேலைகளை நடேசன் மகன்கள் செய்தார்கள். இன்னொரு பக்கம் நிலா ஆபீஸில் வேலை செய்து கொண்டிருந்தார். ஒரு டிசைனை வரைந்து கொண்டு போய் கொடுத்தார். அதை பார்த்த மேனேஜர், இதை செய்ய இவ்வளவு நேரமா? ஒழுங்காகவே இல்லை என்று திட்டினார். இதனால் நிலாவுக்கு கஷ்டமாக இருந்தது. அதற்குப்பின் வீட்டிற்கு வந்த நிலா, பாத்ரூம் கட்டும் விஷயத்தை அறிந்து சந்தோஷப்பட்டார்.
https://www.youtube.com/watch?v=z1mOQtyMcQA
சீரியல் ப்ரோமோ:
இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் சோழன் போலீஸ் ஸ்டேஷனில் இருக்கிறார். பதறி அடித்துக் கொண்டு நிலா, சோழன் குடும்பத்தினர் போலீஸ் ஸ்டேஷன் வருகிறார்கள். அப்போது போலீஸ், ஒருவரின் மீது சோழன் மோதியதால் தான் அவனை கைது செய்திருக்கிறோம் என்கிறார்கள். உடனே சோழன், அவர் தான் வேண்டுமென்றே வண்டியில் விழுந்தார் என்கிறார். பின் சோழனை அடித்து ஓரமாக உட்கார சொல்கிறார். இதை பார்த்து நிலாவிற்கு கஷ்டமாக இருக்கிறது.