சோழனை அதிரடியாக கைது செய்யும் போலீஸ், பதறும் நிலா, அடுத்து என்ன? அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நிலாவிற்காக சேரன் பாத்ரூம் கட்டுவதற்கான வேலைகள் எல்லாம் தங்களுடைய வீட்டிற்கு பின்னாடி பார்த்துக் கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து நடேசன் அண்ணா பிரச்சினை செய்தார். கேஸ் நடக்கும்போது இந்த மாதிரியெல்லாம் செய்யக்கூடாது. நான் போலீஸில் கம்ப்ளைன்ட் கொடுப்பேன் என்றெல்லாம் மிரட்டி இருந்தார். இதனால் கோபப்பட்ட நடேசன், தன்னுடைய அண்ணனை தனியாக அழைத்து சென்று, நீ பிரச்சனை செய்யாமல் அமைதியாக இருந்தால் நானும் எதுவும் பண்ண மாட்டேன்.
இப்படியே திருமணத்திற்கு முன் உன் மகள் என்னுடைய வீட்டிற்கு வந்த விஷயத்தை எல்லாம் மாப்பிள்ளை வீட்டில் சொல்லி விடுவேன் என்றார். இதை கேட்டு நடேசன் அண்ணன் எதுவுமே பேசாமல் அமைதியாக சென்று விட்டார். இன்னொரு பக்கம் நிலா ஆபீஸில் வேலை செய்து கொண்டிருந்தார். ஒரு டிசைனை வரைந்து கொண்டு போய் கொடுத்தார். அதை பார்த்த மேனேஜர், இதை செய்ய இவ்வளவு நேரமா? ஒழுங்காகவே இல்லை என்று திட்டினார். இதனால் நிலாவுக்கு கஷ்டமாக இருந்தது. அதற்குப்பின் வீட்டிற்கு வந்த நிலா, பாத்ரூம் கட்டும் விஷயத்தை அறிந்து சந்தோஷப்பட்டார்.
அய்யனார் துணை:
நேற்று எபிசோட்டில் நிலா ஆபீஸில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது மேனேஜர் வேறொரு நபரை திட்டினார். அந்த சமயம் பார்த்து நிலாவிற்கு சோழன் போன் செய்தார். நிலாவை தான் மேனேஜர் திட்டுகிறார் என்று தவறாக புரிந்து கொண்ட சோழன், ஆபிசுக்கு வந்து பிரச்சனை செய்தார். இதனால் மேனேஜர்- சோழன் இடையே வாக்குவாதம் நடந்தது. பின் அந்த இடத்திற்கு வந்த ஓனர் சண்டையை நிறுத்தி சோழனை வெளியே அனுப்பி விட்டார். சோழன் செய்த தவறுக்காக நிலா மன்னிப்பு கேட்டார்.
நேற்று எபிசோட்:
இன்னொரு பக்கம் வானதி தன்னுடைய வண்டி ரிப்பேர் ஆகிவிட்டது என்று பாண்டியனிடம் காலேஜில் விட சொன்னார். பின் இருவரும் ரொம்ப ரொமான்ஸ் ஆக பேசிக்கொண்டு போனார்கள். பின் நிலா வீட்டிற்கு வந்தார். அப்போது சோழன், ஆபீஸில் உங்களிடம் யாரும் வம்பிழுக்க மாட்டார்கள் என்று பேசி இருந்தார். உடனே கோபத்தில் நிலா, உங்களுக்கு அறிவில்லையா? யாரைக் கேட்டு என்னுடைய ஆபீசுக்கு வந்தீர்கள்? நீங்கள் யார் என்றெல்லாம் என்று நடந்ததை சேரனிடம் சொன்னார். நிலா திட்டியதால் சோழனால் எதுவும் பேச முடியவில்லை. வீட்டில் உள்ள எல்லோருமே சோழன் செய்ததை தான் தவறு என்பது போலவே பேசி இருந்தார்கள்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சேரன் வீட்டில் எல்லோருமே ஜாலியாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது சோழன் வீட்டிற்கு வராததால் நிலா போன் செய்து பேசுகிறார். சோழனுமே வீட்டிற்கு கிளம்புகிறார். அந்த சமயம் பார்த்து ஒரு பைக் ஓடிவந்த நபர் சோழன் கார் மீது மோதியது. உடனே அந்த நபர் சோழனிடம் சண்டை போட்டு போலீசில் புகார் கொடுத்து விடுகிறார். சோழன் மீது தான் தவறு என்பது போல் போலீஸ் விசாரிக்கிறார்கள். பின் சோழன் போலீஸ் ஸ்டேஷனில் இருப்பதை அறிந்த நிலா, சேரன், பாண்டியன் மூவருமே போலீஸ் ஸ்டேஷனுக்கு போகிறார்கள். சேரன், போலீசிடம் சோழனை விட சொல்லி கெஞ்சுகிறார். ஆனால், போலீசும் அந்த புகார் கொடுத்தவரும் மனமிறங்கவே இல்லை.
சீரியல் ட்ராக்:
சோழன் தன் பக்கம் எந்த தவறும் இல்லை என்று சொல்லியும் போலீஸ் கேட்கவில்லை. நிலாவிற்கு என்ன சொல்வது என்று தெரியாமல் பதட்டத்தில் அமைதியாக இருக்கிறார். அதற்குப்பின் சேரன் தங்களுக்கு தெரிந்த நபரின் மூலம் போலீஸ் இடம் பேச வைக்கிறார். அவர்களுமே பணம் கொடுத்து பிரச்சினையை முடித்துக் கொள்ளுங்கள் என்கிறார். பின் சேரனும் தங்களிடம் இருந்த பணத்தை வைத்து சோழனை வெளியில் எடுக்கிறார்கள். அப்போது கோபத்தில் போலீஸ், சோழனை அடித்து விட்டு லைசன்ஸ் பிடுங்கி வைத்துக் கொள்கிறார்கள். இதனால் சோழன் கோபப்பட்டு அங்கிருந்து வந்து விடுகிறார். வீட்டில் பாண்டியன்-சோழன் போலீஸ் ஸ்டேஷனில் நடந்ததை வாக்குவாதம் செய்து கொண்டிருக்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.