போலீசை வைத்து மிரட்டிய சோழன், உண்மை அறிந்தாரா நிலா? விறுவிறுப்பில் அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சோழன் தான் சொல்ல வந்த காதலை மறைத்து விட்டார். அதற்குப்பின் வீட்டில் சோழன் சோகமாகவே இருந்தார். சேரன் அவருக்கு சாப்பாடு ஊட்டி விட்டு ஆறுதல் சொல்கிறார். இருந்தாலுமே சோழனால் ஜீரணிக்க முடியவில்லை. மறுநாள் காலையில் கோர்ட்டுக்கு செல்ல நிலா தயாராகி வந்தார். சோழன் சோகத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தார். வீட்டில் உள்ள எல்லோருமே சோழன் நிலைமையை நினைத்து வருத்தப்பட்டார்கள்.
சேரன், நீங்கள் ரெண்டு பேரும் சேர்ந்து வாழுங்கள். விவாகரத்து வாங்கணுமா? என்று கேட்டார். அதற்கு நிலா, நான் அதில் தெளிவாக இருக்கிறேன். என்னால் சோழன் வாழ்க்கை பாதிக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டு இருவரும் கிளம்பினார்கள். கோர்ட்டில் விவாகரத்து வழக்கை நீதிபதி விசாரித்தார். பின் நீதிபதி, நிலா- சோழன் இருவரையும் கவுன்சிலிங் போக சொன்னார். கவுன்சிலிங் போன இடத்தில் நிலாவை விசாரித்தார்கள்.
அய்யனார் துணை:
அப்போது நிலா, எனக்கு சேர்ந்து வாழ விருப்பமில்லை. தயவு செய்து விவாகரத்து கொடுத்து விடுங்கள் என்றார். அதற்கு பின் சோழனை தனியாக அழைத்து விசாரித்தார்கள். அப்போது சோழன், எனக்கு விவாகரத்தில் விருப்பமில்லை. நிலா கேட்டதால் தான் தருகிறேன் என்றார். அதற்குப்பின் இருவரையும் உட்கார வைத்து பேசி பார்த்தார்கள். ஆனால், நிலா பிடிவாதமாக விவாகரத்து வாங்குவதில் உறுதியாக இருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ஹோட்டலில் நிலா-சோழன் சாப்பிடுறார்கள். அப்போது சோழன், நாம் சேர்ந்து வாழ முயற்சி செய்யலாமா? என்று கேட்கிறார். அதற்கு நிலா, அதற்கு அவசியமே இல்லை விவாகரத்து வாங்குவது தான் ஒரே முடிவு என்று மீண்டும் பிடிவாதமாக இருக்கிறார். பின் சோழன், தனக்கு தெரிந்த போலீஸ் இடம் நடந்ததை சொல்லி புலம்பி கொண்டிருக்கிறார். அவருமே ஆறுதல் சொல்கிறார். இன்னொரு பக்கம் வானதி கடைக்கு வராததால் பாண்டியன் வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார். பின் வானதிக்கு மெசேஜ் பண்ண பார்க்கிறார் பாண்டியன். அதை வானதி பார்த்து விடுகிறார். இருந்தாலும் பாண்டியன் மெசேஜ் போடாமல் தன்னுடைய வேலையை பார்க்கிறார்.
சீரியல் ட்ராக்:
இதனால் வானதி கவலைப்படுகிறார். இன்னொரு பக்கம் வேலையை முடித்து வீட்டுக்கு வந்து சேரன், நிலா- சோழனை பற்றி விசாரிக்கிறார். அப்போது நிலா, கோர்ட்டில் நடந்ததை சொல்கிறார். அப்போது அந்த போலீஸ் நிலாவிற்கு ஃபோன் செய்து விவாகரத்து அப்ளை செய்த விஷயமாக பேசுகிறார். நிலாவிற்கும் என்ன சொல்வது என்று தெரியவில்லை. உடனே போலீஸ், நீங்கள் இருவரும் சேர்ந்து வாழ வேண்டும். அந்த வேலையை பாருங்கள் என்று அறிவுரை சொல்லி வைத்து விடுகிறார். அதற்குப்பின் பாண்டியனை தேடி வானதி கடைக்கு வந்து விடுகிறார். இருவருமே தங்கள் சன்டையை விட்டு பேசிக் கொள்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.