சேரன் சொன்ன விஷயத்தால் ஆடிப்போன ராகவ், கோபத்தில் கொந்தளித்த நிலா - அய்யனார் துணை

By subhashini · 5/2/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் பாண்டியன், வானதி என்னுடன் தான் இருக்கிறார் என்றார். பின் சேரன், வானதி அம்மாவிடம் உண்மையை சொன்னார். கோபத்தில் வானதியின் அம்மா பாண்டியன் குடும்பத்தை மோசமாக பேசிவிட்டு சென்றார். இன்னொரு பக்கம் பாண்டியன், உன்னால் தான் என்னுடைய குடும்பம் அவமானப்பட்டு இருக்கிறது. இதனால் தான் வேண்டாம் என்று சொன்னேன் என்றார். வானதி, உனக்கு இப்பவும் உன்னுடைய குடும்பம் தான் முக்கியமா? என்று சண்டை போட்டார். பின் பாண்டியன், வானதியை அவருடைய வீட்டில் விட்டார்.

வானதியை அவருடைய அம்மா அடித்தார். அப்போது பாண்டியன், மன்னித்து விடுங்கள். வானதி சொல்லியும் நான் செய்தது தவறுதான். உங்களின் நிலைமை எனக்கு புரிந்தது. வானதியை அடிக்காதீர்கள் என்று ரொம்ப தன்மையாக பேசி இருந்தார். வானதியின் அண்ணன் கோபப்பட்டும் பாண்டியன் அமைதியாக மன்னிப்பு கேட்டு விட்டு சென்றார். பின் வீட்டிற்கு வந்த பாண்டியன் இடம் சேரன் விசாரித்தார். அப்போது பாண்டியன், நடந்தது எல்லாம் சொல்லி வீட்டில் எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டார்.

அய்யனார் துணை:

அதற்குப்பின் சோழன், நிலா விஷயத்தில் எதுவுமே பேசாமல் அமைதியாகவே இருந்தார். இதனால் நிலா விசாரித்தார். அப்போது சோழன், நீங்கள் ராகவ் உடைய ஆளாம். உங்களை பத்திரமாக பார்த்துக் கொள் என்றார். ஃபோனில் ஸ்டேட்டஸில் கிஸ், ஹார்ட்டு சிம்பல் எல்லாம் வைத்திருக்கிறார் என்று கோபமாக பேசி இருந்தார். இருந்தாலும் நிலா, ராகவ் அப்படியெல்லாம் செய்திருக்க மாட்டார் என்று திட்டினார். பின் இருவருக்கும் இடையே வாக்குவாதம் பெரிதாக நடந்தது. இதையெல்லாம் பார்த்து சேரனுக்கு கஷ்டமாக இருந்தது.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் நிலா ஆபீஸில் வேலை செய்து கொண்டிருக்கிறார். அப்போது சோழன் சொன்ன விஷயத்தைப் பற்றி நிலா யோசித்துப் பார்த்து ராகவிடம் கேட்கிறார். ராகவ் ஆரம்பத்தில் சமாளிக்கிறார். ஒரு கட்டத்தில் ராகவ் ஒத்துக் கொள்கிறார். நிலா, உங்களால் எனக்கும் சோழனுக்கும் சண்டை வந்தது என்று கேட்கிறார். ராகவுக்கு ஒன்றுமே புரியவில்லை. பின் நிலா, சோழன் தான் என் கணவர். அவர்தான் கோவப்படுவார் என்று சொல்லி தங்களுக்கு திருமணமான புகைப்படத்தை எடுத்து காண்பிக்கிறார்.

சீரியல் ட்ராக்:

இதை பார்த்து ராகவ் அதிர்ச்சியாக இருக்கிறது. இன்னொரு பக்கம் சேரன் வேலை செய்யும் இடத்தில் இன்ஜினியர், டிசைன் போடுபவரை சந்திக்க வேண்டும் என்று ஹோட்டலுக்கு அழைத்து வருகிறார். ஆனால், அங்கு இருப்பது ராகவ் தான். பின் ராகவ், சேரன் இருவரும் நன்றாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ராகவ், நிலா-சோழன் திருமண விஷயத்தைப் பற்றி கேட்கிறார். சேரனும் உண்மை அறியாமல் நடந்த எல்லாவற்றையும் சொல்லி விடுகிறார். இது ராகவிற்க்கு ஷாக்கிங் ஆக இருக்கிறது. நிலாவிற்கு கட்டாய கல்யாணம் நடந்ததை அறிந்தவுடன் ராகவ் உள்ளுக்குள் சந்தோஷப்படுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full