ஆபிசில் எல்லோர் முன்பும் நிலாவை திட்டும் ராகவ், சோழன் கொடுத்த ட்விஸ்ட் - அய்யனார் துணை

By subhashini · 25/1/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நிலா வீட்டிற்கு வந்ததால் நடேசன் அவருக்கு டீ எல்லாம் வைத்துக் கொடுத்தார். பின் நிலா கையில் அடிபட்டிருப்பதை அறிந்த நடேசன், பதறி போனார். பின் நடேசன், நிலா கையில் அடிபட்ட இடத்திற்கு மருந்து வைக்கிறார். அதற்குப்பின் சேரன் வீட்டுக்கு வந்தார். வழக்கம் போல சோழன்- பல்லவன் இருவரும் மாறி மாறி சேரனிடம் கேள்வி கேட்டார்கள். சேரனும் ஏதேதோ சொல்லி சமாளித்தார். ஒரு கட்டத்தில் பல்லவன், சோழன் இருவரும் சேரன், சந்தாவுடன் ஊர் சுற்றியதை சொல்லி விட்டார்கள்.

இதனால் வெட்கத்தில் சேரன் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். தம்பிகள் எல்லோருமே சேர்ந்து சேரனை கலாய்த்து கொண்டிருந்தார்கள். அதற்குப்பின் நடேசன், நிலாவின் கையில் அடிபட்ட விஷயத்தை வீட்டில் சொன்னார். சேரன், பல்லவன், சோழன் எல்லோருமே பதறிப் போனார்கள். சோழன் ரொம்பவே வருத்தப்பட்டார். பின் சேரன், இனிமேல் நிலாவை நீயே வேலைக்கு அழைத்து செல் என்று சோழனுக்கு ஆர்டர் போட்டார். இது எல்லாம் பார்த்து நிலாவிற்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.

அய்யனார் துணை:

சோழன், நிலாவை வெறுப்பேற்றுவதற்காக மேட்ரிமனியில் பெண்களை பார்த்து கொண்டு இருந்தார். நிலா, என்ன ஆச்சு? என்று விசாரித்தார். அப்போது சோழன், விவாகரத்தான பிறகு நான் உங்களை நினைத்து சோகத்தில் இருப்பேன். அது வேண்டாம் என்று தான் எனக்காக பெண் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னார். இதைக் கேட்டு நிலாவிற்கு கடுப்பாகி உள்ளே சென்று விட்டார். இதெல்லாம் பார்த்து சோழனுக்கு சந்தோஷமாக இருக்கிறது.

சீரியல் ட்ராக்:

அடுத்த நாள் நிலா, புது ப்ராஜெக்ட் சிறப்பாக செய்து முடிக்க வேண்டும் என்று பதட்டத்தில் இருந்தார். வீட்டில் உள்ள எல்லோருமே நிலாவிற்கு வாழ்த்துக்களை சொன்னார்கள். பின் நிலாவும் பதட்டத்துடன் ஆட்டோவில் ஆபிஸிற்கு வந்தார். பின் ஆபிஸில் ராகவ், ப்ராஜெக்ட் எல்லாம் முடிந்து விட்டதா? ரெடி பண்ணி விட்டீர்களா? காண்பியுங்கள் என்றார். பின் நிலா, தன்னுடைய லேப்டாப்பை எடுக்க போனார். ஆனால், அவருடைய டேபிளில் லேப்டாப் இல்லை. நிலா, லேப் காணவில்லை என்று பதற்றத்துடன் தேடிக் கொண்டிருந்தார்.

https://www.youtube.com/watch?v=3DO-rPtQVKk

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகிருக்கும் ப்ரோமோவில் நிலா லேப்டாப் காணவில்லை என்று சோழனுக்கு போன் செய்து சொல்கிறார். பின் ராகவ், பிரசன்டேஷன் ரெடியா? என்று கேட்கிறார். நிலா, லேப்டாப் காணவில்லை என்கிறார். கோபத்தில் ராகவ், இவ்வளவு பொறுப்பில்லாமல் இருப்பதா? உங்களிடம் இவ்வளவு பெரிய ப்ராஜெக்டை கொடுத்தது தப்புதான் என்று திட்டுகிறார். அந்த சமயம் பார்த்து சோழன், லேப்டாப்பை கொண்டு வந்து தருகிறார். பின் நிலா தன்னுடைய ப்ராஜெக்ட்டை நல்லபடியாக முடித்து விடுகிறார் பின் சந்தோஷத்தில் நிலா, சோழனை கட்டி பிடிக்கிறார்

Tamil Behind Talkies AMP · Quick view
View full