சோழனுக்கு நேர்ந்த விபரீதம், உடைந்து போன நிலா - அனல் பறக்கும் அய்யனார் துணை

By subhashini · 14/5/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சோழன், நான் உங்களை திருமணம் செய்து கொள்ள தான் அப்படி சொன்னேன். வேறு எந்த தவறான நோக்கமும் இல்லை என்றார். நிலா, இப்பவும் தான் செய்தது தவறு இல்லை என்பது போலவே பேசி இருந்தார். என்னால் இனி இந்த வீட்டில் இருக்கவே முடியாது என்று நிலா ரூமுக்குள் சென்று விட்டார் சேரன், பாண்டியன் எல்லோருமே சோழனை திட்டினார்கள். கோபத்தில் பதிலுக்கு சோழனும் தன் அண்ணனிடம் சண்டை போட்டார். அப்போது நிலா, துணிகள் எல்லாம் பேக் செய்து கொண்டு வெளியே வந்தார். சேரன், நிஜமாகவே வீட்டை விட்டுப் போகிறாயா? என்றார். நிலா, என்னால் இங்கு இருக்க முடியாது என்றார்.

சேரன், சோழன் செய்தது பெரிய தவறு. நீ வீட்டை விட்டு போகாதே என்றார். பல்லவன், பாண்டியன் எல்லோரும் கெஞ்சினார்கள். ஆனால், நிலா தன் முடிவிலிருந்து மாறவில்லை. பல்லவனை அழைத்துக்கொண்டு நிலா வெளியேறினார். சோழனும் கெஞ்சி கதறுகிறார். ஆனால், நிலா கேட்கவே இல்லை. சோழன் ரொம்பவே உடைந்து விட்டார். இன்னொரு பக்கம் கோவிலில் வானதிக்கு நிச்சயதார்த்தம் நடக்கிறது. வானதி வீம்புக்காக பெற்றோர்கள் சொன்னதால் நிச்சயதார்த்தத்திற்கு தயாராகி வருகிறாள்.

அய்யனார் துணை:

பின் திருமண தேதி எல்லாம் படித்தார்கள். ஆனால், பாண்டியன் உடனான நினைவுகளை நினைத்துக் கொண்டு வானதி வருத்தப்பட்டார். அதற்குப்பின் நிலா, பஸ் ஸ்டாண்டிற்கு சென்றவுடன் பல்லவனை அனுப்பி வைத்தார். இன்னொரு பக்கம் வீட்டில் சேரன், நடேசன் எல்லோருமே சோழனை திட்டிக் கொண்டிருந்தார்கள். இதனால் மணமுடைந்த சோழன் அங்கிருந்து கிளம்பி விட்டார். நிலா, பஸ் ஏறாமல் கோயிலில் உட்கார்ந்து வருத்தப்பட்டு கொண்டிருந்தார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் நிலா, தன்னுடைய தோழிக்கு போன் செய்து கோவிலுக்கு வர சொல்கிறார். இன்னொரு பக்கம் வானதி, திருமணத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று திட்டம் போடுகிறார். பின் மாப்பிள்ளை பற்றி எல்லாம் விசாரித்தீர்களா? வேறு ஏதாவது மாப்பிள்ளை பார்க்கலாமா? என்றெல்லாம் வானதி சொல்கிறார். இதனால் வானதியின் பெற்றோர்கள் கோபப்பட்டு சண்டை போடுகிறார்கள். வானதி வேறு வழி இல்லாமல் அமைதியாக விடுகிறார்.

சீரியல் ட்ராக்:

பின் ரூமுக்குள் சென்ற வானதி, பாண்டியனை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் சோழன் சென்ற கார் விபத்து ஏற்பட்டதாக சேரனுக்கு போன் வருகிறது. இதை சேரன் குடும்பத்தில் எல்லோருமே ஹாஸ்பிடலுக்கு போகிறார்கள். இன்னொரு பக்கம் நிலா, தன்னுடைய தோழியிடம் தனக்கு திருமணமான கதை எல்லாத்தையும் சொல்லிக் கொண்டு கிளம்பி கொண்டிருக்கிறார். அப்போது பல்லவன், சோழனுக்கு நடந்த விஷயத்தை பற்றி சொல்கிறார். நிலாவும் பதறி அடித்து கொண்டு கிளம்புகிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full