வேறு ஒருவரை திருமண செய்ய போகும் வானதி, பாண்டியன் சொன்ன வார்த்தை - அய்யனார் துணை

By subhashini · 28/4/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சந்தாவின், வீடு தெரியாமல் சேரன்,சோழன், நிலா எல்லோருமே தவித்தார்கள். யார் கேட்டாலும் சரியான முகவரி சொல்ல மறுக்கிறார்கள். பின் நேரமானதால் ஓரிடத்தில் தங்கி கொள்ளலாம் என்று சோழன் சொன்னார். இன்னொரு பக்கம் வானதி சமைக்கிறேன் என்ற பெயரில் வீட்டில் உள்ள எல்லோரையுமே கொடுமைப்படுத்திக் கொண்டிருந்தார். பின் தான் செய்த வேலைக்காக ஓய்வு தேவை என்று நிலாவின் ரூமில் வானதி படுத்து கொண்டார். இதுதான் சந்தர்ப்பம் என்று பல்லவன், பாண்டியன் இருவரும் ஹோட்டலில் சாப்பிடலாம் என்று நினைத்தார்கள்.

அதற்குப்பின் வானதி சமைத்து தருகிறேன் என்று மீண்டும் டார்ச்சர் செய்தார். இதையெல்லாம் பார்த்து நடேசனுக்கு சிரிப்புதான் வந்தது. பாண்டியன் எதுவும் பேச முடியாமல் வாய் அடைத்து போய் நின்றார்.
இன்னொரு பக்கம் ஒரு ஹோட்டலில் நிலா, சோழன்,சேரன் மூவரும் தங்கி கொண்டார்கள். அப்போது நிலாவின் மொபைலுக்கு வக்கீல் மெசேஜ் ஒன்று அனுப்பினார். அதில், விவாகரத்து கேஸ் கோர்ட்டுக்கு வருகிறது. இருவரும் ஆஜராக வேண்டும் என்றார். இதைக்கேட்ட உடன் சோழனுக்கு பயங்கர கடுப்பானது. சீக்கிரமாக இதற்கு முற்றுப்புள்ளி வைக்கணும், விவாகரத்து வேண்டாம் என்று சொல்லணும் சோழன் என்றார். ஆனால் நிலா எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தார்

அய்யனார் துணை:

சந்தாவின் வீட்டை கண்டுபிடிக்க முடியாமல் சேரன் தவிக்கிறார். அப்போது சேரன் மொபைலுக்கு அனீஸ் போன் செய்கிறார். சேரன், நாங்கள் உங்களுடைய ஊருக்கு வந்து விட்டோம். ஆனால் வீடு தெரியவில்லை என்று சொல்கிறார். அனிஷ், நான் உடனே நீங்கள் இருக்கும் இடத்திற்கு வருகிறேன் என்று சொல்கிறார். பின் சிறிது நேரம் கழித்து சேரன் தங்கி இருக்கும் ஹோட்டலுக்கு அனிஷ் வந்து விடுகிறார்.

சீரியல் ட்ராக்:

பின் அனீஸ், வீட்டின் நிலைமை எடுத்து சொல்லி சேரன் குடும்பத்தை அங்கிருந்து அழைத்து செல்கிறார். வரும் வழியெல்லாம் காடு மேடு வெறும் வறண்ட பாலைவனம் போலவே இருக்கிறது. ஒரு வழியாக சந்தாவின் வீட்டை சேரன் குடும்பத்தினர் அடைந்து விடுகிறார்கள். அனீஸ் தன்னுடைய வீட்டிற்குள் சேரன் குடும்பத்தை அழைத்துச் செல்கிறார். சேரனை பார்த்தவுடன் சந்தா அப்பாவின் முகம் மாறுகிறது. ஆனால், சந்தா காணவில்லை.

https://www.youtube.com/watch?v=i2d8dYTFwys

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரோமோவில் கோபமாக வானதி, எனக்கு வேறொரு மாப்பிள்ளை பாருங்கள். நான் பாண்டியனை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று சொல்கிறார் அவருடைய அப்பா அம்மாவிற்கு ஒன்றுமே புரியவில்லை. பின் இதைப்பற்றி வானதியின் அண்ணன் பாண்டியனிடம் சொல்லி வேறுப்பு ஏற்றி கொண்டிருக்கிறார். பாண்டியன், வானதியின் அண்ணனை அடித்து விடுகிறார். இதை அறிந்த வானதி எதற்காக என் அண்ணனை அடித்தாய்? என்று கேட்கிறார். பாண்டியனை, என்னை வெறுப்பேற்றினார் என்று சொல்கிறார். வானதி, உண்மையிலேயே நான் உன்னை திருமணம் செய்து கொள்ள மாட்டேன். நீ எனக்கு வேண்டாம் என்று சொல்கிறார்

behindtalkies AMP · Quick view
View full