நிலாவின் பிஸ்னஸுக்காக துணை நிற்கும் நடேசன் குடும்பம், பிரச்சனையை கிளப்பும் வானதி - அய்யனார் துணை

By subhashini · 11/3/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் போலீஸ், காலேஜ் படிக்கும் பையனுக்கு லாட்ஜில் என்ன வேலை என்று கேள்வி கேட்டார். பின் மூவரும் பல்லவனை வெளியே எடுப்பதற்கு தவித்து கொண்டு இருந்தார்கள். இன்னொரு பக்கம் வானதியை பார்ப்பதற்காக பாண்டியன் வீட்டிற்கு சென்று விட்டார். பாண்டியன், ஏன் பேச மாட்டுகிறாய்? எதற்காக கோபப்படுகிறாய் என்று எவ்வளவோ கெஞ்சி கேட்டார். வானதி வேண்டும் என்றே பிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் போலீஸ் ஸ்டேஷனில் சேரன், தனக்குத் தெரிந்தவர் மூலம் பல்லவனை வெளியே எடுத்தார்.

பல்லவனை போலீஸ் ஸ்டேஷனில் இருந்து எப்படியோ வெளியே கொண்டு வந்து விட்டார்கள். பின் வீட்டில் எல்லோருமே பல்லவனை தாறுமாறாக திட்டிக் கொண்டிருந்தார்கள். பல்லவன், நான் எந்த தவறும் செய்யவில்லை. சும்மா நாங்கள் பேச தான் போனோம் என்று எடுத்துச் சொல்லி புரிய வைக்க போனார். ஆனால், வீட்டில் உள்ள யாருமே கேட்கவில்லை. சேரன், பாண்டியன், சோழன் எல்லோருமே பல்லவனை அடித்தார்கள்.

அய்யனார் துணை:

ஒரு கட்டத்தில் கொந்தளித்த நடேசன், பல்லவனுக்கு வார்னிங் கொடுத்து திட்டி விட்டு சென்றார். நிலா, நீ உன்னை பற்றி மட்டும் யோசிக்காதே. அந்த பெண்ணின் நிலைமையை யோசித்துப் பார் என்றெல்லாம் அறிவுரை சொன்னார். கடைசியில் பாண்டியன், இதற்கெல்லாம் காரணம் நீ காயத்ரியை காதலித்ததால் தான் இவன் இந்த பிரச்சனையில் சிக்கினான் என்று சொன்னார். இதனால் சோழன் கோபப்படுகிறார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பல்லவன், தான் செய்த தவறை நினைத்து ரொம்பவே வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார். வீட்டில் உள்ள யாருமே பல்லவன் இடம் பேசவில்லை. என்ன செய்வது என்று புரியாமல் பல்லவன் தவித்து நிற்கிறார். அதற்குப்பின் சேரன், நிலாவிடம் வேலையைப் பற்றி கேட்கிறார். அப்போது சோழன், நிலாவின் தோழி புது கம்பெனி ஸ்டார்ட் செய்வதை பற்றி சொல்கிறார். உடனே பாண்டியன், இந்த வீட்டு பாத்திரத்தை வைத்து பணம் ஏற்பாடு செய்யலாம் என்று சொல்கிறார். நடேசன், உன்னால் தான் இந்த வீடு வீடாகவே இருக்கிறது. சீக்கிரமாக அந்த பணத்தை ஏற்பாடு செய்து தொழிலை தொடங்கு என்று சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:

அந்த சமயம் பார்த்து வானதி, என்ன தொழில்? என்ன பத்திரத்தை அடமானம் வைக்கணும்? என்று கேட்கிறார். உடனே சோழன், நடந்தது எல்லாம் சொல்கிறார். இதனால் வானதிக்கு பயங்கர கோபம் வருகிறது. அதற்குப்பின் நிலாவிடம் அந்த வேலையைப் பற்றி வானதி விசாரிக்கிறார். வானதி, இந்த வீட்டில் எல்லோருக்கும் உங்களை பிடிக்கிறது. என்னை அப்படி நடத்துவார்களா? என்று தெரியவில்லை. எல்லோரும் என் மீது கோபம்தான் படுகிறார்கள் என்கிறார். நிலா, அப்படியெல்லாம் கிடையாது என்று சொல்கிறார். இதை எல்லாம் பார்த்த பாண்டியன், பிரச்சனை வந்துவிடுமோ என்று பயப்படுகிறார். நிலா சென்றவுடன் வானதி, எதற்காக வீட்டு பத்திரத்தை வைக்கணும். உன்னுடைய தொழிலுக்கு யாராவது இப்படி செய்தார்களா? என்றெல்லாம் கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full