நிலாவால் சேரன்-சோழன் இடையே வெடித்த கலவரம், வானதியின் அவசர கல்யாணம் - அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சோழன் கொஞ்சி கதறுகிறார். பின் ஆட்டோவில் ஏறி நிலா கிளம்பி விட்டார். உடனே சோழன், கோர்ட்டில் நடந்ததை எல்லாம் சேரனிடம் சொன்னார். சேரன், பாண்டியனை வீட்டிற்கு வரவைத்தார். பாண்டியன் கிளம்பியுடன் வானதி அந்த இடத்திற்கு வந்தார். அப்போது பாண்டியனிடம் வேலை செய்பவர், நீ வேறொரு கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று சொன்னவுடன் சந்தோஷத்துடன் பாண்டியன் அவுட்டிங் போகிறான். என்றார். அதை கேட்டு வானதிக்கு இன்னும் கோபம் அதிகமாகின்றது. அதற்குப் பிறகு வீட்டிற்கு வந்த நிலா ரூமுக்குள் சென்று சோழன் சொன்னது எல்லாம் நினைத்து பார்த்து அழுது கொண்டிருந்தார்.
சேரன், என்ன நடந்தது? என்று விசாரித்தார். நிலா, நான் சோழனை காதலித்தேன். அதனால் தான் வீட்டை விட்டு ஓடி வந்தேன் என்று போலீசிடம் பொய் சொல்லி என்னை ஏமாற்றி கல்யாணம் செய்துவிட்டார். அந்த கல்யாணம் மட்டும் நடக்கவில்லை என்றால் நான் எப்படியாவது என்னுடைய பெற்றோர்களிடம் சென்றிருப்பேன். இப்படி ஒரு துரோகம் எனக்கு செய்வார் என்று நான் நினைக்கவே இல்லை ஒன்று ரொம்பவே கதறி அழுதார். நிலா சொன்னதை கேட்டு சோழன், நடேசன், பாண்டியன் எல்லோருமே ஷாக் ஆனார்கள். சோழனால் எதுவுமே பேச முடியவில்லை.
அய்யனார் துணை:
சோழன், நான் உங்களை திருமணம் செய்து கொள்ள தான் அப்படி சொன்னேன். வேறு எந்த தவறான நோக்கமும் இல்லை என்றார். நிலா, இப்பவும் தான் செய்தது தவறு இல்லை என்பது போலவே பேசி இருந்தார். என்னால் இனி இந்த வீட்டில் இருக்கவே முடியாது என்று நிலா ரூமுக்குள் சென்று விட்டார் சேரன், பாண்டியன் எல்லோருமே சோழனை திட்டினார்கள். கோபத்தில் பதிலுக்கு சோழனும் தன் அண்ணனிடம் சண்டை போட்டார். அப்போது நிலா, துணிகள் எல்லாம் பேக் செய்து கொண்டு வெளியே வந்தார். சேரன், நிஜமாகவே வீட்டை விட்டுப் போகிறாயா? என்றார். நிலா, என்னால் இங்கு இருக்க முடியாது என்றார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்று எபிசோட்டில் சேரன், சோழன் செய்தது பெரிய தவறு. நீ வீட்டை விட்டு போகாதே என்று சொல்கிறார். பல்லவன், பாண்டியன் எல்லோரும் கெஞ்சினார்கள். ஆனால், நிலா தன் முடிவிலிருந்து மாறவில்லை. பல்லவனை அழைத்துக்கொண்டு நிலா வெளியேறுகிறார். சோழனும் கெஞ்சி கதறுகிறார். ஆனால், நிலா கேட்கவே இல்லை. சோழன் ரொம்பவே உடைந்து விடுகிறார். இன்னொரு பக்கம் கோவிலில் வானதிக்கு நிச்சயதார்த்தம் நடக்கிறது. வானதி வீம்புக்காக பெற்றோர்கள் சொன்னதால் நிச்சயதார்த்தத்திற்கு தயாராகி வருகிறாள்.
சீரியல் ட்ராக்:
பின் திருமண தேதி எல்லாம் படிக்கிறார்கள். ஆனால், பாண்டியன் உடனான நினைவுகளை நினைத்துக் கொண்டு வானதி வருத்தப்படுகிறார். அதற்குப்பின் நிலா, பஸ் ஸ்டாண்டிற்கு சென்றவுடன் பல்லவனை அனுப்பி வைக்கிறார். இன்னொரு பக்கம் வீட்டில் சேரன், நடேசன் எல்லோருமே சோழனை திட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் மணமுடைந்த சோழன் அங்கிருந்து கிளம்பி விடுகிறார். நிலா, பஸ் ஏறாமல் கோயிலில் உட்கார்ந்து வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார்.