நிலாவின் மீதுள்ள பொறாமையால் கொந்தளிக்கும் வானதி, பரபரப்பில் அய்யனார் துணை
நிலாவின் மீதுள்ள பொறாமையால் கொந்தளிக்கும் வானதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் வேலை ஆட்களைப் போலவே தேன்மொழி சோழன் குடும்பத்தை நடத்துகிறார். அதோடு அவர்கள் எல்லாம் பின்பக்கம் உள்ள பாத்ரூமில் பயன்படுத்த சொன்னார். சேரன் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். பின் அவர்களுக்கு ஒரு டீ கூட போட்டுக் கொடுக்காமல் தேன்மொழி இருந்தார். இதை எல்லாம் கவனித்த நிலா, தன்னுடைய அம்மாவிடம் சண்டை போட்டார். சோழன் குடும்பத்திற்கு தேவையான ஏற்பாடுகளும் நிலாவே செய்தார். இதை கவனித்த நிலாவின் அம்மாவிற்கு கோபம் தான் வருகிறது.
நிலா, சேரன் குடும்பம் தங்குவதற்கு ஒரு ரூம் ஏற்பாடு செய்து தந்தார். அதற்குப் பின் தன்னுடைய அப்பா, அம்மாவை சந்தித்து நிலா, இப்படி எல்லாம் நடந்து கொள்ளாதீர்கள். இந்த பிரச்சனை எல்லாம் வரும் தெரிந்து தான் இந்த ஃபங்ஷனை வேண்டாம் என்று சொன்னேன் என கொந்தளித்தார். மனோகர், அதெல்லாம் ஒன்றும் இல்லை என்று சமாளித்தார். பின் எல்லோருமே தயாராகி மண்டபத்திற்கு சென்றார்கள். மனோகர் தன்னுடைய வசதியான பந்தாவை எல்லோரும் முன்பும் காண்பித்தார். நிலாவிற்கு அது பிடிக்கவே இல்லை. இருந்தாலும் நிலா, பிரச்சனை வேண்டாம் என்று அமைதியாக இருந்தார்.
அய்யனார் துணை:
பின் நிலா, சேரன் குடும்பத்திற்காக ஒரு ரூமை ஏற்பாடு செய்து தரச் சொன்னார். அதற்கு பின் நிலா பங்ஷனுக்கு ரெடியாக சென்றார். மனோகர் இது தான் சந்தர்ப்பம் என்று சோழன் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரையும் வேலை வாங்க திட்டம் போட்டார். முதலில் பாண்டியன், பல்லவன் இருவரையும் சேர்களை அடுக்கி வைக்க சொன்னார். சேரனை சமையல் செய்ய சொல்கிறார். பின் வந்திருக்கும் உறவினர்கள் எல்லாம் ஜூஸ் கொடுக்க சொன்னார். சோழன் குடும்பத்தையே ரொம்ப அவமரியாதையாக மனோகர் நடத்திக் கொண்டிருந்தார். பின் நிலா, தன் அப்பாவுக்கு சரியான பதிலடி கொடுத்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோடில் நிலா, தன்னுடைய பெற்றோர் பேச்சை மீறி மீண்டும் அய்யனார் குடும்பத்துடன் சேர்ந்து சென்னைக்கு கிளம்புகிறார். இதனால் மனோகர் ரொம்பவே வருத்தப்படுகிறார். சென்னை வரும் வழியில் அய்யனார் குடும்பத்தில் உள்ள எல்லோருமே சந்தோஷமாக பாட்டு பாடி, கிண்டல் கேலி என்று வருகிறார்கள். இன்னொரு பக்கம் வானதியின் பெற்றோர்கள் நிலாவின் வீட்டில் ஏற்பாடு செய்த ஃபங்ஷன் பற்றியும், நிலா நடந்து கொண்ட விதத்தையும் பற்றி ரொம்ப பெருமையாக பேசுகிறார்கள்.
சீரியல் ட்ராக்:
இதனால் கொந்தளித்த வானதி, வழக்கம்போல நிலாவின் மீதுள்ள பொறுமையால் தன்னுடைய பெற்றோர்களை திட்டுகிறார். அதற்குப்பின் வானதி அப்பா, நகையை அடமானம் வைத்து கொண்டு வந்த பணத்தை மெடிக்கல் ஷாப் வைக்க வானதியிடம் கொடுக்கிறார். அதை பார்த்தவுடன் வானதி ரொம்பவே சந்தோசப்படுகிறார். அதற்குப்பின் நிலா, வீட்டில் உள்ள வேலைகளை எல்லாம் ஒவ்வொருவராக பிரித்து கொடுத்து வேலையை வாங்கிக் கொண்டிருக்கிறார். நிலாவிற்கு பயந்து கொண்டு எல்லோரும் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்