நடுரோட்டில் ருத்ர தாண்டவம் ஆடிய வானதி, பல்லவன் காதலி கொடுத்த ட்விஸ்ட் - அய்யனார் துணை

By subhashini · 5/11/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சேரன் வீட்டில் தீபாவளி பண்டிகையை பலகாரம், பட்டாசு என்று அமர்க்களமாக கொண்டாடினார்கள். நிலா ரொம்ப சந்தோசமாக தீபாவளி பண்டிகையை கொண்டாடி இருந்தார். புது துணி போட்டு எல்லோருமே போட்டோ எடுத்து கொண்டார்கள். பின் சோழன், நிலாவுடன் சேர்ந்து தனியாக போட்டோ எடுத்துக் கொண்டார். சோழன் தன்னுடைய வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் தல தீபாவளி வித் ஒய்ஃப் என்று போட்டிருந்தார். இதை நிலா பார்க்க மாட்டாளா? என்று ஏங்கிக் கொண்டிருந்தார்.

பின் நிலா தன்னுடைய மொபைலில் எல்லோரும் அனுப்பி இருக்கும் மெசேஜையும், ஸ்டேட்டஸ் எல்லாம் பார்த்து விட்டார். பின் பல்லவன் ஸ்டேட்டஸ் மட்டும் நன்றாக இருக்கிறது என்றார். ஆனால், சோழன் ஸ்டேட்டஸை பார்த்துவிட்டு எதுவுமே சொல்லவில்லை. இதனால் சோழன், நிலா என்னை காதலிக்கிறார் என்று ரொம்ப சந்தோஷமாகவே தன்னுடைய தம்பிகளிடம் சொல்லிக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் போன் செய்த தரகர், உன்னை பெண் பார்ப்பதற்காக வீட்டிற்கு வருகிறார்கள் என்றார்.

அய்யனார் துணை:

அதற்கு சேரன், நானே பெண் இருக்கும் வீட்டிற்கு வரவேண்டாம் என்று சொல்லி விட்டார். அதற்குப்பின் பஸ் ஸ்டாப்பில் நிலா, சோழன், பல்லவன் மூவரும் நின்று கொண்டிருந்தார்கள். அப்போது அந்த பெண் பல்லவனை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று சோழன் சொன்னார். உடனே பல்லவன் அந்த பெண்ணிடம் பேச போனார். அப்போது அந்தப் பெண், எனக்கு உங்கள் அண்ணனிடம் பேச வேண்டும். அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவருடைய போன் நம்பர் கிடைக்குமா? என்றார். யாரை சொல்கிறார் என்று புரியாமல் பல்லவன் அமைதியாக நின்றார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் அந்த பெண் தன்னை காதலிக்கவில்லை தன் அண்ணன் பாண்டியனை தான் காதலிக்கிறார் என்று தவறாக புரிந்து கொண்ட பல்லவன் ரொம்பவே கவலைப்படுகிறார். இதை அறிந்த சோழன் சந்தோஷத்தில் பாண்டியனிடம் நடந்ததை சொல்கிறார். இதை எல்லாம் கேட்ட வானதி, வானத்துக்கும் பூமிக்குமாக குதிக்கிறார். பின் அந்த பெண்ணிடம் சண்டை போடவானதி கிளம்பி விடுகிறார். இன்னொரு பக்கம் சேரனுக்கு தரகர் ஒரு பெண்ணை பார்த்திருக்கிறார். அவர் கல்யாணம் ஆகி விவாகரத்துக்கு அப்ளை செய்திருக்கிறார்.

சீரியல் ட்ராக்:

அந்தப் பெண் தன்னுடைய முன்னாள் கணவரை வெறுப்பேற்றுவதற்காகவே திருமணம் செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். இதில் சேரனுக்கு விருப்பமில்லை. இருந்தாலும் தன்னுடைய தம்பிகளுக்கு கல்யாணம் ஆகவேண்டும் என்று கட்டாயத்திற்காக இந்த திருமணத்திற்கு ஒத்துக்கொள்கிறார். அதற்குப்பின் பஸ் ஸ்டாண்டில் அந்த பெண்ணை பார்த்து வானதி பயங்கரமாக வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார். அந்த பெண்ணிற்கு ஓன்றுமே முடியவில்லை. பின் வானதி, நான் தான் பாண்டியனை திருமணம் செய்ய போகிறேன். ஒழுங்கு மரியாதையை இரு என்றெல்லாம் மிரட்டுகிறார். பின் அந்த பெண், நான் பாண்டியனை யார் என்று தெரியாது. நான் சோழனை தான் காதலிக்கிறேன் என்று சொல்கிறார். இதை கேட்டு பல்லவனுக்கு இன்னும் ஷாக் ஆகிறது. இத்துடன் சீரியல் முடிகிறது

behindtalkies AMP · Quick view
View full