வானதியின் முடிவால் ஆடிப்போன பாண்டியன், சேரன் என்ன செய்ய போகிறார்? அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நிலா,சோழன், சேரன் வீட்டிற்கு வந்து விட்டார்கள்.நடேசன் நடந்ததை விசாரித்தார். வானதி வழக்கம்போல சமைக்கிறேன் என்றார். அதைக் கேட்டவுடன் பல்லவன், இவர்கள் சமையல் என்ற பெயரில் எங்களை ரொம்பவே டார்ச்சல் செய்து விட்டார்கள் என்று நடந்ததை எல்லாம் சொல்லி கலாய்க்கிறார். சோழன், பாண்டியன் இருவருமே சிரித்தார்கள். இதையெல்லாம் பார்த்து வானதிக்கு கஷ்டமாகிறது. பின் வானதி கோபத்துடன் சென்று விட்டார்.
நடேசன், சந்தா வீட்டில் நடந்ததை பற்றி விசாரித்தார். சோழன், சந்தா அப்பா சொன்ன விஷயத்தையும், 25 லட்சம் பணம், 30 பவுன் நகை கொடுப்பதாக சொன்ன விஷயத்தை எல்லாம் சொல்கிறேன். அதைக் கேட்டு நடேசன் பயங்கரமாக கொந்தளித்தார். உண்மையான காதல் இருந்தால் சந்தா இப்படி செய்ய மாட்டாள். அவள் எல்லோரையும் எதிர்த்து சேரனுக்காக நிற்க வேண்டும். பணம் கொடுத்து தான் சந்தாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எந்த அவசியமும் கிடையாது என்றெல்லாம் சொன்னார். உடனே சோழன், நடேசனை திட்டிக் கொண்டிருந்தார்.
அய்யனார் துணை:
அப்போது பாண்டியன், நடேசனுக்கு உடம்பு சரியில்லாத போன விஷயத்தை எல்லாம் சொன்னார். சேரன் தன் தந்தையை நினைத்து வருத்தப்பட்டார். அதற்குப்பின் பாண்டியன் கடையில் வேலை செய்து கொண்டிருக்கும்போது வானதி வந்தார். அப்போது வானதி, பல்லவன் சொல்லும் போது நீயும் சிரிக்கிறாய். நான் என்ன டார்ச்சல் செய்தேனா? என்றார். அப்போது பாண்டியன், உண்மையாலுமே நீ டார்சல் தான் செய்தாய். உனக்கு வரவில்லை என்றால் விட வேண்டியது தானே, இதற்காக சமையல் என்ற பெயரில் இப்படி செய்தாய் என்று மீண்டும் கிண்டல் செய்தார். இதனால் கொந்தளித்த வானதி, பாண்டியனுடன் சண்டை போட்டு இனி நான் உன்னை பார்க்க வர மாட்டேன் என்றார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் நிலா,சோழன் இருவரும் சேரன் திருமண விஷயத்தைப் பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நிலா, சோழன் மீது நிறையவே அக்கறையுடனும் பாசத்துடனும் பேசிக் கொண்டிருக்கிறார். அதைக் கேட்டு சோழனுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. அதற்குப்பின் சந்தா, சேரனுக்கு போன் செய்து விசாரிக்கிறார். சேரனுமே சந்தாவிற்கு ஆறுதல் சொல்கிறார். இது எல்லாம் கவனித்த பல்லவன், பாண்டியனிடம் சொல்லி சந்தோஷப்படுகிறார். இன்னொரு பக்கம் வானதி தன்னுடைய பெற்றோர்களிடம் தனக்கு மாப்பிள்ளை பார்க்கும் விஷயத்தைப் பற்றி சொல்கிறார். வீட்டில் யாருக்குமே ஒன்றும் புரியவில்லை.
சீரியல் ட்ராக்:
வானதி, எனக்கு பாண்டியன் தேவையில்லை. எனக்கு வேறு ஒரு பையனை பார்த்து திருமணம் செய்து வையுங்கள். எனக்கு முழு சம்மதம் என்று சொல்கிறார். இதை கவனித்த வானதி அண்ணன், பாண்டியனிடம் நேரில் சென்று வீட்டில் நடந்ததை சொல்கிறார். கோபத்தில் பாண்டியன் சண்டைக்கு போகிறார். பின் இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடக்கிறது. பின் இதைப் பற்றி வானதியிடம் அவருடைய அண்ணன் சொல்லி விடுகிறார். அதற்குப்பின் பாண்டியன், வானதியை சந்தித்து நடந்ததை கேட்கிறார். வானதி, இனிமேல் என்னால் உன்னை திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை. உன்னால் நான் பட்ட அவமானம் கஷ்டம் எல்லாம் போதும். நான் வேறு ஒருவரை தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன். இதுதான் என்னுடைய இறுதியான முடிவு என்று சொல்கிறார்.