வானதி சொன்ன வார்த்தையால் சேரன் எடுத்த முடிவு, பாண்டியன் என்ன செய்ய போகிறார்? அய்யனார் துணை

By subhashini · 27/10/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் பாண்டியன் குடும்பத்தில் யாருமே இல்லை என்பதால் வானதியின் அண்ணன் வசந்த், அவசர அவசரமாக வானதிக்கு திருமணத்தை நடத்த ஏற்பாடு செய்தார். இதற்கு அவருடைய பெற்றோர்களும் உடந்தையாக இருந்தார்கள். வானதியிடம் கோயிலுக்கு பரிகாரம் செய்யணும் என்று பொய் சொல்லி அவரை கூப்பிட்டார்கள். வானதியுமே தன் பெற்றோர்கள் சொல்வதை நம்பி கோயிலுக்கு தயாராகிக் சென்றார். இன்னொரு பக்கம் நிலா பரிகாரத்தை செய்வதற்காக தயாராகி வந்தார்.

உடனே சோழன், சேரன் எல்லோருமே வேண்டாம் என்று தடுத்தார்கள். இருந்துமே நிலா கேட்கவில்லை. தன் குடும்பத்திற்காக செய்வேன் என்று உறுதியாக நின்று நிலா தீச்சட்டி எடுத்துக்கொண்டு சென்றார். பின் செல்லும் வழியில் நிலாவால் முடியவில்லை. இருந்தாலுமே நிலாவிற்கு பார்த்து பார்த்து சோழன் கவனித்தார். ஒரு வழியாக பரிகாரத்தை நிலா செய்து முடித்தார். அதற்குப்பின் நிலாவின் கையில் புண் அதிகமானதால் அவருக்கு ஐஸ்கட்டி ஒத்தடம் கொடுத்து. ரொம்பவே சோழன் வேதனைப்பட்டார்.

அய்யனார் துணை:

வானதி, என்னுடைய வயிற்றில் பாண்டியன் குழந்தை இருக்கிறது. வேணும் என்றால் ஹாஸ்பிடலுக்கு என்னை அழைத்துப் போங்கள். இதற்கு சம்மதம் என்றால் நான் திருமணம் செய்து கொள்கிறேன் என்றார். இதைக் கேட்ட வசந்த் பார்த்த மாப்பிள்ளை பயந்து ஓடி விட்டார். வானதியின் குடும்பத்தினர் எல்லோருமே ஆடிப் போய் விட்டார்கள். வானதி உண்மையாகவே கர்ப்பமாக இருக்கிறார் என்று நினைத்துக் கொள்கிறார்கள். பின் சோழன், நிலாவை சைக்கிளில் அழைத்து கொண்டு ஊர் சுற்றினார்.

சீரியல் ட்ராக்:

இன்னொரு பக்கம் கோவிலில் சேரன் குடும்பம் சாமி கும்பிட்டு கொண்டிருக்கும் போது அய்யனார் சாமி வந்து குறி சொன்னார். அப்போது சாமி, சேரனை அழைத்து நீ நினைத்து என்னை தேடி வந்ததுக்கான காரணம் நிறைவேறும். சந்தோஷமாக செல் என்றார். அதற்கு பின் வீட்டில் எல்லோருமே சந்தோசமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் வீட்டிற்கு வந்த வானதியின் அம்மா, அப்பா எல்லோருமே ரொம்ப எமோஷனலாக அழுதார்கள். வானதி உண்மை எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.

http://youtube.com/watch?v=DPQ9lKNKKYE

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் வானதி, எனக்கு கோயிலில் கல்யாணம் பண்ண பார்த்தார்கள் என்று நடந்ததை சொல்லி என்னை கல்யாணம் செய்து கொள் என்கிறார். பாண்டியன், சேரன் அண்ணனுக்கு கல்யாணம் ஆகாமல் நான் கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன் என்று உறுதியாக சொல்லி விடுகிறார். பின் சேரனை பார்த்த வானதி, தயவு செய்து நீங்கள் கல்யாணம் செய்து கொள்ளுங்கள் என்று பாண்டியன் சொன்னதை ரொம்ப எமோஷனலாக பேசுகிறார். இதைக் கேட்டு வருத்தப்பட்ட சேரன், சீஎனக்கு எப்படிப்பட்ட பெண்ணாக இருந்தாலும் சரி. சீக்கிரமே கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று தரகரிடம் சொல்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full