நிலாவிடம் அன்போடு நடந்து கொள்ளும் சோழன் குடும்பம், பொறாமையில் வானதி - அய்யனார் துணை

By subhashini · 2/4/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நிலா-சோழன் இருவருமே ட்ரிப்பை முடித்துவிட்டு கிளம்பி வந்து கொண்டிருந்தார்கள். அப்போது வயதான தம்பதியுமே பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்கள். நிலாவும் எதற்கும் மறுப்பு சொல்லாமல் சிரித்துக்கொண்டே ஏற்றுக் கொண்டார். அதை பார்த்து சோழன் ரொம்ப சந்தோசப்பட்டார். இன்னொரு பக்கம் பாண்டியன், வானதிக்கு போன் செய்து சந்தாவை வீட்டிற்கு அழைத்து வர சொன்னார். பின் வானதி இதைப்பற்றி சந்தாவிடம் சென்றார்.

அதற்குப்பின் பல்லவன், கல்லூரியில் எப்படியாவது போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்று கடுமையாக உழைத்துக் கொண்டிருந்தார். அவருடைய நண்பர்கள் வேண்டாம் என்று சொல்லியுமே பல்லவன் கேட்கவில்லை. அதற்குப்பின் சந்தாவை அழைத்துக் கொண்டு வானதி, சேரன் வீட்டிற்கு வந்தார். சந்தாவை பார்த்தவுடன் சேரன் ரொம்ப சந்தோஷப்பட்டார். வீட்டில் உள்ள எல்லோருமே சந்தாவிடம் விசாரித்தார்கள். பின் வானதி செய்த விஷயத்தை பாராட்டினார்கள். அதற்கு பின்பு சேரன்-சந்தா இருவரும் தனியாக சந்தித்து பேசி கொண்டார்கள்.

அய்யனார் துணை:

சோழன்- நிலா இருவரும் அந்த வயதான ஜோடியை அவர்களுடைய வீட்டில் விட்டார்கள். அவர்கள் நிலா-சோழனை வீட்டிற்கு அழைத்து ஆசீர்வாதம் செய்து அனுப்பி வைத்தார்கள். பின் சோழன்- நிலா இருவரும் வீட்டிற்கு வராமல் நேராக பீச்சுக்கு போனார்கள். இன்னொரு பக்கம் அனீஸ், சந்தாவை பார்க்க சேரன் வீட்டிற்கு வந்தார். அனீஷை பார்த்தவுடன் சந்தா எமோஷனலாக அழுதார்

சீரியல் ட்ராக்:

பின் சேரன்,சந்தா, அனிஷ் எல்லோருமே சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்தார்கள். பீச்சில் நிலா- சோழன் இருவரும் சந்தோஷமாக தண்ணீரில் விளையாடினார்கள். அப்போது நிலா, நீங்கள் ஏதாவது வாழ்க்கையில்
சாதிக்க வேண்டும் என்று சொன்னார். சோழன், நீங்கள் என்னை விட்டுப் போகப் போகிறீர்களா? என்று கேட்டார். அதற்கு நிலா, அப்படியெல்லாம் இல்லை. நீங்கள் எனக்காக எவ்வளவோ கஷ்டப்பட்டு இருக்கிறீர்கள். அதற்காகத்தான் சொல்கிறேன். உங்கள் ஆசை என்ன? என்றார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் நல்லபடியாக ட்ரிப்பை முடித்துவிட்டு நிலா- சோழன் இருவரும் வீட்டிற்கு வருகிறார்கள் அப்போது நிலாவை பார்த்தவுடன் மொத்த குடும்பமே சந்தோசப்படுகிறார்கள். சந்தா உட்பட அனைவருமே நிலாவிடம் விசாரிக்கிறார்கள். வானதியை கண்டு கொள்ளவில்லை. இதனால் வானதிக்கு பயங்கர கோபம் வருகிறது. பின் நிலா, வீட்டில் உள்ள எல்லோரிடமும் பேசிக் கொண்டிருக்கிறார். அதை பார்த்து வானதிக்கு பொறாமையாக இருக்கிறது. பின் இதைப்பற்றி பாண்டியனிடம் சொல்லி வானதி சண்டை போடுகிறார். பாண்டியனும் முடிந்தவரை வானதியை சமாதானம் செய்கிறார். அதற்கு பின் சோழன் ட்ரிப்பில் நடந்ததை எல்லாம் தன்னுடைய சகோதரர்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full