வானதி அப்பா சொன்ன வார்த்தையால் உடைந்து போன பாண்டியன், நிலாவின் பிடிவாதம் - அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நிலாவின் தோழி, எதுவாக இருந்தாலும் நிதானமாக பொறுமையாக யோசி என்றார். அதற்கு பின் நிலா, உங்களுக்கு ஆறு மாதம் ஆகாசம் கொடுக்கிறேன். அதற்குப்பின் செட் ஆகவில்லை என்றால் நான் சென்று விடுவேன் என்றார். சோழன் சந்தோஷத்தில் எழுந்து நின்று துள்ளி குதித்தார். அதை பார்த்து நிலாவிற்கு ஒன்றுமே புரியவில்லை. சேரன்- பாண்டியன் குழம்பி நின்றார்கள். சோழனின் ஓனர் அமைதியாக படு என்றார். சோழனுமே அடிபட்டது போல் மீண்டும் நடித்தார்.
நடேசன், உண்மையை சொல் உனக்கு அடிபட்டு இருக்கா, நடிக்காதே என்று கேட்டார். சேரன், பாண்டியன், பல்லவன் எல்லோருமே சோழனிடம் விசாரித்தார்கள். நிலாவுமே கோபப்பட்டு திட்டினார். சோழன், மீண்டும் மீண்டும் வலி இருப்பது போலவே நடித்துக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் சோழனின் ஓனர் உண்மையை சொல்லி விட்டார். நான் தான் இப்படி செய்ய சொன்னேன். நிலா- சோழனை சேர்த்து வைக்க எனக்கு வேறு வழி தெரியவில்லை என்றார். இதனால் கொந்தளித்த நிலா, நீ திருந்தவே மாட்டாய்.
அய்யனார் துணை:
நான் இங்கிருந்து கிளம்புகிறேன் என்றார். சோழன், வழியை மறைத்து நிலாவின் காலில் விழுந்து கெஞ்சி கதறுகிறார். சேரன், நடேசன் எல்லோருமே சோழனை திட்டிக் கொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில் நிலா, உனக்கு ஆறு மாதம்தான் அவகாசம். நீ மீண்டும் பொய் சொல்லி ஏமாற்றி இருந்தாய் நான் உன்னை விட்டு சென்று விடுவேன் என்று ஒரு வாய்ப்பு கொடுத்தார். இதனால் சோழன் ரொம்பவே சந்தோஷப்பட்டார். இருந்தாலும் சேரன், நடேசன் எல்லோருமே சோழன் செய்த தவறை மன்னிக்காமல் திட்டிக் கொண்டிருந்தார்கள். அதற்கு பின் எல்லோருமே கிளம்பி வீட்டிற்கு வந்தார்கள்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் நிலா மீண்டும் வீட்டுக்கு வந்ததை நினைத்து சோழன் சந்தோஷப்படுகிறார். வழக்கம் போல தன்னுடைய திமிராக பேசிக் கொண்டிருக்கிறார். சேரன், ஒழுங்காக நடந்து கொள் என்று அறிவுரை சொல்கிறார். அதற்கு பின் சேரன், பாண்டியன் இருவரும் வெளியே செல்கிறார்கள். அப்போது அங்கு பாண்டியனை சந்தித்த வானதியின் அப்பா, வானதிக்கு சீக்கிரமாகவே திருமணம் நடக்க இருக்கிறது. அதற்கான வேலைகள் செய்து கொண்டிருக்கிறோம். தயவு செய்து என் மகளின் வாழ்க்கையில் தலையிடாதே. கல்யாணத்தை நிறுத்த பார்க்காதே என்றெல்லாம் சொல்கிறார்.
சீரியல் ட்ராக்:
அதைக் கேட்டு பாண்டியனும் சரி என்று அமைதியாக இருக்கிறார். வானதியின் அப்பா சொன்னதையே நினைத்து பார்த்து பாண்டியன் ரொம்பவே கவலையில் இருக்கிறார். இதையெல்லாம் கவனித்த நிலா, சேரன் எல்லோருமே விசாரிக்கிறார்கள். ஆனால், பாண்டியன் எதுவும் இல்லை என்று சொல்லிவிடுகிறார். அதற்குப்பின் நிலா சொல்லும் வேலைகள் எல்லாம் சோழன் செய்கிறார். ஆனால், நிலா அதை எதையுமே ஏற்று கொள்ளவில்லை. சேரன், பல்லவனிடம் தான் உதவி கேட்கிறார்