பாண்டியனுக்காக வானதி கொடுத்த கிஃப்ட்டை கிண்டல் செய்யும் சோழன் - பரபரப்பில் அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சோழன், பாண்டியன் இருவரும் தடுத்து அந்த ரவுடிகளை அடித்து அங்கிருந்து அனுப்பினார்கள். நடேசனும் செங்கல் எடுத்து அனைவரையும் அடித்து துரத்துகிறார். பின் சோழன், என்ன நடந்தது என்று கேட்டார். உடனே சேரன், இந்த ரவுடிகள் தகராறு செய்ததை எல்லாம் சொன்னார். இதையெல்லாம் பார்த்து சோழன், பாண்டியனுக்கு சந்தோசமாக இருக்கிறது. அதற்கு பின் வானதி, பாண்டியன் கடைக்கு வந்தார். வழக்கம் போல வானதி பாண்டியன் மீது கோபத்தில் இருந்தார்.
பாண்டியன், நீ கொஞ்ச நாட்களாக சரியாக இல்லை. என்னுடன் பேசுவதில்லை. எனக்கு கஷ்டமாக இருக்கிறது என்று ரொம்ப காதலாக பேசி இருந்தார். இதைக் கேட்டு வானதி மனமாறினார். பின் பாண்டியன்-வானதி இருவரும் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துக் கொண்டார்கள். அந்த சமயம் வந்த சோழன், அதை பார்த்து பயங்கர காண்டாகினார். பின் சோழன், பாண்டியன்- வானதி இருவரையும் திட்டிவிட்டு அங்கிருந்து சேரன் வேலை செய்யும் இடத்திற்கு போனார்.
அய்யனார் துணை:
அங்கு சந்தா-சேரன் இருவரும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது சந்தா, சேரனுக்கு முத்தம் கொடுத்து விட்டார். இதை பார்த்து சோழன் சாக்காகினார். இப்படி தன்னுடைய தம்பி, அண்ணன் எல்லோருமே ரொமான்டிக்காக இருப்பதை பார்த்துச் சோழனுக்கு பயங்கர கடுப்பானது. பின் நிலா வேலை செய்யும் இடத்திற்கு சென்ற சோழன், நடந்ததை எல்லாம் சொல்லி புலம்பினார். நிலாவும் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் நிலா, இதை சொல்லத்தான் அழைத்தீர்களா? என்று அங்கிருந்து கிளம்பி விடுகிறார். பின் சோகத்திலேயே சோழன், பாண்டியன் கடைக்கு வருகிறார். அங்கு பல்லவன், பாண்டியன், சோழன் எல்லோருமே கடை திறப்பு விழாவிற்கு டெக்கரேஷன் செய்து கொண்டிருக்கிறார்கள். வானதியும் தன்னால் முடிந்த வேலை செய்து கொண்டிருக்கிறார். அதற்குப்பின் சோழன், கடைக்கு என்ன பெயர் வைக்கப் போகிறாய்? என்று கேட்கிறார். அதற்கு பாண்டியன், சர்ப்ரைஸ் என்று சொல்கிறார்.
அதற்குப்பின் வானதி, தான் சேர்த்து வைத்த உண்டியல் பணத்தை எடுத்துக் கொண்டு போய் பாண்டியனுக்கு ஷர்ட் வாங்குகிறார்.
சீரியல் ட்ராக்:
நிலா- சோழன் இருவரும் பேசிக்கொண்டு நடந்து வருகிறார்கள். அப்போது நிலா, நீங்களும் ஒரு பெண்ணை காதலியுங்கள். நீங்களும் சந்தோசமாக இருப்பீர்கள் என்று கிண்டல் அடிக்கிறார். சோழன், இப்ப அதற்கு மட்டும்தான் குறைச்சல் என்று புலம்பி கொண்டிருக்கிறார். அதற்குப்பின் பாண்டியன் கடைக்கு நிலா- சோழன் இருவரும் வந்து விடுகிறார்கள். அப்போது வானதி கொடுத்த கிப்ட் பார்த்து சோழன் வழக்கம் போல கிண்டல் செய்கிறார். நிலா வேண்டாம் என்று சொல்லியும் சோழன் கேட்காமல் கேலி செய்து கொண்டிருக்கிறார். வானதியின் முகம் மாறிவிடுகிறது. இத்துடன் சீரியல் முடிகிறது