பல்லவனால் அவமானப்பட்டு நிற்கும் வானதி, கிண்டல் செய்யும் பாண்டியன் - பரபரப்பில் அய்யனார் துணை

By subhashini · 30/4/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் வானதி சமைத்து தருகிறேன் என்று பெயரில் கொடுமை செய்து கொண்டிருந்தார். இதையெல்லாம் பார்த்து பல்லவனால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை தப்பித்து விட்டார். பாண்டியன், நீ சமைக்க தேவை இல்லை. நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்றார். இருந்தாலுமே வானதி கேட்காமல் செய்து கொண்டிருந்தார். பின் சோழன், உங்கள் மகளுக்கு 25 லட்சம் பணம், 30 பவுன் நகையை எங்கள் அண்ணன் போட்டால் நீங்கள் திருமணத்திற்கு ஒத்துக் கொள்வீர்களா? என்றார். சோழன்-நிலா ஷாக் ஆனார்கள். ஒரு கட்டத்தில் சந்தாவின் அப்பா, ஆறு மாதம் டைம் தருகிறேன். நீங்கள் எல்லாம் கொண்டு வந்தால் என் மகளை திருமணம் செய்து வைக்கிறேன் என்று ஒத்துக்கொண்டார்.

சோழன், சொன்ன நிபந்தனைக்கு சந்தாவின் அப்பா ஒத்துக்கொண்டார். பின் சேரன்- சந்தா இருவரும் சந்தித்து எமோஷனலாக பேசி கொண்டார்கள். அதற்குப்பின் சேரன் குடும்பத்தினர் அங்கிருந்து கிளம்பினார்கள். இன்னொரு பக்கம் சமையல் என்ற பெயரில் வானதி ரொம்பவே கொடுமை செய்து கொண்டிருந்தார். பாண்டியன், பல்லவனால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அதற்குப்பின் பாண்டியன் வேலை செய்து கொண்டிருக்கும் போது நடேசனுக்கு உடம்பு முடியாமல் போகிறது. உடனே பாண்டியன் ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்றார். அப்போது டாக்டர், நடேசனுக்கு பிபி ரொம்பவே குறைவாக இருக்கிறது என்றார்.

அய்யனார் துணை:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் நடேசனுக்கு உடம்பு சரியில்லாததால் பாண்டியன் பார்த்து பார்த்து கவனித்துக் கொள்கிறார். அந்த சமயம் வந்த வானதி, என்னாச்சு என்று விசாரித்தார். பாண்டியனும் நடந்ததை சொல்கிறார். வானதி, சில அட்வைஸ் எல்லாம் கொடுத்துவிட்டு சமைக்கப் போகிறேன் என்று சொல்கிறார். உடனே பல்லவன், அண்ணன் ஓட்டலில் வாங்கி வந்து விட்டார். நீங்கள் கஷ்டப்பட வேண்டாம் என்று சொல்லிவிடுகிறார். இன்னொரு பக்கம் சந்தா அப்பாவிடம் வாக்குறுதிகளை கொடுத்ததால் என்ன செய்வது என்று புரியாமல் சேரன் தவித்துக் கொண்டிருக்கிறார்.

இன்றைய எபிசோட்:

நிலா, எதற்காக இப்படி சொன்னீர்கள் என்று கேட்கிறார். சோழன், நாம் எதுவும் சொல்லவில்லை என்றால் சந்தாவிற்கு சீக்கிரமாக கல்யாணம் செய்திருப்பார்கள். ஏதாவது நாம் செய்து ரெடி பண்ணலாம். இப்போதைக்கு சந்தாவிற்கு கல்யாணம் நடக்காது என்று சொல்கிறார். இருந்தாலும் சேரன், நிலாவால் சோழன் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மறுநாள் காலையில் வானதி வீட்டு வேலையெல்லாம் செய்து கொண்டிருக்கிறார். இதை பார்த்து பாண்டியனுக்கு ஒன்றுமே புரியவில்லை.

சீரியல் ட்ராக்:

அந்த சமயம் பார்த்து நிலா,சோழன், சேரன் வீட்டிற்கு வந்து விடுகிறார்கள்.நடேசன் நடந்ததை விசாரிக்கிறார். வானதி வழக்கம்போல சமைக்கிறேன் என்று சொல்கிறார். அதைக் கேட்டவுடன் பல்லவன், இவர்கள் சமையல் என்ற பெயரில் எங்களை ரொம்பவே டார்ச்சல் செய்து விட்டார்கள் என்று நடந்ததை எல்லாம் சொல்லி கலாய்க்கிறார். சோழன், பாண்டியன் இருவருமே சிரிக்கிறார்கள். இதையெல்லாம் பார்த்து வானதிக்கு கஷ்டமாகிறது. பின் வானதி கோபத்துடன் சென்று விடுகிறார்.

behindtalkies AMP · Quick view
View full