நிலாவை அசிங்கப்படுத்திய வானதி, கொந்தளிக்கும் சோழன் - அனல் பறக்கும் அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் வானதி அண்ணன், பாண்டியனிடம் நேரில் சென்று வீட்டில் நடந்ததை சொன்னார். கோபத்தில் பாண்டியன் சண்டைக்கு போனார். பின் இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடக்கிறது. பின் இதைப் பற்றி வானதியிடம் அவருடைய அண்ணன் சொல்லி விட்டார். அதற்குப்பின் பாண்டியன், வானதியை சந்தித்து நடந்ததை கேட்டார். வானதி, இனிமேல் என்னால் உன்னை திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை. உன்னால் நான் பட்ட அவமானம் கஷ்டம் எல்லாம் போதும். நான் வேறு ஒருவரை தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன்.
இதுதான் என்னுடைய இறுதியான முடிவு என்றார். வானதி, இனிமேல் என் வாழ்க்கையில் நீ தேவை இல்லை. நான் வேறொரு திருமணம் தான் செய்யப் போகிறேன் என்று கோபமாக பேசி இருந்தார். பாண்டியனுமே பதிலுக்கு வானதியிடம் சண்டை போட்டு விட்டார். இன்னொரு பக்கம் நிலா, தன்னுடைய புது ப்ராஜெக்ட் பற்றி விவரமாக சொல்லிக் கொண்டிருந்தார். அதை பார்த்து சேரனுக்கு சந்தோசமாக இருந்தது.
அய்யனார் துணை:
நிலா பேசுவதை பார்த்து ரொம்ப பெருமைப்பட்டார். அதற்குப்பின் அய்யனார் வீட்டில் எல்லோருமே ஒன்றாக சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது பாண்டியன் சோகமாக இருப்பதை பார்த்து எல்லோருமே விசாரித்தார்கள். பாண்டியனும் நடந்ததை சொன்னார். பின் பாண்டியன் சோகமாக இருப்பதை பார்த்து சோழன்- நிலா இருவரும் அறிவுரை சொன்னார்கள். இருந்தாலும் வானதி பேசியது நினைத்து பாண்டியன் வருத்தப்பட்டு கொண்டிருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பாண்டியன் சோகமாக இருப்பதால் நிலா-சோழன் இருவரும் சேர்ந்து வானதியிடம் பேச போகிறார்கள். சோழன் கேட்கும் கேள்விக்கெல்லாம் வானதி நக்கல் ஆகவே பதில் அளிக்கிறார். நிலா, இப்பதானே காலேஜ் படிக்கிறாய். கல்யாணத்தைப் பற்றி பிறகு யோசிக்கலாம் என்று சொல்கிறார். வானதி முகத்தில் அடித்தது போல நிலாவை பார்த்து, நீங்களும் காலேஜ் முடித்தவுடன் தானே கல்யாணம் செய்து கொண்டீர்கள் என்று கேட்கிறார். அதோடு நிலாவை ரொம்பவே அவமரியாதையாக பேசி என் விஷயத்தில் தலையிட வேண்டாம் என்று வானதி சொல்லிவிடுகிறார்.
சீரியல் ட்ராக்:
இதனால் சோழனுக்கு கோபம் வந்து வானதியை திட்டுகிறார். பதிலுக்கு பதில் இருவரும் பேசிக் கொள்கிறார்கள். அதற்குப்பின் நிலா, நான் தான் தெரியாமல் இவர்கள் விஷயத்தில் தலையிட்டேன். சாரி என்று சொல்ல, சோழன் ஆறுதல் சொல்கிறார். அதற்குப்பின் பாண்டியனை சந்தித்த வானதி, நீ உன் குடும்பத்தை அனுப்பி என்னிடம் பேச வைத்து கல்யாணத்தை நிறுத்த பார்க்கிறாயா? நிலா-சோழன் இருவரும் பேசியதை எல்லாம் நக்கலாக பேசி வானதி வம்பு இருக்கிறார். பாண்டியனுமே பதிலுக்கு வானதியை திட்டி அங்கிருந்து அனுப்பி விடுகிறார்.