நிலாவின் மீது வெறுப்பை கொட்டும் வானதி, ராகவ் செய்த வேலையால் கடுப்பான சோழன் - அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் ஹோட்டலில் ராகவ், நிலாவை மட்டும் பார்த்து பார்த்து கவனித்துக் கொண்டார். அதையெல்லாம் பார்த்து நிலாவிற்கு பிடிக்கவில்லை. ஆபீஸில் எல்லோருமே ராகவ், நிலாவை கவனிப்பதை ஒரு மாதிரியாக பார்த்து சிரித்தார்கள். இதையெல்லாம் பார்த்து நிலாவிற்கு கஷ்டமாக இருந்தது. பின் நிலா, சோழனை ஹோட்டலுக்கு வந்து அழைத்துச் செல்ல வர சொன்னார். சோழனும், நிலா இருக்கும் இடத்திற்கு சென்றார். பின் நிலா, நான் கிளம்புகிறேன் என்று சொன்னவுடன் ராகவ் முகம் மாறுகிறது.
நிலா கிளம்பியவுடன் ராகவும் வந்தார். இதை பார்த்து சோழனுக்கு கடுப்பாகிறது. நிலா காரில் உட்கார்ந்தவுடன் ராகவ், நிலா நான் பார்க்கும் பொண்ணு. புரியலையா என்னுடைய ஆளு கவனமாக பார்த்துக் கொள் என்றார். இதை கேட்டவுடன் சோழனுக்கு பயங்கர கோபம் வருகிறது. இருந்தாலும் அமைதியாக இருந்தார். பின் ராகவ், நிலாவை பற்றி பேசிக் பேசிக்கொண்டிருந்தார். சோழன், எல்லாம் எனக்கு தெரியும் என்று அங்கிருந்து கிளம்பி விட்டார். பின் வீட்டிற்கு வந்த நிலாவிடம் எல்லோருமே ப்ராஜெக்ட்டை பற்றி விசாரித்தார்கள்.
அய்யனார் துணை:
அப்போது சோழன் ஐ லவ் யூ சொன்ன கதை எல்லாம் சொன்னார்கள். இதை கேட்டு நிலாவிற்கு கோபம் வருகிறது. நிலா, நான் அப்படியெல்லாம் எதுவும் சொல்லவில்லை. ஹக் மட்டும்தான் பண்ணேன் என்றார். இதனால் பல்லவன், பாண்டியன் எல்லோருமே மாறி மாறி சோழனை கிண்டல் செய்தார்கள். இதனால் கோபப்பட்ட சோழன் எல்லோரிடமும் சண்டை போட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியே போனார். அதற்குப்பின் சோழன் வீட்டிற்கு வந்தார். இருந்தாலும் சோழன் வந்தது தெரியாமல் பாண்டியன் குறை பேசிக் கொண்டிருந்தார். இதனால் கோபப்பட்ட சோழன், மீண்டும் எல்லோரிடமும் சண்டை போட்டு வெளியே போனார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் நிலா, சோழனை சமாதானம் செய்ய பேசுகிறார். சோழன் கோபமாக பேசிவிட்டு சவாரிக்கு கிளம்புகிறார். இது எல்லாம் நினைத்து நிலா வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார். அந்த சமயம் பார்த்து நிலாவிற்கு ராகவ் மெசேஜ் செய்கிறார். நிலா ரிப்ளை செய்யாமல் தான் இருக்கிறார். இருந்தாலுமே விடாமல் ராகவ் மெசேஜ் செய்து கொண்டிருக்கிறார். பின் ராகவ் போன் செய்கிறார். இதெல்லாம் பார்த்து நிலாவிற்கு கோபம் தான் வருகிறது. அதற்குப் பின் சோழன் சொன்ன விஷயத்தைப் பற்றி பாண்டியன், சேரன் இருவரும் நிலாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
சீரியல் ட்ராக்:
பாண்டியன் ரொம்ப சந்தோசமாக சிரித்துக்கொண்டு நிலாவிடம் பேசுவதை வானதி பார்த்து விடுகிறார். இதனால் நிலாவின் மீது வானதிக்கு பயங்கர கோபம் வருகிறது. அதற்குப்பின் ஆபீஸில் ராகவ், நிலாவிற்காக ஒரு வாட்சை கிப்டாக கொடுக்கிறார். பின் ராகவ் அதை ஸ்டேட்டஸிலும் வைத்திருக்கிறார். அதை சோழன் பார்த்துவிட்டு பயங்கரமாக கோபப்படுகிறார்.