வானதியின் சமையல் கலை, சந்தாவை தேடி அலையும் சேரன் குடும்பம் - பரபரப்பில் அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சோழன், அதெல்லாம் தேவையில்லை. உனக்கு துணையாக பாண்டியன் இங்கே விட்டு செல்கிறோம் என்றார். பின் இதைப் பற்றி பாண்டியன், வானதியிடம் சொன்னார். வானதி, தனக்காக தான் பாண்டியன் போகாம இருக்கிறான் என்று தவறாக புரிந்து கொண்டார். அதற்குப்பின் சோழன், நிலா, சேரன் மூவருமே சந்தாவின் ஊருக்கு செல்வதற்கு தயாரானார்கள். சோழன் மூவருக்குமே பிளைட் டிக்கெட் போட்டுக் கொண்டு வந்து தந்தார். நடேசன், தேவையில்லாமல் பிரச்சனையில் மாட்டிக் கொள்ளப் போகிறீர்கள் என்றார். ஆனால் சோழன் அதெல்லாம் கேட்கவில்லை.
நிலா, சோழன் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது சோழன், தனக்காக பிளைட் புக் பண்ணதை பற்றி நிலா கேட்டார். சோழன், நீங்கள் கஷ்டப்படக்கூடாது. உங்களை பத்திரமாக அழைத்துக் கொண்டு போகணும் என்றெல்லாம் பேசி இருந்தார். இதனால் நிலாவிற்கு ரொம்ப பெருமையாக இருக்கிறது. அதோடு சோழனிடம் நிலா ரொம்ப அன்பாக பேசி இருந்தார். மறுநாள் காலையில் சந்தாவின் சொந்த ஊருக்கு செல்வதற்கு சேரன், பாண்டியன், சோழன் மூவருமே தயாரானார்கள்.
அய்யனார் துணை:
அந்த சமயம் பார்த்து வானதி வீட்டிற்கு வந்து விட்டார். பின் எல்லோருமே மூவரையும் வழி அனுப்பி வைத்தார்கள். வானதி, வீட்டில் யாரும் இல்லாததால் வேலைகளை செய்ய தொடங்கினார். பின் பாண்டியன், பல்லவன் இருவரும் வேணாம் என்று சொல்லியும் வானதி கேட்கவில்லை. அதற்குப்பின் வானதி, சமைக்கிறேன் என்று ஒரு பெரிய அட்ராசிட்டி செய்து கொண்டிருந்தார். பின் வானதி, மளிகை பொருள் எழுதிக் கொடுத்தார். அதை பார்த்து நடேசனுக்கு பயங்கர கடுப்பாகி கிண்டல் அடித்தார். வானதிக்கு உதவி செய்வதற்காக பாண்டியனும் களமிறங்கினார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் வானதி சமைக்கிறேன் என்ற பெயரில் தேவையில்லாத வேலை செய்து இருக்கிறார். வானதியின் சமையலை பார்த்து எல்லோருமே பதறுகிறார்கள். நடேசன் சாப்பாடு வேண்டாம் என்று அங்கிருந்து சென்று விடுகிறார். பல்லவன் பாண்டியன் இருவரும் வானதியின் சமையலை வாயில் வைக்க முடியவில்லை. இருந்தாலும் வானதி,ஏதாவது பிரச்சினை செய்வார் என்று பயத்திலேயே சாப்பிடுகிறார்கள்.
சீரியல் ட்ராக்:
சாப்பாடு பயங்கர காரம். அதனால் தான் சாப்பாட்டை சாப்பிட முடியாமல் தவிக்கிறார். இன்னொரு பக்கம் நிலா, சோழன், சேரன் மூவருமே சந்தாவின் ஊருக்கு சென்று விட்டார்கள். ஆனால், சந்தாவின் வீடு தெரியாமல் அலைந்து கொண்டிருக்கிறார்கள். எல்லோரிடமும் வழி கேட்டுக் கொண்டே செல்கிறார்கள். ஆனால், யாருமே சரியான பதிலை சொல்லவில்லை. இன்னொரு பக்கம் சந்தா, சேரனுடைய நினைவுகளை நினைத்து மாடியில் அழுது கொண்டிருக்கிறார்.