சோழன் குடும்பத்தை கைது செய்ய வந்த போலீஸ், நிலா-வானதி சொன்ன வார்த்தை - அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் வானதி, பாண்டியனை மறக்க சொல்லி அவருடைய பெற்றோர்கள் திட்டினார்கள். இன்னொரு பக்கம் சோழன், லைசன்ஸ் வாங்குவதற்காக நிலாவை rto ஆபிஸ் போனார்கள். அங்கு நிலாவை வண்டி ஓட்ட சொன்னார்கள். ஆனால், நிலா பயத்தில் தடுமாறி ஓட்டினார். இதனால் நிலா லைசன்ஸை ரிஜெக்ட் செய்தார்கள். இருந்தாலுமே விடாமல் சோழன் கெஞ்சி கேட்டு இன்னொரு வாய்ப்பு வாங்கி தந்தார். இருந்தாலும் நிலா பயத்தில் இருந்தார். உடனே சோழன், நிலாவிற்கு வேகம் வரணும் என்றார்.
சோழன், கடுமையாக திட்டியதால் கோபப்பட்டு நிலா சரியாக வண்டி ஓட்டி காண்பித்து விட்டார். இதனால் அவருக்கு லைசன்ஸ் கிடைக்கிறது. பின் சோழன், தான் திட்டியதற்கான காரணத்தையும் சொன்னார். இதனால் நிலா சந்தோஷப்பட்டார். அதற்குப்பின் வானதியின் அண்ணன், நிலாவை பார்த்து 5 எலி, பாஞ்சாலி இங்க பாரு, பாஞ்சாலி தானே நீ என்றெல்லாம் கிண்டல் பண்ணி பேசினார். நிலாவால் எதுவும் சொல்ல முடியவில்லை. இன்னும் மோசமாக நிலாவை பேசி இருந்தார். இதனால் நிலாவிற்கு அவமானமாக இருந்தது.
அய்யனார் துணை:
பின் வீட்டிற்கு வந்து நிலா, வானதி அண்ணன் பேசியதை சொன்னார். அப்போது பல்லவன், இதற்கு முன்பு வானதி அண்ணன் பேசியது எல்லாம் சொன்னார். கொந்தளித்த பல்லவன், சேரன், சோழன் மூவருமே வானதி அண்ணனிடம் போய் சண்டை போட்டார்கள். அந்த சமயம் வந்த பாண்டியனும் வானதி அண்ணனை வெளுத்து வாங்கினார். கோபப்பட்ட வானதியின் அம்மா, போலீஸ் ஸ்டேஷனில் சோழன் குடும்பத்தின் மீது புகார் கொடுத்தார். வானதி, உண்மை தெரிந்து கொண்டு செய்யலாம் என்று சொல்லியுமே அவர் அம்மா கேட்கவில்லை.
இன்றைய எபிசோட்:
வானதியின் குடும்பத்தினர் கவுன்சிலரை அழைத்துக் கொண்டு சோழன் வீட்டில் பிரச்சனை செய்கிறார்கள். சோழன் வீட்டில் இருப்பவர்களும் பதிலுக்கு பதில் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த சமயம் பார்த்து போலீஸ் வருகிறார்கள். வானதி அம்மா, சோழன் குடும்பத்தின் மீது பொய்யான புகார் கொடுத்த்தால் போலீஸ் கைது செய்ய பார்க்கிறார்கள். உடனே நிலா, வானதி அண்ணன் செய்த வேலையை போலீசிடம் சொல்கிறார். இருந்தாலுமே அவர்கள் கேட்கவில்லை. நடேசன் தங்கை, அவர் கணவன் எல்லோருமே தங்களுக்கு தெரிந்த ஊர் மக்களை அழைத்துக் கொண்டு வந்து சோழன் வீட்டிற்கு எதிராகவே பேச வைக்கிறார்.
சீரியல் ட்ராக்:
போலீஸ், சோழன் குடும்பத்தின் மீது தான் தப்பாக நினைக்கிறது. அந்த நேரம் பார்த்து வந்த வானதி, பாண்டியனை காதலிக்கும் விஷயத்தையும் நிலாவிடம் தன் அண்ணன் நடந்து கொண்ட விஷயத்தை பற்றி எல்லாம் சொல்கிறார். பின் போலீஸ் இருதரப்பிலுமே விசாரிக்கிறார்கள். நிலாவுமே, வானதி அண்ணன் புகார் கொடுப்பதாக சொல்கிறார்கள். உடனே போலீஸ், ரெண்டு தரப்பிலும் நான் கைது செய்வேன். கோர்ட்டில் பார்த்துக் கொள்ளுங்கள் என்றெல்லாம் சொல்கிறார். இதனால் வானதியின் அம்மா எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.