பாண்டியன் செய்த வேலையால் அடி வெளுத்து வாங்கிய வானதி அண்ணன், அடுத்து என்ன? அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் போலீஸ், சோழன் குடும்பத்தின் மீது தான் தப்பாக நினைத்தது. அந்த நேரம் பார்த்து வந்த வானதி, பாண்டியனை காதலிக்கும் விஷயத்தையும் நிலாவிடம் தன் அண்ணன் நடந்து கொண்ட விஷயத்தை பற்றி எல்லாம் சொன்னார். பின் போலீஸ் இருதரப்பிலுமே விசாரித்தார்கள். நிலாவுமே, வானதி அண்ணன் புகார் கொடுப்பதாக சொன்னார்கள். உடனே போலீஸ், ரெண்டு தரப்பிலும் நான் கைது செய்வேன். கோர்ட்டில் பார்த்துக் கொள்ளுங்கள் என்றெல்லாம் சொன்னார். இதனால் வானதியின் அம்மா எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.
நேற்று எபிசோட்டில் நிலா புகார் கொடுத்தால் தன் மகனை கைது செய்து விடுவார்கள் என்று பயந்து வானதியின் அப்பா -அம்மா இருவருமே புகார் கொடுக்கவில்லை. பின் போலீஸ் இரண்டு தரப்பினருக்கும் அறிவுரை சொல்லி அனுப்பி வைத்தார்கள். இதற்கெல்லாம் காரணம் வானதி தான் என்று அவருடைய அம்மா அடித்தார் உடனே பாண்டியன், அவளுக்கு ஏதாவது ஒன்று என்றால் நான் சும்மா இருக்க மாட்டேன் என்று மிரட்டினார். இதைக் கேட்டு வானதி ரொம்ப சந்தோஷப்பட்டார். அதற்குப்பின் வீட்டில் சேரன், இனிமேல் நிலா தனியாக போக வேண்டாம் என்றார். உடனே சோழன், அவங்க சுதந்திரமாக வாழனும் நினைத்தார்கள்.
அய்யனார் துணை:
ஊரில் பேசுவதற்கெல்லாம் இப்படி பயப்படக்கூடாது என்றார். இதையெல்லாம் கேட்டு நிலா சந்தோஷப்பட்டார். இன்னொரு பக்கம் வானதியின் வீட்டில் அவருடைய அம்மா பயங்கரமாக போட்டு அடித்தார். பின் வானதி வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று வீட்டையும் பூட்டி போனை எல்லாம் பிடுங்கி வைத்துக் கொண்டார்கள். இன்னொரு பக்கம் சோழன், நிலா பேசியதையும் பாண்டியன், வானதி பேசியதையும் நினைத்து சந்தோஷப்பட்டு கொண்டிருந்தார்கள். அந்த சமயம் போன் செய்த வானதி, பாண்டியன் இடம் ஆறுதல் சொல்லிவிட்டு போனை வைத்து விட்டார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்று எபிசோட்டில் நிலா, எதற்காக இந்த முடிவு எடுத்தீர்கள். எனக்கு இதில் விருப்பமே கிடையாது. அதுவும் சோழனுடன் என்னால் இங்கு இருக்க முடியாது. ஊர் பேசுவதற்காக நம் வாழ்க்கை வாழ முடியாது என்றெல்லாம் சொல்வதால் சேரன் தன் முடிவை மாற்றி கொள்கிறார். பின் சோழன், இதை தான் நான் எதிர்பார்த்தேன். நான் அசிங்கப்பட்டது சந்தோஷம் தானே என்று தன்னுடைய அண்ணனிடம் சொல்கிறார். அதற்குப்பின் பாண்டியன், வானதி நியாபகமாக இருப்பதாக சொல்கிறார். உடனே சோழன், பாண்டியனை அழைத்துக் கொண்டு வானதி வீட்டிற்கு போகிறார். அங்கு வானதியை எப்படியோ வரவைத்து பாண்டியன் இடம் பேச வைக்கிறார் சோழன்.
சீரியல் ட்ராக்:
வானதி- பாண்டியன் இருவரும் பேசுவதை பார்த்து வானதி அண்ணன் அடித்து வானதியை இழுத்துக்கொண்டு வீட்டுக்குப் போகிறார். வீட்டில் அவருடைய அம்மா, அப்பா எல்லோருமே வானதியிடம் சண்டை போடுகிறார்கள். வானதி, நான் பாண்டியனை தான் திருமணம் செய்து கொள்வேன். அதில் எந்த மாற்றமும் இல்லை என்று சொல்கிறார். இருந்தாலும் வானதியை அவர் அம்மா அடித்துக் கொண்டிருக்கிறார். அவர் அப்பா எவ்வளவு சொல்லியுமே கேட்கவில்லை. இத்துடன் சீரியல் முடிகிறது